உள்ளடக்கத்துக்குச் செல்

காமத்தான் விழா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமத்தான் விழா
Pesta Kaamatan
Bobohizan and their apprentices
பெனாம்பாங் பகுதியில் காமத்தான் விழா
பிற பெயர்(கள்)(டூசுன் மொழி: Tadau Kaamatan[1][2]
கடைப்பிடிப்போர்கடசான், டூசுன் மக்கள், மூருட்டு மக்கள் (கலிமாரான்), உருங்குசு, லுன் பாவாங் மக்கள், பாயித்தான், சீன-பூர்வீக மக்கள்
கொண்டாட்டங்கள்குடும்பம் மற்றும் பிற சமூக ஒன்றுகூடல்கள்
அனுசரிப்புகள்உண்டுக் நிகடாவ் (மகளிர்) ரந்தாவி தவந்தாங் (ஆண்கள்) சண்டி தவானுஸ் (மணமான பெண்கள்), ருண்டுக் தடாவ் தசானக் (குழந்தைகள்)
தொடக்கம்30 மே
முடிவு31 மே
நாள்மே 30, மே 31
நிகழ்வுஆண்டுதோறும்
முதல் முறை1960 வடக்கு போர்னியோ[3]
தொடர்புடையனகாவாய் டாயாக், கலிமாரான், மகாகவ்

காமத்தான் விழா (மலாய்; Pesta Kaamatan; ஆங்கிலம்: Kaamatan; கடசான் டூசுன்: Tadau Kaamatan) என்பது மலேசியா, போர்னியோ தீவில் உள்ள சபா மாநிலத்திலும், லபுவான் பகுதியிலும் ஆண்டுதோறும் மே மாதத்தில் கொண்டாடப்படும் பழங்குடி மக்களின் முதன்மையான அறுவடைத் திருவிழாவாகும்.[4][5][6] கடசான்-டூசுன் மொழியில் அறுவடை எனப் பொருள்படும் தொமோத் (Tomot) என்ற சொல்லில் இருந்து இத்திருவிழாவின் பெயர் உருவானது. வேளாண்மையை முதன்மையாகக் கொண்டிருந்த போர்னியோ பழங்குடி மக்களின் வாழ்வியலோடும் ஆன்மீகத்தோடும் இத்திருவிழா அணுக்கமான தொடர்புடையது.

கடசான் மக்கள், டூசுன் மக்கள், மூருட்டு மக்கள், ருங்குஸ் மக்கள், லுன் பாவாங் மக்கள், பாயித்தான் மக்கள், சபா சீனர் பழங்குடி மக்கள்; ஆகிய இனக் குழுக்களால் ஆண்டுதோறும் மே மாதத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. அத்துடன் மலேசியாவின் மற்ற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்த டூசுன் மக்கள் கடசான் பழங்குடி மக்களாலும்[7][8] இந்த விழா சிறிய பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு கலைச் சித்தரிப்புகளுடன்; குடும்பம் மற்றும் பல்வேறு சமூகக் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பின் வழியாகவும் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் உண்டுக் நிகடாவ் (மகளிர் அழகுப் போட்டி) (Unduk Ngadau); மற்றும் ரந்தாவி தவந்தாங் (Randawi Tavantang) (ஆண்கள் அழகுப் போட்டி);[9][10]சண்டி தவானுஸ் (Zandi Tavanus) (மணமான பெண்களுக்கான போட்டி); ருண்டுக் தடாவ் தசானக் (Runduk Tadau Dazanak) (குழந்தைகளுக்கான போட்டி); சுமாசாவ் (Sumazau) (நடன நிகழ்ச்சி), சுகண்டோய் பாட்டுப் போட்டி (Sugandoi); மற்றும் பிற கலை கைவினைக் கலை நிகழ்ச்சிகளும்[11] பிற பல கலைச் செயல்பாடுகளும் இந்தத் திருவிழாவில் இடம்பெறுகின்றன.

தோற்றமும் ஆன்மீகப் பின்னணியும்

[தொகு]
உணவுக் கடை நுழைவாயிலில் காமத்தான் வாழ்த்துப் பதாகை (2024)

காமத்தான் விழாவின் பின்னணியில் சபா பழங்குடி மக்களால் நம்பப்படும் ஒரு புனிதமான தொன்மவியல் கதை உள்ளது.[12] பழங்குடி மக்களின் பாரம்பரிய மொமோலியன் (Momolian) சமய நம்பிக்கையின்படி, இந்த உலகத்தைப் படைத்த தெய்வமான கினோயிங்கான் (Kinoingan); ஒரு கடுமையான வறுமைக் காலத்தில் தன் மக்களைக் பசிப் பிணியிலிருந்து காப்பாற்ற, கினோயிங்கான் தெய்வம் தன்னுடைய ஒரே மகளான உமினோடுன் (Huminodun) என்பவரைப் பலி கொடுத்தார்[9] என்று பழங்குடிகள் நம்புகிறார்கள்..

பெண் மகள் உமினோடுன் உடலின் பாகங்கள் நிலத்தில் விழுந்து நெற்பயிர்களாகவும்; மற்ற உணவுப் பொருட்களாகவும் மாறின என்றும் பழங்குடி மக்களால் நம்பப்படுகிறது. இதனால், நெல்லுக்குள் இருக்கும் அந்தப் பெண்ணின் ஆன்மாவை அவர்கள் பம்பாராயோன் (Bambarayon அல்லது Bambaazon) என்று அழைக்கின்றனர்.[13][14] உமினோடுன் பெண் தெய்வத்திற்கு நன்றி செலுத்துவதற்காகவும், அடுத்து வரும் ஆண்டில் நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் எனும் இறை வேண்டுதலுக்காகவும் காமத்தான் விழா கொண்டாடப்படுகிறது.

