உள்ளடக்கத்துக்குச் செல்

காம்ட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காம்ட்டி (மராட்டி:कामठी) என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது காம்ட்டி வட்டத்தின் தலைநகரம் ஆகும். காம்ட்டி நகராட்சி மன்றமும், நாக்பூர் பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியும் ஆகும். காம்ட்டி பென்ச் மற்றும் கோலார் நதிகளுடன் கன்ஹான் நதியின் சங்கமத்தின் கீழ் அமைந்துள்ளது.[1]

வரலாறு

[தொகு]

1821 ஆம் ஆண்டில் பிரித்தானியர் கன்ஹான் கரையில் இராணுவ பாசறையை   அமைத்தபோது காம்ட்டி நிறுவப்பட்டது. அச்சமயம் காம்ட்டி முகாம்-டி என பெயரிடப்பட்டது. பின்னர் இந்த நகரம் வர்த்தகத்திற்கான மையமாக மாறியது. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடருந்து சேவையின் வருகையுடன் வர்த்தகம் குறைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் காம்ப்டிக்கு அருகிலுள்ள பகுதியில் இரும்புக் காலத்தின் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[2]

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, காம்ப்டியில் 86,793 மக்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் காணப்படுகின்றனர். காம்ட்டியின் சராசரி எழுத்தறிவு விகிதம் 76% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண்களில் எழுத்தறிவு 81%, வீதமாகவும், பெண்களின் எழுத்தறிவு 72% வீதமாகவும் காணப்பட்டது. காம்ப்டியில் மொத்த சனத்தொகையில் 13% வீதமானோர் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் ஆவார்கள்.[3]

மதம்

[தொகு]

காம்ட்டி நகரத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கின்றார்கள். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 43.18% வீதமும்[4], இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் 34.14% வீதமும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் 21.78% வீதமாகவும் காணப்படுகின்றார்கள். மேலும் காம்ப்டி நகரில் கிறித்துவ மதத்தை சார்ந்தவர்கள் 0.28% வீதமும், சமண மதத்தைச் சார்ந்தவர்கள் 0.18% வீதமும், சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் 0.21% வீதமும் உள்ளனர். 0.01% வீதமானோர் பிற மதம் என்றும், சுமார் 0.22% பேர் 'குறிப்பிட்ட மதம் இல்லை' என்றும் கூறியுள்ளனர்.

விளையாட்டு

[தொகு]

இந்த நகரம் பல தேசிய மற்றும் சர்வதேச காற்பந்து வீரர்களை உருவாக்கியுள்ளது. நாக்பூர் மாவட்டத்தில் 50% வீதத்திற்கும் மேற்பட்ட காற்பந்து வீரர்கள் காம்ட்டியைச் சேர்ந்தவர்கள்.

கல்வி

[தொகு]

தொண்ணூற்று நான்கு அங்கன்வாடி முன் தொடக்கப் பள்ளிகளும், எண்பது அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும், மற்றும் அரசு நிதியுதவி பெற்ற ஒரு உயர்நிலைப் பள்ளியும் காணப்படுகின்றன. 1965 ஆம் ஆண்டில் சேத் கெஸ்ரிமல் போர்வால் கல்லூரி அறிவியல், வர்த்தகம் மற்றும் கலை பீடங்களுடன் நிறுவப்பட்டது. எம்.எம். ரபானி உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி 1932 ஆம் ஆண்டில் ஷேக் உசேன் ரப்பானியால் நிறுவப்பட்டது. இது தேசிய விருது வென்றவர்களான யசீன் குதுசி மற்றும் இலியாஸ் குதூசி ஆகியோரை உருவாக்கியது. செயின்ட் ஜோசப் கான்வென்ட் பள்ளி 156 ஆண்டுகள் பழமையான பள்ளியாகும்.

இந்திரா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி ஸ்ரீ அர்ஜுன்லால் காஸ்ட்ரி அவர்களால் நிறுவப்பட்டது. இந்த நகரத்தில் மாக்சிம் என்ற கணினி கல்வி மையம் உள்ளது.

போக்குவரத்து

[தொகு]

காம்ட்டி தொடர்வண்டி நிலையம் மும்பை ஹவுரா வழித்தடத்தில் அமைந்துள்ளது. காம்ட்டி நகரம் தொடருந்து மற்றும் சாலை போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. காம்ட்டி தொடருந்து நிலையத்தில் இருந்து அருகிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும் பல தொடருந்துகள் சேவையில் உள்ளன.

பண்பாடு

[தொகு]

இங்கு வாழும் மக்கள் மராட்டி மொழியைப் பேசுகின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. "Kamptee", 1911 Encyclopædia Britannica, Volume 12, பார்க்கப்பட்ட நாள் 2019-11-14 {{citation}}: |volume= has extra text (help)
  2. "British museum". Archived from the original on 2015-03-18.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "Census". Archived from the original on 2004-06-16.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்ட்டி&oldid=3791806" இலிருந்து மீள்விக்கப்பட்டது