உள்ளடக்கத்துக்குச் செல்

காமில் பிளம்மாரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமில் ஃபிளம்மாரியன்
Camille Flammarion
பிறப்புநிக்கோலசு காமில் ஃபிளம்மாரியன்
(1842-02-26)பெப்ரவரி 26, 1842
மாண்டிகுனி இலெ இராய், ஃஅவுட் மார்ன்
இறப்புசூன் 3, 1925(1925-06-03) (அகவை 83)
ழூவிசி சுர் அர்கே
வாழ்க்கைத்
துணை
சில்வீ பெதௌக்சு-ஃஇயூகோ ஃபிளம்மாரியன்
கேப்ரியேல் இரினௌதாத் ஃபிளம்மாரியன்
"Telefonoscope" - La Fin du Monde, 1894

நிக்கோலசு காமில் ஃபிளம்மாரியன் (26ஃபிப்ரவரி 1842 – 3 ஜூன் 1925) ஒரு ஃபிரெஞ்சு வானியலாளரும் எழுத்தாளரும் ஆவார். இவர் வானியல், மக்கள் அறிவியல் நூல்கள் உட்பட 50 தலைப்புகளில் நூல்கள் எழுதியுள்ளார். பல அறிவியல் புனைவுப் புதினங்களையும் இயற்றியுள்ளார். மேலும் உளவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டு அத்துறை தொடர்பான தலைப்புகளிலும் எழுதியுள்ளார். இவர் 1882இல் இருந்து வானியல் இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் ஃபிரான்சில் ஒரு தனியார் வான்காணகமும் ழூவிசி-சுர்-அர்கேவில் வைத்திருந்துள்ளார்..

வாழ்க்கை

[தொகு]

காமில் பிளம்மாரியன் பிரான்சு நாட்டு ஃஅவுட் மார்ன் நகர மாண்டிகுனி இலே இராய் எனுமிடத்தில் பிறந்துள்ளார். இவர் பிளம்மாரியன் குழு வெளியீட்டகத்தி நிறுவனரான எர்னெசுட்டு பிளம்மாரியனின் (1846–1936) உடன்பிறப்பாவார். இவர் பிரன்சு வானியல் கழகத்தின் (Société astronomique de France) நிறுவனரும் முதல் தலைவருமாவார் இக்கழகம் BSAF (Bulletin de la Société astronomique de France) எனும் தனித்த வானியல் இதழை1887 ஆம் ஆண்டில் இருந்து வெளியிட்டுள்ளது. இது எட்டு இதழ்களையும் L'Astronomie எனும் இதழ் 13 இதழ்களையும் வெளியிட்டதும் 1895 ஜனவரி முதல் இரண்டு இணைந்து L’Astronomie எனும் பெயரில் அக்கழகத்தின் செய்தி இதழாக வெளிவரலானது. எனவே 1895 ஆம் ஆண்டின் இணைதொகுதி 9 என வெளியிடப்பட்ட்தால் L'Astronomie பெயரில் 9 முதல் 13 வரையில் ஐந்தாண்டுகள் இடைவெளியில் இருவேறு வெளிய்யீடுகள் அமைந்துவிட்டன.[1]

"பிளம்மாரியன் பொறிப்பு" முதலில் பிளம்மரியனின் L’Atmosphère இதழின் 1888 ஆம் ஆண்டில் வெளியானது. இவர் 1907 இல் கடந்த காலத்தில் புவியோடு தொடர்புகொண்ட செவ்வாயினர் வாழ்ந்ததை தான் நம்புவதாக எழுதினார்.[2] மேலும் இவர் 1907 இல் ஏழுவால் கொண்ட வால்வெள்ளி ஒன்று புவி நோக்கி வருவதாகவும் நம்பியுள்ளார்.[3] In 1910, for the appearance of ஹேலியின் வால்வெள்ளி, he believed the gas from the comet’s tail "would impregnate [the Earth’s] atmosphere and possibly snuff out all life on the planet."[4]

