காமாட்சி துரை ராஜு
காமாட்சி துரை ராஜு Kamache Doray Rajoo | |
|---|---|
சாபாய் சட்டமன்றத் தொகுதி | |
| பதவியில் 5 மே 2013 – 19 திசம்பர் 2022 | |
| முன்னையவர் | தேவேந்திரன் மூர்த்தி (பாரிசான்–மஇகா) |
| பின்னவர் | ஆறுமுகம் வீரப்பா பிள்ளை (பாரிசான்–மஇகா) |
| பெரும்பான்மை | 117 (2013) 495 (2018) |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 9 பெப்ரவரி 1970 கிரிக், பேராக், மலேசியா |
| குடியுரிமை | மலேசியர் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | ஜசெக (DAP) (–2023) சுயேச்சை (2023–தற்போது) |
| பிற அரசியல் தொடர்புகள் | பாக்காத்தான் ராக்யாட் (PR) (2008–2015) பாக்காத்தான் அரப்பான் (PH) (2015–2023) |
| பெற்றோர் |
|
| கல்வி | மகாத்மா காந்தி கலாசாலை சுங்கை சிப்புட்; பிலோமினா தமிழ்ப்பள்ளி ஈப்போ; ஈப்போ உயர்நிலைப்பள்ளி (1989) மலேசிய பன்னாட்டு பல்கலைக்கழகம் (2006) |
| பணி | அரசியல்வாதி |
| இணையத்தளம் | Kamache Doray Rajoo |
காமாட்சி துரை ராஜு (ஆங்கிலம்; மலாய்: Kamache Doray Rajoo) (பிறப்பு: 9 பிப்ரவரி 1970) என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; மே 2013 முதல் திசம்பர் 2022 வரை பகாங் மாநில சட்டமன்றத்தில், சாபாய் சட்டமன்றத் தொகுதியின் (N35) சட்டமன்ற உறுப்பினராக (MLA) பணியாற்றினார்.
அவர் 2015 முதல் 2023 வரை பாக்காத்தான் அரப்பான் (PH) கூட்டணியின் ஓர் அங்கமான ஜனநாயக செயல் கட்சியின் (DAP) உறுப்பினராக இருந்தார்.[1] 2023 முதல் ஒரு சுயேச்சை அரசியல்வாதியாக உள்ளார்.[1]
அவர் 2023-இல் ஜனநாயக செயல் கட்சியை விட்டு வெளியேறினார்.[2][3] `அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு` என்று மலேசிய சட்டமன்றத்தில் சத்தியம் செய்த முதல் தமிழ்ப் பெண் என மலேசிய அரசியல் வரலாற்றில் தடம் பதிக்கிறார்.
வாழ்க்கை
[தொகு]1970 பிப்ரவரி 9-ஆம் தேதி, பேராக் மாநிலத்தின் கிரிக் எனும் நகரில் பிறந்தார். தந்தையாரின் பெயர் துரைராஜு. அவர் மலேசியப் பொதுப் பணித் துறையில் ஒரு வாகன ஓட்டுனராக வேலை செய்தார். தாயாரின் பெயர் மாரியம்மாள். ஒரு குடும்பமாது.
இவர்களுக்குப் பத்தாவது குழந்தையாகப் பிறந்தவர் காமாட்சி துரைராஜு. ஆறு அண்ணன்கள்; மூன்று அக்காள்கள்; ஒரு தம்பி.
தேர்தல் முடிவுகள்
[தொகு]| ஆண்டு | தொகுதி | வேட்பாளர் | வாக்குகள் | % | எதிரணி | வாக்குகள் | % | மொத்த வாக்குகள் |
பெரும் பான்மை |
% | ||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| 2008 | N35 சாபாய் | காமாட்சி துரை ராஜு (ஜசெக) | 3,159 | 48.88% | தேவேந்திரன் மூர்த்தி (மஇகா) | 3,304 | 51.12% | 6,716 | 145 | 70.80% | ||
| 2013 | காமாட்சி துரை ராஜு (ஜசெக) | 4,439 | 50.67% | குணசேகரன் ராமன் (மஇகா) | 4,322 | 49.33% | 9,006 | 117 | 82.87% | |||
| 2018 | காமாட்சி துரை ராஜு (ஜசெக) | 4,374 | 44.75% | குணசேகரன் ராமன் (மஇகா) | 3,879 | 39.68% | 9,891 | 495 | 82.62% | |||
| கைருதீன் அப்துல்லா (பாஸ்) | 1,308 | 13.38% | ||||||||||
| கருணாநிதி தங்கவேல் (சுயேச்சை) | 145 | 1.48% | ||||||||||
| 2022 | காமாட்சி துரை ராஜு (ஜசெக) | 4,348 | 36.71% | ஆறுமுகம் வீரப்பா பிள்ளை (மஇகா) | 4,444 | 37.52% | 12,005 | 96 | 76.74% | |||
| நூருல் கோமர் தாலின் (பெர்சத்து) | 3,053 | 25.77% | ||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Calon PRU Kamache Doray Rajoo". pru.sinarharian.com.my.
- ↑ "Former Sabai state rep quits DAP, now campaigning for indie candidate in Penang". www.nst.com.my. 11 August 2023.
- ↑ "Former Pahang assemblyman quits DAP - News". MySinchew - Sin Chew Daily Malaysia Latest News and Headlines. 11 August 2023. Retrieved 1 February 2026.
- ↑ "Keputusan Pilihan Raya Umum Parlimen/Dewan Undangan Negeri" (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். Retrieved 4 June 2010. Percentage figures based on total turnout.
- ↑ "Malaysia General Election". undiinfo Malaysian Election Data. Malaysiakini. Retrieved 4 February 2017. Results only available from the 2004 Malaysian general election.
- ↑ "The Star Online GE14". The Star (Malaysia). Retrieved 24 May 2018. Percentage figures based on total turnout.
மேலும் காண்க
[தொகு]- ஆறுமுகம் வீரப்பா பிள்ளை
- பகாங் மாநிலத் தேர்தல் 2022
- மலேசிய தேர்தல் தொகுதிகள்
- மலேசியப் பொதுத் தேர்தல், 2022
- மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்