காமதேனு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காமதேனு பல்கலைக்கழகம்
Kamdhenu University
வகைபொது
உருவாக்கம்2009
துணை வேந்தர்என். எச். கெலவாலா
அமைவிடம், ,
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்ku-guj.org

காமதேனு பல்கலைக்கழகம் (Kamdhenu University) என்பது இந்தியாவின் குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ள விவசாய பல்கலைக்கழகமாகும். இது அரசு சார்ந்த நிறுவனமாகும். இது குஜராத் அரசின் 2009ஆம் ஆண்டு காமதேனு பல்கலைக்கழக சட்டத்தால் நிறுவப்பட்டது. இது பால் பண்ணை அறிவியலில் கவனம் செலுத்துகிறது.

வரலாறு[தொகு]

1984ஆம் ஆண்டு குசராத்தில் கால்நடை பல்கலைக்கழகம் ஒன்றைப் பால் பொருட்கள் உற்பத்தியினை முன்னிலைப்படுத்தி நிறுவுவதற்கான முன்மொழிவினை, வர்கீஸ் குரியன் குசராத் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக பணியாற்றியபோது முடிவு செய்யப்பட்டது. ஆனால் இவர் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தபோது அந்த திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் இரண்டாவது முறையாகக் குஜராத் அரசு 1996-97ஆண்டில் எடுத்த நடவடிக்கையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆனால் குஜராத் முதல்வராக நரேந்திர மோதி பதவிவகித்தபோது அவரின் ஆதரவோடு 2009ஆம் ஆண்டு காமதேனு பல்கலைக்கழக சட்டம் மூலம் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.[1] எம். சி. வர்சனேயா இதன் முதல் துணைவேந்தராக 2014ல் நியமிக்கப்பட்டபோது தான், பல்கலைக்கழகம் முறைப்படிச் செயல்படத் தொடங்கியது.[2]

இப்பல்கலைக்கழகம் கால்நடை மற்றும் விலங்கு அறிவியலில் கவனம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டபோது, இரண்டு கல்லூரிகள் மட்டுமே இதன் கீழ் செயல்பட்டன. இரண்டுமே பால் பண்ணை அறிவியல் தொடர்பான கல்லூரிகளாகும். 2017ஆம் ஆண்டில், இது கால்நடை மற்றும் மீன்வள அறிவியல் கல்லூரிகளை மாநிலத்தின் பிற பல்கலைக்கழகங்களிலிருந்து மாற்றுவதற்கான முறையான கோரிக்கைகளுக்கு வழிவகுத்தது. இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம் (ஐ.சி.ஏ.ஆர்) அங்கீகாரத்தைப் பெறுவதற்கும் இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது. இருப்பினும், இந்த கோரிக்கைக்கு மற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர். இது பல்கலைக்கழகத்தைக் கலைப்பதற்கான பரிந்துரைக்கும் வழிவகுத்தது. 2018ஆம் ஆண்டில் என்.எச்.செலவாலா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக[3] பதவியேற்றபின் செப்டம்பர் 2020இல் 11 கல்லூரிகளைப் பல்கலைக்கழகத்திற்கு மாற்றுவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Kamdhenu University". Kamdhenu University. Archived from the original on 23 ஜூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "New Universities Brief Profile". IAUA News 15 (1). January 2015. http://www.iauaindia.org/newsletter_jan_mar15.html. பார்த்த நாள்: 25 January 2021. 
  3. "Message from Vice Chancellor". ku-guj.org. Archived from the original on 24 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 25 January 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமதேனு_பல்கலைக்கழகம்&oldid=3731380" இலிருந்து மீள்விக்கப்பட்டது