இளைஞராக பிளம்மாரியன் மேலையுலகை ஆட்டிப்படைத்த சார்லசு டார்வின், இலம்மார்க் எண்ணவோட்டங்களையும் கோட்பாடுகளையும் எதிர்கொண்டுள்ளார். அதேவேளையில் அப்போது ஐரோப்பா முழுவதும் எழுச்சிபெற்ற கிறித்துவ ஆவியான்மீகச் சிந்தனைக்கும் பல்வேறு இயக்கங்களின் கருத்தோட்டங்களுக்கும் ஆட்பட்டுள்ளார். இவர் "கதை சொல்லும் மறை வானியலாளராகக்" கருதப்பட்டுள்ளார். இவர் மேலும் இறப்புக்குப் பிந்தைய பிற உலக வாழ்க்கையை நம்புவதோடு இம்மைக்கும் மறுமைக்கும் உள்ள வேறுபாட்டை ஏற்காதவராகவும் வாழ்ந்துள்ளார்."[5]

இவர் 1806 முதல் 1863 வரை வாழ்ந்த ழீன் இரேனாடின் தாக்கம் மிகப்பெற்றவர். அவரது நூலான Terre at ciel (1854 ) கூறுவது போன்ற சமய நம்பிக்கை வாய்ந்தவராக உள்ளார். இதன்படி ஆவிகள் கிறித்தம் நம்புதல் போலவும் மற்ற பல்தெய்வ நம்பிக்கைகளைப் போலவும் ஆவிகளின் இடநகர்வை நம்பினார். இவர் ஆவிகள் உடலில் இருந்து பிரிந்து இறப்புக்குப் பின்னர் ஒவ்வொரு கோளாகச் செல்வதாகவும் அப்படி செல்லும்போது ஒவ்வொரு மறுபிறவியிலும் தொடர்ந்து மேம்பாடுறுவதாகவும் கருதியுள்ளார்.[6]

இவர் தன் நூல்களான Real and Imaginary Worlds (1864), Lumen (1887) ஆகியவற்றில் செரிப்பு, உயிர்ப்பு ஆகிய உயிர்வினைகளை இணைத்து வாழும் உணர்ச்சியுள்ள மரங்கள் பற்றியும் வியப்புதரும் இயல்புக்கு மாறான உயிரினங்கள் பற்றியும் விவரிக்கிறார். இந்த புறவெளி உயிரின நம்பிக்கையுடன், சமய நம்பிக்கையையும் பிணைத்து பிளம்மாரியன், ழீன் இரேனாடின் எழுதுகளின் தாக்கத்தால் ஆவிகளின் இடநகர்வை நம்புகிறார். இவர் கருத்துப்படி மாந்தன் வானகக் குடிமகன் ஆவான். அவன் செல்லும் மறு உலகங்களில் மாந்தப்பனிகளின் ஆய்வும் எண்ணப்பள்ளிகளும் அறுதி கதியை அணுகுவதற்கேற்ப அறிவைத் தன்மயமாக்கியபடி, மேலும் தொடர்ந்து விரிவடைந்து வளரும்.”[7]

இவரது உளவியல் ஆய்வுகளும் இவர் ஆக்கிய அறிவியல் புனைகதைகளை உருமாற்ரியுள்ளன. அவற்றில் இவர் தன் அண்ட உளமேம்பாட்டுக் கற்பனைகளை உலவ விட்டுள்ளார். தன் "Lumen" நூலில் ஒரு மாந்தப் பாத்திரம் ஒளியை விட வேகமாகச் செல்லவல்ல அயலுலக ஆவியைச் சந்திக்கிறது . இந்த ஆவி பல்வேறு உலகங்களில் படிமலர்ச்சி ஏணிப்படியான உயிரினங்களோடு வாழ்ந்து கடைதேறியதாகும். மற்றபடி இவரது புனைவில் நிகழ்கால படிமலர்ச்சி, வானியல், அறிவியல் கோட்பாடுகால் உள்ளது உள்ளபடியே காணப்படுகின்றன. Among other things, he believed that all planets went through more or less the same stages of development, but at different rates depending on their sizes.

