காமக் கண்ணிப் பசலையார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காமக்காணிப் பசலையார், இவர் மதுரைக் காமக்காணி நப்பசலையார், காமக்கணிப் பசலையார் என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறார். காமக்காணி என்ற பண்டைக் காலத்தில் வழங்கிய நிலவுரிமை காரணமாகப் பெயருக்கு முன்னால் 'காமக்காணி' என்பதனைச் சிலர் சேர்த்துக் கொண்டனர். இவரும் அத்தகைய சிறப்புப் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். 'பசலை' என்ற இயற்பெயருடைய இவரின் புலமை காரணமாக, 'நல்' என்ற அடை சேர்த்து நப்பசலையார் என்று வழங்கப்பட்டிருக்கலாம்.(1) இவருடைய பாடலொன்று நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.


    தேம்படு சிலம்பில் தெள் அறல் தழீஇய
    துறுகல் அயல துாமணல் அடைகரை,
    அலங்குசினை பொதுளிய நறுவடி மா அத்துப்
    பொதும்புதோறு அல்கும் பூங்கண் இருங்குயில்
    'கவறுபெயர்த் தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
    அகறல் ஓம்புமின், அறிவுடையீர்!' என,
    கையறத் துறப்போர்க் கழறுவ போல,
    மெய்யுற இருந்து மேவா நுவல.... 
                                        (திணை, வாகை, துறை-ஏறாண் முல்லை.

தேன் உடையது மலை: அதன் பக்கத்தில் தெளிந்த நீர் சூழ்ந்த உருண்டைக்கல் உண்டு. அதன் அருகில் துாய மணல் மிக்க கரையில் மாமரங்கள் உண்டு. அவை அசையும் கிளைகளையுடையன, நல்ல மாவடுக்கள் நிரம்பியன. மாமரச் சோலைதோறும் தங்கியிருக்கும் பூப்போன்ற கண்களையுடைய கரிய குயில்கள் 'ஆணும் பெண்ணும் மெய்யோடு மெய் சேர நின்று' அறிவுடையீர்! வாழ்க்கை சூதாட்டக் கருவி மாறிமாறி விழுவது போல நிலையில்லாதது. எனவே நிலையற்ற பொருளைத் தேடும் முயற்சியைக் கைவிட்டு, உம் தலைவியரை விட்டுப் பிரியாமல் சேர்ந்து வாழ்வீர்" என்று கையறத் துறப்போரைப் பார்த்து சொல்வது போலக் கூவுகின்றன. இவ்வாறான துன்பத்தைத் தருகின்றன இளவேனிற் காலத்தில் பொருளின் பொருட்டுப் பிரிவது ஆண்களின் இயல்பு என்றால் அறத்தினும் பொருள் ஈட்டுதல் உறுதி.

மேற்கோள்கள்[தொகு]

1 ந.முருகேசபாண்டியன்,அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், டிசம்பர் - 2008

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமக்_கண்ணிப்_பசலையார்&oldid=3299451" இலிருந்து மீள்விக்கப்பட்டது