காம்பிர் சட்டமன்றத் தொகுதி
| காம்பிர் (N09) ஜொகூர் மாநில சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| Gambir (N09) State Constituency in Johor | |
| வாக்காளர்களின் எண்ணிக்கை | 29,434 (2022)[1] |
| முன்னாள் தொகுதி | |
| உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
| கட்சி | பாரிசான் நேசனல் |
| சட்டமன்ற உறுப்பினர் | சகிரிகான் ஜானி |
| முதல் தேர்தல் | 2004 |
| இறுதித் தேர்தல் | 2022 |
| பரப்பளவு | 219 சதுர கி.மீ. |
காம்பிர் சட்டமன்றத் தொகுதி (மலாய்: Bahagian Pilihan Raya Gambir; ஆங்கிலம்: Gambir State Constituency; சீனம்: 甘蜜州议席) என்பது மலேசியா, ஜொகூர், தங்காக் மாவட்டம், லேடாங் மக்களவைத் தொகுதியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி (N09) ஆகும்.
காம்பிர் சட்டமன்றத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து காம்பிர் சட்டமன்றத் தொகுதி, ஜொகூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது சகிரிகான் ஜானி (Sahrihan Jani) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.[2]
தங்காக் மாவட்டம்
[தொகு]தங்காக் மாவட்டம் (Tangkak District) என்பது ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு தங்காக் நகரம் தலைநகரமாக விளங்குகிறது. தங்காக் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 136 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 180 கி.மீ.; மலாக்கா நகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
தங்காக் மாவட்டம் முன்பு தன்னாட்சி பெற்ற ஒரு துணை மாவட்டமாக இருந்தது. மூவார் மாவட்டத்தின் வடமேற்கு பகுதியில் ஒரு பகுதியாக இருந்தது. மூவார் நகரத்தில் இருந்து முவார் நதியால் பிரிக்கப்பட்டு இருந்தது. 2008 சூன் 9-ஆம் தேதி, ஜொகூர் சுல்தானின் தலைமையில் நடைபெற்ற ஒரு விழாவில், தங்காக் பகுதி ஜொகூரின் 10-ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் தங்காக் மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ள லேடாங் மலையின் பெயரால் அந்த மாவட்டத்திற்கு லேடாங் மாவட்டம் என்று பெயரிடப்பட்டது.[3]
வாக்காளர் எண்ணிக்கை
[தொகு]காம்பிர் சட்டமன்றத் தொகுதியின் 2022-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை:[5]
- மலாயர் 59.0%
- சீனர் 36.5%
- இந்தியர் 3.78%
- பிற இனத்தவர் 0.58%
- சபா பூமிபுத்திரா 0.07%
- சரவாக் பூமிபுத்திரா 0.04%
30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, காம்பிர் சட்டமன்றத் தொகுதி 15 வாக்குச் சாவடிகளைக் கொண்டுள்ளது.[5][6]
வரலாறு
[தொகு]| சட்டமன்ற உறுப்பினர்கள் | |||
|---|---|---|---|
| சட்டமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
| செரோம், தங்காக் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
| 11-ஆவது | 2004–2008 | அசோகன் முனியாண்டி | பாரிசான் (மஇகா) |
| 12-ஆவது | 2008–2013 | ||
| 13-ஆவது | 2013–2018 | ||
| 14-ஆவது | 2018–2020 | முகிதீன் யாசின் | பாக்காத்தான் (பெர்சத்து) |
| 2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | ||
| 15-ஆவது | 2022–தற்போது வரை | சகிரிகான் ஜானி | பாரிசான் (அம்னோ) |
தேர்தல் முடிவுகள்
[தொகு]| வேட்பாளர் | கட்சி | வாக்குகள் | % | +/– | |
|---|---|---|---|---|---|
| சகிரிகான் ஜானி | பாரிசான் நேசனல் | 7,960 | 45.48 | NA | |
| முகமது சோலிகான் பத்ரி | பெரிக்காத்தான் நேசனல் | 4,814 | 27.50 | 27.50 | |
| நைம் சூஸ்ரி | மக்கள் நீதிக் கட்சி | 4,509 | 25.76 | 25.76 | |
| சுரையா சுலைமான் | உள்நாட்டு போராளிகள் கட்சி | 220 | 1.26 | 1.26 | |
| மொத்தம் | 17,503 | 100.00 | – | ||
| செல்லுபடியான வாக்குகள் | 17,503 | 96.95 | |||
| செல்லாத/வெற்று வாக்குகள் | 550 | 3.05 | |||
| மொத்த வாக்குகள் | 18,053 | 100.00 | |||
| பதிவான வாக்குகள் | 29,434 | 18,053 | 61.33 | ||
| Majority | 3,416 | 17.98 | NA | ||
| பாரிசான் நேசனல் கைப்பற்றியது | |||||
| மூலம்: [7] | |||||
மேலும் காண்க
[தொகு]- மலேசியத் தேர்தல் தொகுதிகள்
- மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல்
- மலேசிய மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் (2018–2023)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Malaysia, Department of Statistics. "Kawasanku | OpenDOSM". open.dosm.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2025-11-21.
- ↑ "Johor 14th General Election Malaysia (GE14 / PRU14)". The Star (Malaysia) (Petaling Jaya) இம் மூலத்தில் இருந்து 11 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180511081855/https://election.thestar.com.my/johor.html. (Note: Under the "Candidates & Results" heading, click on "State".)
- ↑ "Ledang set to become Johor's newest district". The Star Online. Star Media Group Berhad. 1 June 2008. Retrieved 24 July 2016.
- ↑ "2021 Johor State Election". chinapress.com. Retrieved 21 February 2026.
- ↑ 5.0 5.1 "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
- ↑ Portal Akta
- ↑ "Dashboard SPR".