அறிவியல், அறிவியல் புனைகதை, ஆவிநம்பிக்கை ஆகியவற்றின் இணைப்பு அவரது கதைகளைப் படித்த வாசகரை மட்டுமன்றி அதே எண்ணப்பாங்குள்ள அனைவரையும் குறிப்பாக பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களையும் ஈர்த்தது; "மிகப்பெரிய வணிக வெற்றியோடு, இவர் அறிவியல் முன்கணிப்பையும் அறிவியல் புனைவையும் இணைத்தது புத்தூழித் தொன்மங்களைப் படைத்தது. இதில் உயர்தகவு அயல் உயிரினங்களும் அண்டத்தில் கோள்விட்டு கோள் தாவி பிறவிதோறும் மேம்பாடுற்ற ஆவிகளும் அடங்கும். பிளம்மாரியனின் தாக்கம் பொதுமக்கள்பால் மட்டுமன்றி, இதேவகை ஆர்வமும் நம்பிக்கையும் கவிந்த எழுத்தாளர்களையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.[8] ஜார்ஜ் கிரிப்பித்தும் எட்கார் இரைசு பர்ரோவும் இருவருமே தம் எழுத்துகளில் இவரைக் குறிப்பிடுகின்றனர். இவரது Lumen நூலினை மொழிபெயர்த்த பிறையான் சுட்டாஃபில்ஃபோர்டு ஒலாஃப் சுட்டேஃபிடனும் வில்லியம் ஓப் ஆடுகுசனும் இவரால் தாக்கம் பெற்றுள்ளதாக வாதிடுகிறார். ஆர்த்தர் கானண்டாயிலின்.The Poison Belt எனும் புதினத்தில் பிளம்மாரியனின் கவலைகள் பொதிந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இதில் ஆல்லே வால்வெள்லியின் வால் நஞ்சு உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

குடும்பம்

[தொகு]

காமில் எர்னெசுட்டு பிளம்மாரியன், பெர்த் மார்ட்டின் பிளம்மாரியன் அகியவர்களின் உடன்பிறந்தவர். மேலும் செலிந்தா எனும் பெண்மணியின் தாய்மாமன். இவரது முதல் மனைவி சில்வீ பெதியௌக்சு- ஃஇயூகோ பிளம்மாரியன் ஆவார். இவரது இரண்டாம் மனைவி வாஅனியலாளரான கேப்ரியேல் இரினௌதாத் பிளம்மாரியன் ஆவார்.

இணை உள ஆய்வு

[தொகு]

பிளம்மாரியன் ஆவிநம்பிக்கை, இணைஉள ஆய்வு, மறுபிறவி ஆகியவற்றை அறிவியல் முறைப்படி அணுகி எழுதுகிறார்: " உண்மையை நோக்கிய தேடலில் அறிவியல் முறைவழியில் மட்டுமே முன்னேற்றம் காணமுடியும். விருப்பு, வெறுப்பற்ற பகுப்பாய்வின் இடத்தில் சமய நம்பிக்கைகளைக் கருதல் கூடாது. நாம் எப்போதுமே கானல்நீர் போன்ற பொய்ம்மையில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.". இந்நிலைப்பாட்டில் இவர் ஆவியியல் குறிமுறையைப் புரிதலில் பிரெஞ்சு கல்வியாளரும் ஆய்வாளருமான ஆலன் கார்தெக் நிலைப்பாட்டுக்கு அருகாக வருகிறார்.[9] இவர் ஆவி வந்து பேசுதல் பற்றி ஆய்வு செய்து எழுதுகிறார்: " ஆவி வந்து பேசுபவரின் நேர்மையை எள்ளளவும் நம்பமுடியாது என வருந்துகிறேன். அவர்கள் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்கின்றனர்."[10] என்றாலும் இவர் ஆவி வந்தேறல் உளவியல் நிகழ்வை நம்புகிறார். இவர் யூசபியா பல்லாடினோவுடன் ஆவிவந்து பேசுபவர் கூட்டங்களுக்குச் சென்றுள்ளார். அவரது சில ஆவிபேசும் நிகழ்வுகள் உண்மையானவை என வரிந்து கூறுகிறார். இவர் தன் நூலிலும் முகம் பட்டியில் பொதிந்துள்ள மேடையின் உளவாற்றலால் உருவாக்கிய ஒளிப்படங்களைத் தந்துள்ளார்.[11] Joseph McCabe did not find the evidence convincing. He noted that the impressions of faces in putty were always of Palladino's face and could have easily been made, and she was not entirely clear from the table in the levitation photographs.[12] இவரது அறியப்படாதது (The Unknown) (1900) எனும் நூலுக்கான மீள்பார்வையில் ஜோசப் ஜாசுட்ரோவ் தன் எதிர்மறைக் கருத்தை வழங்கியுள்ளார். அவர் " இந்நூலின் அடிப்படைப் பிழைகளாவன: சான்றுகளை ஏற்பதில் உய்ய மதிப்பீடு இல்லாமை, ஆய்வுச் சிக்கல் தரும் அளவையியல் நிலைமைகளின் தன்மையைப் பற்றிய புரிதல் இல்லாமை." எனக் கூறுகிறார்.[13] தானே மெய்மறந்தநிலையில் எழுதுதல் குறித்து ஆய்வு செய்த இவர் ஆழ்மனமே இதற்குக் காரணமெனக் குறிப்பிடுகிறார். மேலும் இங்கே ஆவி வந்து எழுதும் கருதுகோளுக்கான இடமேதும் இல்லை என்கிறார். . இறப்புக்குப் பின் ஆவி அல்லது உயிர் தனித்து வாழ்வதை நம்பினாலும் ஆவி வந்து பேசுவது அறிவியலாக நிறுவப்படவில்லை என மறுத்து எழுதுகிறார்.[14] Even though Flammarion believed in the survival of the soul after death he did not believe in the spirit hypothesis of Spiritism, instead he believed that Spiritist activities such as ectoplasm and levitations of objects could be explained by an unknown "psychic force" from the medium.[15] என்றாலும் இவர் சில இணையியல்பு அல்லது இயல்பிகந்த நிகழ்வுகளை தொலைவில் உணர்தல் முறையால் விளக்கவியலும் என நம்புகிறார்.[16]

