காமநாயக்கன் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காமநாயக்கன் பாளையம்
Kamanaicken Palayam Town
நூற்றாண்டு கண்ட நகரம்
அடைபெயர்(கள்): K.N.PALAYAM
காமநாயக்கன் பாளையம் Kamanaicken Palayam Town is located in தமிழ் நாடு
காமநாயக்கன் பாளையம் Kamanaicken Palayam Town
காமநாயக்கன் பாளையம்
Kamanaicken Palayam Town
இந்தியா, தமிழ்நாட்டில் அமைவிடம் (கொங்கு மண்டலம்)
ஆள்கூறுகள்: 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E / 10.98; 77.3ஆள்கூறுகள்: 10°59′N 77°18′E / 10.98°N 77.3°E / 10.98; 77.3
நாடு இந்தியா
மாநிலம்தமிழ் நாடு
மண்டலம்கொங்கு நாடு
மாவட்டம்திருப்பூர் மாவட்டம்
பெருநகரம்கோயம்புத்தூர்
அரசு
 • வகைநகரம்
 • நிர்வாகம்காமநாயக்கன் பாளையம் நகரம்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்12,378
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி குறியீட்டு எண்+91-04255
வாகனப் பதிவுTN-39, 42
காமநாயக்கன் பாளையம்
காமநாயக்கன் பாளையம்

காமநாயக்கன்பாளையம் (ஆங்கிலம்) Kamanaicken Palayam என்பது இந்தியாவின் தென்பகுதியில் தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள முக்கிய சந்திப்பு சிறுநகரம் ஆகும். இவ்வூரில் உள்ளாட்சி அமைப்புகளின் படி மொத்தம் 12 வார்டுகள் அமைந்துள்ளன. காமநாயக்கன் பாளையம் வட்டாரத்தில் பீஹார், உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஒரிசா என வடமாநிலத்தைச் சார்ந்தோர் கிட்டத்தட்ட 5000 மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். காமநாயக்கன் பாளையத்தைச் சுற்றி 15 மேற்பட்ட பஞ்சு நூல், காடாதுணி தொழிற்சாலைகள், விசைத்தறிகள் உள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சூலூர் தொகுதியில் 36,000 வாக்கு வித்தியாசத்தில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ திரு கனகராஜின் சொந்த ஊரும் காமநாயக்கன் பாளையம் ஆகும். தற்போது சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. கந்தசாமி இதே ஊரைச் சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காற்றாடிகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் பணிகளும் அதிகளவில் நடைபெறுகிறது. காற்றாடியின் வட்டாரத் தலைமை அலுவலகம் இங்கு செயல்படுகிறது.

காமநாயக்கன் பாளையம் சந்திப்பு[தொகு]

காமநாயக்கன் பாளையம் சந்திப்பு என்பது நான்கு சாலைகளின் சந்திப்பு ஆகும். இவ்வூர் வழியாகத்தான் பொள்ளாச்சி, கேரள மாநில வாகனங்கள் செல்ல சாலை அமைந்துள்ளது. இதனால் இது, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் மிக முக்கியமான சாலை ஆகும். காமநாயக்கன் பாளையம் முதல் பல்லடம் வழியாக அவினாசி செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் பொள்ளாச்சி செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் அன்னூர் செல்ல ஒரு சாலையும், காமநாயக்கன் பாளையம் முதல் வாவி பாளையம் வழியாக உடுமலைப்பேட்டை செல்ல ஒரு சாலையும் என நான்கு மிக முக்கியமான சாலைகள் உள்ளன. இதனாலையே நால்ரோட்டில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இவற்றை எல்லாம் கடந்து நூற்றாண்டு காணும் நகரமாக தற்போது உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்மொழியப்பட்ட காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம்[தொகு]

காமநாயக்கன் பாளையம் என்பது வளர்ந்து வரும் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் இங்குள்ள மக்கள் தங்களது அரசு சார்ந்த பிரச்சினைகளுக்கு பல பகுதிக்கு அலைகலைக்கப்படுகின்றனர். காமநாயக்கன் பாளையம் காவல் வட்டத்தில் பல்லடம் ஒன்றியத்தின்

