காமன் கூத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலையக காமன் கூத்து (ஆங்கிலம்:Malayaga Kaman Koothu) என்பது இலங்கையின் மலையகத் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றாகும்.[1]

வரலாறு[தொகு]

ஆரம்ப ஆங்கிலேயர் காலத்தில் தேயிலைத் தோட்டப்பயிர் செய்கை ஆரம்பிக்கப்பட்டது. இவை இலங்கையின் மத்திய பகுதியான மலைநாட்டில் ஆரம்பிக்கப்பட்டது. இத்தொழிலில் ஈடுபடுவதற்கு இலங்கையர் ஒருவரும் முன்வராத காரணத்தினால் இந்தியாவிலிருந்து தமிழ்த் தொழிலாளர்களை அழைத்து வரப்பட்டனர். [2]அப்படி அழைத்து வந்த மக்களுடன் கிராமியக் கலைகளில் வல்ல இசைக்கலைஞர்கள் மற்றும் ஆடல், கூத்துக் கலைஞர்களும் வந்திருக்கலாம். அவர்கள் இந்தியாவில் தாம் ஆடியும் பாடியும் வந்த கலைகளை இலங்கையில் பரப்பினர்.

காமனுடைய வரலாறு மிகவும் தொன்மையானது. காமனை வழிபடும் மரபும் தொன்மையானது. சிலப்பதிகாரம் மற்றும் கலித்தொகை ஆகிய நூல்களில் காமன் பண்டிகை பற்றிய குறிப்புக்களும், காமன் நோன்பு பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன. பெரும்பாலும் பெண்களே காம வேளை நோற்று வந்தனர். காம வேளை முக்கியமாக இரண்டு நோக்கங்களுக்காவே நோற்றனர். ஒன்று நல்ல கணவனை அடைய மற்றையது அடைந்த கணவனைப் பிரியாது மகிழ்வுடன் நெடுங்காலம் வாழ்தல். ஒவ்வொரு வருடமும் மாசி மாதத்து அமாவாசைக்கு பின் வரும் 3 ஆம் நாளிலிருந்து 30 நாட்கள் நோற்கப்படுகின்றன.

காமன் கூத்துக் கதை[தொகு]

காமன் கூத்து இரவு ஏழு மணி தொடக்கம் விடியும் வரை ஆடப்படும். மலையகத்தில் காணப்படும் காமன் கூத்து கதையின் படி சிவன் அக்கணது தவத்தை அழித்த பின்னர் பெருங்கோபத்தோடு இமயமலையில் தவமிருக்கின்றார். அதனால் தேவலோகம் அவதியுறுகின்றது. இந்த நேரத்தில் தேவர்கள் என்ன செய்வது என்று தவிக்கையில் இந்திரன் சிவனுடைய தவத்தைக் கலைக்கச் செய்யும்படி மன்மதனுக்கு தூதோலை அனுப்புகின்றார். இந்திரனின் கட்டளையின் ஏற்று மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்ததால் சிவனின் சினத்தினால் மன்மதன் மடிகிறான். பின்னர் சிவனின் மகளான ரதி தந்தை சிவனிடம் அழுது புலம்பி என்னுடைய கணவனின் செயலுக்கு வருந்தி கணவனை உயிர்ப்பிக்குமாறு பணிகிறாள். மூன்றாவது நாள் சிவன் மன்மதனுக்கு உயிர் கொடுத்ததாக ஐதீகம் உள்ளது. மன்மதன் தனது தவறை எண்ணி சிவனிடம் மன்னிப்பு கேட்கிறார். என்று கதை அமைகிறது. [3]

ஆதாரம்[தொகு]

  1. http://www.thinakaran.lk/2010/06/22/_art.asp?fn=n1006225
  2. de Silva, C.R. Sri Lanka - A History, pp.177, 181.
  3. "காமன் கூத்து விழா கோலாகலம்". தினகரன் (18-03-2014). பார்த்த நாள் மே 21, 2014.

வெளியிணைப்பு[தொகு]

மலையகப் பாரம்பரிய கலையான காமன் கூத்து வரலாறு

காமன் கூத்து 'பொகவந்தலாவை லெட்சுமி தோட்டம் மத்திய பிரிவு' ஓர் அறிமுகக் குறிப்பு

காமன் கூத்தினை நவீனமயப்படுத்தலாமா?

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமன்_கூத்து&oldid=2413377" இருந்து மீள்விக்கப்பட்டது