இவர் தன் புதிரான உளவியல் விசைகள் (Mysterious Psychic Forces) (1909) எனும் நூலில் பின்வருமாறு எழுதுகிறார்:

ஆவி வருதல், வந்து பழிதீர்த்தல் குறித்து 1920 களில் இவர் தன் சில கருத்துகளை மாற்றிக் கொண்டுள்லார். இருந்தாலும் இவற்றில் ஆவி கருதுகோளுக்கு இடமில்லை என்றும் ஆவியியலில் ஆவிவந்து பேசுவோருக்கும் இடமில்லை என வற்புறுத்துகிறார்of mediumship in Spiritism. மேலும் இவர் தன் Les maisons hantées (வஞ்சம் தீர்க்கப்பட்ட வீடுகள்) எனும் நூலில் சில அரிய நேர்வுகளில் மட்டுமே ஆவிவந்து பழிதீர்த்திருக்கவியலும்; மற்றவை எல்லாமே உயிர்வாழ்பவரின் உள ஆற்றலால் ( மட்டும் நிகந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்".[18] இந்நூலைப் பார்வையிட்ட மாயவித்தையாளர் ஃஆரி ஃஅவுதினி எழுதுகிறார்; "இவ்வாய்மொழி தொகுப்புகளின் உறுதியை நிறுவும் சான்றேதும் இல்லாததால், இவை எல்லாமே புனவுகளின் தொகுப்பே."[19] இவர் 1923 இல் உளப்பான்மை ஆய்வுக் கழகத்துக்கு ஆற்றிய தன் தலைமை உரையில் இயல்புகடந்த உள நிகழ்வு பற்றிய தனது 60 ஆண்டு பட்டறிவைச் சுருக்கித் தொலவில் உணர்தல், ஈதரிய இரட்டைகள், கல்நாடாக் கோட்பாடு, அரிய விதிவிலக்காக ஆவிவந்து பழிவாங்குதல் ஆகியவற்றைத் தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.[20] இவர் இறையியல் கழகத்தின் (Theosophical Society) உறுப்பினரும் ஆவார்.[21]

பங்களிப்புகள்

[தொகு]

