காம்யக வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காமியக காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காம்யக வனம்[1][2] அல்லது காம்யக காடு (Kamyaka forest) சரசுவதி நதிக்கரையிலுள்ள குரு இராச்சியத்தின் மேற்கு எல்லையில் குருச்சேத்திரத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது. இக்காட்டினுள் காம்யக ஏரி என்று ஒரு ஏரி உள்ளது. தார் பாலைவனத்தின் தலைப்பகுதியில் திரினவிந்து ஏரி அருகில் இக்காடு அமைந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது[3]. பாண்டவர்கள், கங்கை நதிக்கரையிலுள்ள பிரமாணகோடியை கடந்து மேற்கு திசையில் குருச்சேத்திரத்தை நோக்கி சென்று யமுனை மற்றும் த்ரிஷத்வதி நதிகளை கடந்து சென்று, இறுதியாக சரசுவதி நதிக்கரையை அடைந்தனர். பறவைகள் மற்றும் மான்கள் நிறைந்த சரசுவதி நதிக்கரைக்கு துறவிகள் அடிக்கடி வந்து செல்லும் சிறந்த இடமான காம்யக வனத்தை கண்டனர். இங்கு பாண்டவர்கள் துறவிகளின் வசிப்பிடத்தில் வாழ்ந்தார்கள். பாண்டவர்களுக்கு தன் ரதங்களின் மூலம் அஸ்தினாபுரத்திலிருந்து காம்யகம் அடைய மூன்று நாட்கள் ஆகின.

முதல் வருகை[தொகு]

முதல் முறையாக காம்யகத்தில் வசித்தபோது, பீமன் இராட்சதர்கள் இடும்பன் மற்றும் கிரிமிரனை கொன்றார். காம்யக காட்டின் இரண்டாம் அரசராக பீமன் மாறினார். குரு தேச மக்கள் அக்காட்டை எளிதாக அணுகுவதாக இருந்தது. எனவே, அத்தேச மக்கள் அவர்களது அரசர் யுதிஷ்டிரரை அடிக்கடி சந்தித்துவிட்டு சென்றனர்.(யாதவர், சேதியர்,கேகயர் உட்பட). அதை தவிர்ப்பதற்காக அவர்கள் துவைதா காட்டுக்கு சென்றனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வருகை[தொகு]

இரண்டாவது முறையாக பாண்டவர்கள் துவைதா காட்டிலிருந்து காம்யகக் காட்டிற்கு வந்தார்கள். இந்த முறை வட இமயமலைக்கு சென்ற அர்ஜுனன் இல்லாமல் வாழ்ந்தார்கள். அவர்கள் ஐந்து ஆண்டுகள் காம்யகக் காட்டில் வாழ்ந்தார்கள். அப்பொழுது கடோத்கஜனும் அவர்களுடன் வாழ்ந்தான். அப்பொழுது முனிவர் வியாசர் மற்றும் முனிவர் லோமாசர் அவர்களை சந்தித்தார்கள்.

அங்கிருந்து அவர்கள் முனிவர் லோமாசர் வழிகாட்டுதலின்படி புனிதப் பயணம் மேற்கொண்டனர். இந்தியா முழுவதும் புனிதப் பயணம் முடித்துவிட்டு அவர்கள் குருச்சேத்திரத்திற்கு காம்யகக் காட்டிகுள் நுழையாமல் வந்து சேர்ந்தனர். பிறகு வட இமயமலைக்குச் சென்று அர்ஜுனனுடன் மூன்றாவது முறையாக காம்யகக் காட்டில் நுழைந்தனர். அப்பொழுது மழைக்காலம் என்பதால் சரசுவதி நதியில் நீர் பெருகி இருந்தது. இம்முறை யாதவர்களும் மற்றும் முனிவர் மார்க்கண்டேயரும் அவர்களை சந்திக்க வந்தனர். முனிவர் மார்க்கண்டேயர் அரியானாவின் குருச்சேத்திர மாவட்டத்திற்கு வடக்கில் உள்ள சரசுவதி நதியின் கிளை நதியான மார்க்கண்டய நதியை இருப்பிடமாக கொண்டவர். இம்முறை மலை மேலிருந்து உற்பத்தியாகும் யமுனை நதிக்கரையிலுள்ள காம்யக காட்டினுள் நுழைவதற்கு முன், ஓர் ஆண்டு காம்யகக் காட்டிற்கு வடக்கிலுள்ள விசாஹயுபா காட்டில் வசித்தனர். யமுனை நதி மலை மையப்பகுதியிலுருந்து உற்பத்தியாகிறது. மலை மையப்பகுதியில் நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அவர்கள் அங்கு வசித்தபோது பீமரைப் பாம்பு தீண்டியது.

நான்காவது வருகை[தொகு]

பாண்டவர்கள் துவைதா காட்டிற்கு சென்று மீண்டும் நான்காவது முறையாக ஒரு வருடம் எட்டு மாதங்கள் கழித்து காம்யகக் காட்டிற்கு வந்தனர். அவர்கள் அங்கு வசித்ததால் துவைதா ஏரி அருகில் வசித்த மான்களின் எண்ணிக்கை குறைந்தது. சிந்து இராச்சியத்தின் மன்னனான ஜெயத்ரதன் சால்வா இராச்சியத்திற்கு காம்யகக் காடு வழியாக சென்றான். அப்பொழுது திரௌபதியை கடத்த முயன்றான். ஆனால் பாண்டவர்கள் அம்முயற்சியை தோல்வியடையச் செய்தனர். வனவாசத்தின் பன்னிரண்டாவது வருடம் அவர்கள் காம்யகக் காட்டை என்றென்றும் விட்டு துவைதா காட்டிற்குச் சென்றனர். இவ்வாறாகவே பாண்டவர்கள் தனது 12 ஆண்டு வனவாசத்தை காம்யகக் காட்டிலும் துவைதா காட்டிலும் செலவழித்தனர். காம்யகக் காட்டிற்கும் துவைதா காட்டிற்கும் இடையில் பயணிகளால் பயன்படுத்தப்படும் சாலைகள், விவசாய நிலங்கள்,நீர் நிலையங்கள் இருந்தது.

காம்யகக் காட்டின் அரசர்கள்[தொகு]

(கடோத்கஜனின் மறைவிற்குப் பிறகு, பீமனே மீண்டும் அரசரானார்.)

மேற்கோள்கள்[தொகு]

  1. "'வெண்முரசு' – நூல் பன்னிரண்டு – 'கிராதம்' – 8". www.jeyamohan.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-20.
  2. பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/39. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.pdf/39. 
  3. Dr Mohan Lal Gupta:Rajasthan Jyankosh,Rajasthani Granthagar,Jodhpur,2008,ISBN 81-86103-05-8,p.219
"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்யக_வனம்&oldid=3869234" இலிருந்து மீள்விக்கப்பட்டது