முக்கிய சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள்

[தொகு]
பெனாம்பாங் மாவட்டத்தில் உள்ள ஒருமைப்பாட்டு மண்டபம் (2012)

முற்காலத்தில் இத்திருவிழா முற்றிலும் ஆன்மீகச் சடங்குகளுடன் தொடர்புடையதாக இருந்தது. தற்போது இது சபா மாநிலத்தின் ஒட்டுமொத்தப் பண்பாட்டு அடையாளமாகவும், சுற்றுலா ஈர்ப்பு நிகழ்ச்சியாகவும் மாறியுள்ளது[15].

  • மகாவாவ் சடங்கு (Magavau): இது நெல் ஆன்மாவை அமைதிப்படுத்துவதற்காகச் செய்யப்படும் மிக முக்கிய சடங்காகும். போபோகிசான் (Bobohizan) எனப்படும் பெண் பூசாரிகளால் பாரம்பரிய வேதங்கள் ஓதப்பட்டு, வயல்வெளிகளில் இந்தச் சடங்கு நடத்தப்படுகின்றது.[16].
  • உண்டுக் நகடாவ் (Unduk Ngadau): இந்தத் திருவிழாவின் உச்சக்கட்ட ஈர்ப்பு என்பது சபா மாநில அளவிலான பாரம்பரிய அழகுப் போட்டியாகும். மக்களின் பசியைப் போக்கத் தன்னுயிரைத் தியாகம் செய்த உமினோடுன் தேவதையின் நினைவாகவும்; அவளுடைய அழகைப் போற்றும் வகையிலும் இளம் பெண்கள் பாரம்பரிய உடைகளுடன் அழகுப் போட்டியில் பங்கேற்பர்[17].
  • பாரம்பரிய நடனங்கள்: இக்கொண்டாட்டத்தின் போது கைகளின் அசைவுகள்; பறவைகள் பறப்பதைப் போல் சித்தரிக்கும் சுமசாவ் (Sumazau) நடனமும்; மூங்கில் கட்டைகளைக் கொண்டு ஆடப்படும் மகுனதிப் (Magunatip) மூங்கில் நடனமும் பரவலாக உள்ளன.

காட்சியகம்

[தொகு]

சபா மாநில பழங்குடி மக்கள்

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Pesta Kaamatan" [Kaamatan Festival]. Sabah State Library (in மலாய்). Archived from the original on 3 August 2022. Retrieved 8 May 2025.
  2. "Harvest Festival (Pesta Kaamatan)". Sabah Tourism. Archived from the original on 8 May 2025. Retrieved 8 May 2025.
  3. Sabah Tourism Promotion Corporation 1996.
  4. "Events Calendar [Public Holiday]". Government of Sabah. 2025. Archived from the original on 22 February 2025. Retrieved 28 April 2025.
  5. "State of Sabah [Holidays Ordinance] (Sabah Cap. 56)]" (PDF). The State Attorney-General's Chambers of Sabah. 2010. p. 4. Archived (PDF) from the original on 28 April 2025. Retrieved 28 April 2025.
  6. "Jadual Hari Kelepasan Am Persekutuan 2025" [Federal General Holiday Schedule 2025] (PDF). Cabinet, Constitutional and Intergovernmental Relations Division, Prime Minister's Department, Malaysia (in மலாய்). 2025. Archived (PDF) from the original on 27 April 2025. Retrieved 27 April 2025.
  7. Roslyna, Geena (2 May 2025). "Kaamatan: A Celebration of Culture, Spirit & Community". Hello Sabah இம் மூலத்தில் இருந்து 27 October 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20251027074645/https://hellosabah.com/kaamatan-a-celebration-of-culture-spirit-community/.
  8. "Kaamatan Perth 2026". eventbrite. 13 June 2026. Archived from the original on 30 July 2026. Retrieved 30 July 2026.
  9. 1 2 "Kaamatan, A Celebration of Culture". Sabah Tourism. Archived from the original on 24 April 2025. Retrieved 24 April 2025.
  10. Anjumin, Ersie (17 November 2021). "Mr Kaamatan to promote cultural uniqueness". New Straits Times இம் மூலத்தில் இருந்து 13 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250513060538/https://www.nst.com.my/news/nation/2021/11/746072/mr-kaamatan-promote-cultural-uniqueness.
  11. "Perayaan Rasmi [Pesta Kaamatan]" [Official Celebration [Kaamatan Festival]]. Penampang Municipal Council (in மலாய்). Archived from the original on 7 May 2025. Retrieved 8 May 2025.
  12. "Kaamatan: How it's celebrated today and why it's a highlight". Borneo Eco Tours. 9 June 2023. Archived from the original on 26 April 2025. Retrieved 26 April 2025.
  13. Traditions Of Pesta Kaamatan - Universiti Putra Malaysia (UPM)
  14. "11 Things About Kaamatan And Gawai You Should Know Before Going To Sabah Or Sarawak". Says.com. 29 May 2017 இம் மூலத்தில் இருந்து 7 May 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250507231853/https://says.com/my/lifestyle/malaysians-need-to-know-about-kaamatan-and-gawai. பார்த்த நாள்: 4 February 2019.
  15. Malaysia Truly Asia - Kaamatan Festival
  16. 5 Things to know about Sabah’s Harvest Festival - Buro247
  17. Kaamatan Festival: A Celebration of Gratitude - Sabah State Library

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காமத்தான்_விழா&oldid=4633390" இலிருந்து மீள்விக்கப்பட்டது