இவர்தான் நெப்டியூனின் நிலாவுக்கு திரைத்தன் எனவும் வியாழனின் நிலாவொன்றுக்கு அமால்தியா எனவும் முதன்முதலில் பெயரிட்டுள்ளார். என்றாலும் இப்பெயர்கள் பல பத்தாண்டுகளுக்கு வானியலில் வழக்கில் வரவில்லை.[22] பிளம்மாரியன் தன் இளமைக்கால அறிவியலார்வத்தால் பெரிதும் தாக்கமுற்றவர் என்று ஜார்ஜ் காமவ் கூறுகிறார்.[23]

தகைமைகள்

[தொகு]

இவர் நினைவாகப் பெயரிடப்பட்டவை

பணிகள்

[தொகு]
  • La pluralité des mondes habités (வாழ்நிலை உலகங்களின் பன்மைநிலை), 1862.
  • உண்மை, கற்பனை உலகங்கள், 1865.
  • இயற்கையில் கடவுள், 1866. Flammarion argues that the mind is independent of the brain.
  • Récits de l'infini, 1872 (ஆங்கில மொழிபெயர்ப்பு: ஈறிலிக் கதைகள்- 1873).[24]
  • விண்மீன்களின் தொலைவுகள், 1874. மக்கள் அறிவியல் மாதவிதழ்தொ.5, ஆக.1874. ஆங்கில மொழிபெயர்ப்பு: (இணையத்தில் உள்ளது)
  • L'atmosphère: météorologie populaire, 1888.
  • Astronomie populaire, 1880. நன்கு விற்பனையாகிய இவரது நூல்,ஆங்கில மொழிபெயர்ப்பு: மக்கள் வானியல் in 1894.
  • Les Étoiles et les Curiosités du Ciel, 1882. A supplement of the L'Astronomie Populaire works. An observer's handbook of its day.
  • Uranie (இணையத்தில் உள்ளது), 1889 (ஆங்கில மொழிபெயர்ப்பு: Urania - 1890).[25]
  • La planète Mars et ses conditions d'habitabilité, 1892.
  • La Fin du Monde (The End of the World), 1893 (translated into English as ஒமேகா: உலகின் கடைசி நாட்கள்- 1894. புவியை வால்வெள்ளியொன்று தாக்கி அழிக்கும் ஓர் அறிவியல் புதினம். இது அண்மையில் திரைப்படமாக்கப்பட்ட்து.1931, இயக்குநர்: ஏபல் கான்சு.
  • Stella (1897)
  • L’inconnu et les problèmes psychiques (ஆங்கில வெளியீடு: L’inconnu: அறியப்படாதது), 1900, இயல்பிகந்த உளப்பட்டறிவுகளின் திரட்டு.
  • புதிரான உளவியல் விசைகள்: ஐரோப்பிய வல்லுநர்களும் இவரும் செய்த ஆய்வு குறித்த உரை , 1907
  • இறப்பும் அதன் மாயமும்—உயிர் தனித்து நிலவலுக்கான எண்பிப்புகள்; தொகுதி 1—இறப்புக்கு முன்பு, 1921
  • ''இறப்பும் அதன் மாயமும்— உயிர் தனித்து நிலவலுக்கான எண்பிப்புகள் ; தொகுதி 2—இறப்பில், 1922
  • ''இறப்பும் அதன் மாயமும்— உயிர் அல்லது ஆவி தனித்து நிலவலுக்கான எண்பிப்புகள் ; தொகுதி 3— இறப்புக்குப் பின்பு, 1923
  • வஞ்சம் தீர்க்கப்பட்ட வீடுகள், 1924