பொங்கலூர் ஒன்றியத்தின்

ஆகிய ஊராட்சிகள் அமைந்துள்ளது. ஆனால் இப்பகுதிக்கு உட்பட்ட மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு ஒரு புறமும், காவல்நிலைய தேவைகளுக்கு ஒரு புறமும், தாலுகா அலுவலகங்களுக்கு ஒரு புறமும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பல்லடத்தில் நாளுக்கு நாள் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல் மக்களை முகம்சுழிக்க வைக்கும் நிலையில் உள்ளது. ஆனால் இந்த காமநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டால் மக்களுக்கு தங்களது சிரமம் மிகவும் குறையும். காவல் நிலையம் , வட்டார வளர்ச்சி பணிகள் என ஓரளவு தேவைகளை மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் மேற்கண்ட ஊராட்சிகள்யாவும் ஒன்று முதல் பதினைந்து கிலோமீட்டர்குள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இது எப்போது தான் நிறைவேறும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஒரு ஏக்கமாக காணப்படுகிறது.

சிறப்புக்கள்[தொகு]

காமநாயக்கன் பாளையம் அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் இப்பகுதியில் சிறப்பு பெற்றது. மேலும் மாரியம்மன், வடுக பாளையம் மாகாளியம்மன் கோவில்களும் சிறப்பு பெற்றவை.

  • இவ்வூரில் கிட்டத்தட்ட 98 ஆண்டுகள் (சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக) செயல்படும் வாரச்சந்தை மிகவும் சிறப்பு.
  • காமநாயக்கன் பாளையம் காவல் நிலையமானது, ஆங்கிலேய ஆட்சியில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு.

காவல் நிலையம்[தொகு]

காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆங்கிலேய அட்சி காலத்தில் ராணி எலிசபெத் மஹாராணியால், திறந்து வைக்கப்பட்டது. இந்த காவல் நிலையம் 15.05.1926 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. தற்பொழுது 93 வருடங்கள் ஆகின்றன. தமிழக காவல்துறை வரலாற்றிலேயே மிகப்பழமையான காவல் நிலையம், காமநாயக்கன் பாளையம் காவல் நிலையம் ஆகும்.

வசதிகள்[தொகு]

அரசு கால்நடை மருத்துவமனை , காமநாயக்கன் பாளையம்.
அரசு கால்நடை மருத்துவமனை, காமநாயக்கன் பாளையம்.

இவ்வூருக்கு

  1. வாரச்சந்தை,
  2. சாரதா திரையரங்கு, இந்த திரையங்கில் ஆன்லைன் புக்கிங் செய்ய www.justtickets.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யலாம்
  3. எச்சரிக்கை விளக்கு,
  4. கடை வீதி,
  5. பல்பொருள் அங்காடி,
  6. வங்கிகள்,
  7. பழைய நூலகம்,
  8. புதிய நூலகம் ஆகிய வசதிகளும் உள்ளன. இவ்வூரில் உள்ள வாரச்சந்தை 98 வருட மிகவும் பழமையான வாரச்சந்தை ஆகும். இந்த வாரச்சந்தை ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது.

2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[2]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 2305
சிறு மின்விசைக் குழாய்கள் 15
கைக்குழாய்கள் 42
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 8
உள்ளாட்சிக் கட்டடங்கள் 6
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4
ஊரணிகள் அல்லது குளங்கள் 5
விளையாட்டு மையங்கள் அம்மா பூங்கா 1
சந்தைகள் 1
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 32
ஊராட்சிச் சாலைகள் 15
பேருந்து நிலையங்கள் காமநாயக்கன் பாளையத்தில் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 2

மக்கள் தொகை[தொகு]

2001 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி இவ்வூரில் 12,378 பேர் வசிக்கின்றனர். இதில் 53% ஆண்களும் 47% பெண்களும் வசிக்கின்றனர்.

போக்குவரத்து[தொகு]

இவ்வூரிலிருந்து 28 கி.மீ. இல் திருப்பூரில் தொடர்வண்டி நிலையமும், 38 கி.மீ. தொலைவில் கோவை சர்வதேச விமான நிலையம் உள்ளது. மேலும் காமநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் இருந்து பொள்ளாச்சி, திருச்சூர், குருவாயூர், பல்லடம், திருப்பூர், கோபிச்செட்டி பாளையம், குன்னூர், கோயம்புத்தூர், பெங்களூர், தர்மபுரி, ஒசூர், உடுமலை, ஈரோடு, சேலம், நகரப் பேருந்துகள் என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதிகள் உள்ளன. திருப்பூர்-பொள்ளாச்சி வழிதடத்தில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை என பேருந்து போக்குவரத்து உள்ளது. சிறப்பு தினங்களில் ஆனைமலை,திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் உள்ளன. இப்பேருந்துகள் பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறனது.

