காமநாயக்கன் பாளையம் ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காமநாயக்கன் பாளையம் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம் வட்டத்தில் வதம்பச்சேரி ஊராட்சியில் உள்ள ஓர் பேரூராட்சி ஆகும். இதை 1997ம் ஆண்டு தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் 2007ம் ஆண்டு ஊராட்சி ஒன்றியமாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் வதம்பச்சேரி ஊராட்சியில் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த ஊராட்சி ஒன்றியமானது பல்லடம் சட்டமன்றம் மற்றும் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

வரலாறு[தொகு]

கொங்கு நாட்டில் அமைந்துள்ள இவ்வூர் 672 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஊராகும்.[சான்று தேவை] விஜய நகர ஆட்சியில் சில பகுதிகளில் நாயக்கர்கள் அரசப் பிரதிநியாக நியமிக்கப்பட்டனர். பல பகுதிகளில் நாயக்கர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தனர். இங்கு காம நாயக்கர்கள் இருந்ததாகவும் உடன் காமப் பெண்களும் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காமத்துடன் மோக ஆசைகள் இங்கு இருந்ததாக கல்வெட்டுக்கள் கூறப்படுகிறது. இவ்வூரின் பாவத்தை போக்கவே ஆண் பாதி பெண் பாதி கொண்ட அர்த்நாரீஸ்வரர் ஆலையம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனாலையே இவ்வூர் காம-வீரிய-நாயக்கன்-பாளையம் என பெயர்பெற்றது. கால போக்கில் பெயர் மருவுதலின் காரணமாக காம-நாயக்கன்-பாளையம் எனப் பெயர் பெற்றது.

பொருளாதாரம்[தொகு]

காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சுற்றி பல தொழில்கள் உள்ளது.குறிப்பாக

  • பஞ்சு நூல் தொழிற்சாலைகள் நிறைய அமைந்துள்ளன. மேலும் சைசிங் தொழிற்சாலைகளும் உள்ளது.
  • இங்கு நெசவுத் தொழில் சிறப்பாக நடக்கிறது. குறிப்பாக பட்டு புடவை நெசவுகள் அதிகமாக காணப்படுகின்றன.
  • இவ்வூரைச் சுற்றி பல ஏக்கர் விவசாய நிலமும் தென்னை விவசாயமும் செய்யப்படுகின்றது. மேலும் காய்கறி விவசாயமும் நடைபெறுகிறது.
  • இப்பகுதியில் கறி பண்ணை கோழிகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

மக்கள் தொகை[தொகு]

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரில் 8,453 பேர் உள்ளனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர். காமநாயக்கன் பாளையத்தின் சராசரி கல்வி அறிவு 83% ஆகும். இதில் 43% ஆண்களும் 40% பெண்களும் ஆவர். 13% மக்கள் 18 வயதினருக்கும் கீழ் உள்ளவர்கள் ஆவார்.[சான்று தேவை]

அண்ணா மறுமலர்ச்சி திட்டம்[தொகு]

அப்போதைய தமிழக முதலமைச்சரான கருணாநிதியின் ஆட்சியில் தான் காமநாயக்கன் பாளையத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டு வரபட்டன. அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் பல்வேறு குட்டை நீர் தேக்கங்கள் கட்டப்பட்டன. மேலும் நவீன தெரு விளக்குகளும் காமநாயக்கன் பாளையம் - அன்னூர் சாலையை மாவட்ட சாலையில் இருந்து, மாநிலச் சாலையாக தரம் உயர்த்தியும் அதற்கான நிதியையும் ஒதுக்கினார். நீர்த் தேங்கங்களின் மூலம் பல நூற்றுக்கணக்கான தென்னை மரங்களும் விவசாய நிலங்களும் பாசன வசதி பெற்றன. மேலும் அரசு உயர்நிலை பள்ளி கட்டப்பட்டன. மேல்நிலை பள்ளிக்கு இடம் ஒதுக்கியும் 2011 ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மேலும் கருணாநிதி ஆட்சியில் பரபிக்குளம் - ஆழியாறு திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி செய்யப்பட்டது.

போக்குவரத்து[தொகு]

கா.நா.பாளையம் நகரில் இருந்து சுற்று வட்டார அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளைய எல்லைக்குள் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரான திருப்பூர் ரயில் நிலையம் 28கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் 40கி.மீ தொலைவில் கோவை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து 37கி.மீ தொலைவில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அமைந்துள்ளது. மேலும் கா.நா.பாளையத்திலிருந்து திருச்சூர், குருவாயூர், பொள்ளாச்சி, நெகமம்,பல்லடம், திருப்பூர், சூலூர், கோயம்புத்தூர், பெருந்துறை,ஈரோடு, சங்ககிரி, சேலம், ஒசூர், பெங்களூர், கோபி,சத்தியமங்கலம்,கருமத்தம்பட்டி,சோமனூர்,அன்னூர்,புஞ்சை புளியம்பட்டி,உடுமலை,திருவண்ணாமலை,ஆனைமலை என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வந்து செல்கிறது.மேலும் கா.நா.பாளையம் நகரிலிருந்து சுற்று வட்டார சிறு கிராமங்களுக்கு இங்கிருந்து தான் பேருந்து செல்கிறது.

மேற்கோள்கள்[தொகு]