மேற்கோள்கள்

[தொகு]
  1. Which l'Astronomie?
  2. "Martians Probably Superior to Us; Camille Flammarion Thinks Dwellers on Mars Tried to Communicate with the Earth Ages Ago". த நியூயார்க் டைம்ஸ். November 10, 1907. http://query.nytimes.com/gst/abstract.html?res=9E03E5D8103EE033A25753C1A9679D946697D6CF. பார்த்த நாள்: 2009-11-14. "Prof. Lowell’s theory that intelligent beings with constructive talents of a high order exist on the planet Mars has a warm supporter in M. Camille Flammarion, the well-known French astronomer, who was seen in his observatory at Juvisy, near Paris, by a த நியூயார்க் டைம்ஸ் correspondent. M. Flammarion had just returned from abroad, and was in the act of reading a letter from Prof. Lowell." 
  3. "Flammarion's Seven Tailed Comet". Nelson Evening Mail. 30 July 1907. http://paperspast.natlib.govt.nz/cgi-bin/paperspast?a=d&d=NEM19070730.2.39. பார்த்த நாள்: 2009-11-15. 
  4. "Ten Notable Apocalypses That (Obviously) Didn’t Happen". Smithsonian magazine. November 12, 2009 இம் மூலத்தில் இருந்து 2017-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170806105801/http://www.smithsonianmag.com/history/ten-notable-apocalypses-that-obviously-didnt-happen-9126331/. பார்த்த நாள்: 2009-11-14. "The New York Times reported that the noted French astronomer, Camille Flammarion believed the gas “would impregnate that atmosphere and possibly snuff out all life on the planet.”" 
  5. Scientific Mythologies: How Science and Science Fiction Forge New Religious Beliefs
  6. Reynaud, Jean (1806-1863) - The Worlds of David Darling
  7. "Camille Flammarion's Collection". Archived from the original on 2013-01-09. பார்க்கப்பட்ட நாள் 2016-06-24.
  8. Scientific Mythologies: How Science and Science Fiction Forge New Religious Beliefs
  9. in "Death and Its Mystery", 1921, 3 volumes. Translated by Latrobe Carroll (1923, T. Fisher Unwin, Ltd. London: Adelphi Terrace.). Partial online version at Manifestations of the Dead in Spiritistic Experiments பரணிடப்பட்டது 2009-07-06 at the வந்தவழி இயந்திரம்
  10. Pearson's Magazine. Volume 20. Issue 4. Pearson Publishing Company. 1908. p. 383
  11. Camille Flammarion. (1909). Mysterious Psychic Forces. Small, Maynard and Company. pp. 63-135
  12. Joseph McCabe. (1920). Is Spiritualism Based on Fraud?: The Evidence Given By Sir A. C. Doyle and Others Drastically Examined. London, Watts & Co. p. 57. "The impressions of faces which she got in wax or putty were always her face. I have seen many of them. The strong bones of her face impress deep. Her nose is relatively flattened by the pressure. The hair on the temples is plain. It is outrageous for scientific men to think that either "John King" or an abnormal power of the medium made a human face (in a few minutes) with bones and muscles and hair, and precisely the same bones and muscles and hair as those of Eusapia. I have seen dozens of photographs of her levitating a table. On not a single one are her person and dress entirely clear of the table."
  13. Joseph Jastrow. (1900). The Unknown by Camille Flammarion. Science. New Series, Vol. 11, No. 285. pp. 945-947.
  14. Alfred Schofield. (1920). Modern Spiritism: Its Science and Religion. P. Blakiston's Son & Co. pp. 32-101
  15. Camille Flammarion. (1909). Mysterious Psychic Forces. Kessinger Publishing. pp. 406-454. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0766141254
  16. Sofie Lachapelle. Investigating the Supernatural: From Spiritism and Occultism to Psychical Research and Metapsychics in France, 1853-1931. The Johns Hopkins University Press. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1421400136
  17. Lewis Spence. (2003). Encyclopedia of Occultism and Parapsychology. Kessinger Publishing. p. 337. ISBN பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1161361827
  18. James Houran. (2004). From Shaman to Scientist: Essays on Humanity's Search for Spirits. Scarecrow Press. p. 129. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0810850545
  19. ஆரி உடீனி. (1926). Haunted Houses by Camille Flammarion. Social Forces. Vol. 4, No. 4. pp. 850-853.
  20. Raymond Buckland. (2005). The Spirit Book: The Encyclopedia of Clairvoyance, Channeling, and Spirit Communication. Visible Ink Press. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1578592135
  21. The Moon Pool - Introduction by Michael Levy
  22. Camille Flammarion
  23. "George Gamow on Flammarion". Archived from the original on 2009-11-24. பார்க்கப்பட்ட நாள் 2016-06-24.
  24. ஈறிலிக் குறித்த ஃபிரெஞ்சுக் கதைகள் – வானுயிரியல் இதழ்
  25. The Net Advance of Physics: History and Philosophy: Camille Flammarion

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமில்_பிளம்மாரியன்&oldid=4025241" இலிருந்து மீள்விக்கப்பட்டது