அரசியல்[தொகு]

இவ்வூர் இரு மாவட்டங்களுக்கு இடையில் உள்ளதால் 50% பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் 50% சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் மக்கள் வாக்களிக்கின்றனர்.

வங்கிகள்[தொகு]

  1. ஐசிஐசிஐ வங்கி கிளை சத்தி மெயின் ரோடு, நால்ரோடு சிக்கன் அருகில்,காமநாயக்கன் பாளையம்
    ஐசிஐசிஐ வங்கி கிளை சத்தி மெயின் ரோடு, நால்ரோடு சிக்கன் அருகில்,காமநாயக்கன் பாளையம்
    ஐசிஐசிஐ வங்கி
  2. ஸ்டேட் பாங்கு ஆப் இந்தியா
  3. பாங்கு ஆப் பரோடா
  4. வடுகபாளையம் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு வங்கி

தானியிக்க வங்கி இயந்திரம் (ATM)[தொகு]

  1. ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம்
  2. கரூர் வைஸ்யா வங்கி ஏடிஎம்
  3. ஹெச்டியை வங்கி ஏடிஎம்
  4. ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம்

அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  1. காமநாயக்கன் பாளையம் வடக்கு
  2. காமநாயக்கன் பாளையம் தெற்கு
  3. காமநாயக்கன் பாளையம் மேற்கு
  4. வி. வடுகபாளையம்
  5. காந்தி நகர்
  6. நல்லிகவுண்டம்பாளையம்
  7. எம். ஜி.ஆர் நகர்
  8. சௌண்டேஸ்வரி நகர்
  9. கணபதி நகர்
  10. வி.மேட்டூர்
  11. கே. கிருஷ்ணாபுரம்
  12. கந்தம்பாளையம்
  13. மூகாம்பிகை நகர்
  14. சக்தி நகர்
  15. மத்தநாயக்கன்பாளையம்
  16. செங்கோடம்பாளையம்
  17. திருமாண்ட கவுண்டன் பாளையம்
  18. எம். ஊத்துக்குளி
  19. ஆதி திராவிடர் காலணி
  20. புளியம்பட்டி
  21. சின்ன வதம்பச்சேரி
  22. பெரிய வதம்பச்சேரி
  23. ஓடக்கல்பாளையம்
  24. நல்லூர் பாளையம்
  25. கவுண்டம் பாளையம்
  26. மின்சார வாரிய வீதி

ஆகிய பகுதிகளை இவ்வூர் உள்ளடக்கி உள்ளது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

  • கொங்குராஜா தொடக்கப்பள்ளி
  • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
  • அரசு உயர்நிலை பள்ளி
  • அங்கன்வாடி மையங்கள் இரண்டு
  • ஸ்கேட் தொழில்நுட்ப கல்லூரி

ஆதாரங்கள்[தொகு]

[3] http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/wicket/page?3 [4]

  1. [1]
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; panchayat என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.toptamilnews.com/aiadmk-leader-arrested-for-selling-counterfeit-liquor-at-home/amp/&ved=2ahUKEwi51pfts6vyAhXM73MBHfEYDhI4ChAWegQIBBAB&usg=AOvVaw3xZNqcUfqtt3XxlloKncfS%7Cகள்ளச்சாராயம் காய்ச்சிய சுந்தர் கைது
  4. https://www.go.ogle.com/url?sa=t&source=web&rct=j&url=http://www.kotravainews.com/news/roadoram-kottappadum-kuppaigal-palladam/&ved=2ahUKEwjBqvnegZryAhWWcn0KHSw7C0wQFnoECBUQAg&usg=AOvVaw0u-pYavNyMXFW_T1vSjLO6
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமநாயக்கன்_பாளையம்&oldid=3323497" இருந்து மீள்விக்கப்பட்டது