காம்பினாஸ் உழவியல் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்பினாஸ் உழவியல் ஆராய்ச்சி நிலையம் (Agronomical Institute of Campinas) பிரேசிலின் சாவோ பாலோ மாநிலத்தில் உள்ள  காம்பினாஸ் நகரத்தை தலைமையிடமாகக் கொண்ட வேளாண் ஆராய்ச்சி நிறுவனமாகும்.  இது இலத்தீன் அமெரிக்காவில் உள்ள நிறுவனம் போன்ற பழமையான நிறுவனமாகும். 1892-ஆம் ஆண்டில் இது மாநில அரசின் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்பட்டது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்வதும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதும், பரிமாற்றம் செய்வதும் இந்நிலையத்தின் பணியாகும். பயிர் உற்பத்தி, நிலையான சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் சுற்றுப்புறச்சூழலின் தரத்தை நிலைப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Instituto Agronômico de Campinas - IAC Fazenda Santa Elisa Jardim Nossa Senhora Auxiliadora SP". Bendito Guia (in பிரேசிலிய போர்ச்சுகீஸ்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-09.

வெளி இணைப்புகள்[தொகு]

https://www.iac.sp.gov.br/