காமக்கிழத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காமக்கிழத்தி எனும் சொல்லானது சங்ககால இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். பொதுவாகப் பரத்தை, காமக்கிழத்தி, கொண்டி மகளிர், பொதுமகள், பொருட்பெண்டிர், வரைவின் மகளிர், விலைமகள், கணிகை, சலதி, வேசி, தேவரடியாள் என்ற பெயர்களில் தமிழிலக்கியங்களில் பெண்கள் சுட்டப்படுகின்றனர். பொதுத்தன்மையாக விலைமகளிர் என்ற அர்த்தம் தருவதாக இருப்பினும், ஒவ்வொரு பெயரும் தனித்தன்மை வாய்ந்தது.

தொல்காப்பியத்தில் காமக்கிழத்தி மனேயோள் என்றிவர்" (தொல். பொ - 144) என்று குறிப்பிடப்படுகிறது. காமக்கிழத்தி என்ற சொல்லுக்கு ஆசைநாயகி என பொருள் கொள்ளலாம்[1].

"அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆடவன் இலக்கிழத்தி, காமக்கிழத்தி, பரத்தை என்று மூன்று பெண்களை வைத்திருந்ததான்" என்று அறிஞர் அண்ணாதுரை சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்[2]. எனவே பரத்தைக்கும், காமக்கிழத்திக்கும் வேறுபாடு உள்ளது என்பதை அறியமுடிகிறது.

காண்க

சான்று[தொகு]

  1. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=112281&Print=1
  2. http://arignaranna.info/kalanj_samudhayam3.htm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காமக்கிழத்தி&oldid=3365952" இருந்து மீள்விக்கப்பட்டது