உள்ளடக்கத்துக்குச் செல்

காப்தன் சிங் சோலங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்தன் சிங் சோலங்கி
Kaptan Singh Solanki
17வது ஆளுஞர் திரிபுரா
பதவியில்
22 ஆகஸ்ட் 2018 – 28 ஜூலை 2019
முதலமைச்சர்பிப்லப் குமார் தேவ்
முன்னையவர்தாதாகட்டா ராய்
பின்னவர்ரமேஷ் பைஸ்
15வது அரியான ஆளுஞர்
பதவியில்
27 ஜூலை 2014 – 21 ஆக்ஸ்ட் 2018
முதல்மைச்சர்பூபேந்தர் சிங் ஹூடா
மனோகர் லால் கட்டார்
முன்னையவர்ஜகன்னாத் பகாடியா
பின்னவர்சத்யதேவ் நாராயன் ஆர்யா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1939 (1939-07-01) (அகவை 85)
கர்பாரா, மத்திய மாகாணம் & பெரார், பிரித்தானிய இந்தியா
(தற்பொழுது மத்தியப் பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராணி (1959–முதல்)
பிள்ளைகள்5
தொழில்அரசியல்வாதி

காப்தன் சிங் சோலங்கி (Kaptan Singh Solanki)(பிறப்பு: ஜூலை 1, 1939) என்பவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் திரிபுராவின் 17வது ஆளுநர் ஆவார். ஆகஸ்ட் 2009 முதல் மே 2014 வரை, மாநிலங்களவையில் மத்தியப் பிரதேச மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

கல்வி

[தொகு]

சோலங்கி, உஜ்ஜைனியில் உள்ள விக்ரம் பல்கலைக்கழகம், பி. ஜி. பி. டி. கல்லூரி மற்றும் குவாலியரின் சிவாஜி பல்கலைக்கழகத்தின் மகாராணி இலக்குமிபாய் கல்லூரி ஆகியவற்றில் படித்தார்.

ஆசிரியராக

[தொகு]

சோலங்கி, 1958 முதல் 1965 வரை முரைனா மாவட்டத்தின் பான்மோரில் ஆசிரியராக பணியாற்றினார். பின்னர் 1966 முதல் 1999 வரை குவாலியரில் உள்ள பி. ஜி. பி. கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்

[தொகு]

சோலங்கி இந்திய நாடாளுமன்ற உறுப்பினராக, ஆகஸ்ட் 2009 முதல் 2014 வரை இரு முறை பணியாற்றியுள்ளார்.

ஆளுஞராக

[தொகு]

அரியானா ஆளுஞர் ஜகநாத் பகாடியாவின் பதவிக்காலம் 26 ஜூலை 2014இல் முடிவடைந்ததை அடுத்து அரியானாவின் ஆளுநராக சோலங்கி நியமிக்கப்பட்டார்.[1] அரியானா ஆளுஞர் பதவியினையடுத்து திரிபுராவின் ஆளுஞராக 25 ஆகஸ்ட் 2018 முதல் 28 ஜூலை 2019 வரை பணியாற்றினர்.

குடும்ப வாழ்க்கை

[தொகு]

இவர் 1959ஆம் ஆண்டு ஸ்ரீமதி ராணி சோலங்கியினை மணந்துகொண்டார். இவர்களுக்கு, இரண்டு மகள்கள் மற்றும் மூன்று மகன்கள் உள்ளனர்.[2]

வகித்தப் பதவிகள்

[தொகு]
எண் பதவி முதல் வரை
1 திரிபுராவின் ஆளுநர் 22 ஆகஸ்ட் 2018 28 ஜூலை 2019
2 பஞ்சாப் ஆளுநர்

(கூடுதல் பொறுப்பு

21 ஜனவரி 2015 22 ஆகஸ்ட் 2016
3 அரியானா ஆளுஞர் 27 ஜூலை 2014 1 ஆகஸ்ட் 2018
4 மாநிலங்களவை உறுப்பினர் ஆகஸ்ட் 2009 ஏப்ரல் 2012
5 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு ஆகஸ்ட் 2009
6 உறுப்பினர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சின் ஆலோசனைக் குழு ஜூலை 2010
7 மாநிலங்களவை உறுப்பினர் (2வது முறை) ஏப்ரல் 2012
8 உறுப்பினர், உணவு, நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகக் குழு ஆகஸ்ட் 2012 மே 2014

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kaptan Singh Solanki Appointed New Haryana Governor – The New Indian Express
  2. Detailed Profile – H.E. Shri Kaptan Singh Solanki – Who's Who – Government: National Portal of India பரணிடப்பட்டது 2018-07-20 at the வந்தவழி இயந்திரம் [dead link]


முன்னர்
ஜகன்னாத் பகாடியா
அரியானா ஆளுநர்
27 ஜூலை 2014 – 25 ஆகஸ்ட் 2015
பின்னர்
முன்னர் பஞ்சாப் ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)
22 சனவரி 2015 – 22 ஆகஸ்ட் 2016
பின்னர்
வி. பி. சிங் பத்னோர்
முன்னர் சண்டிகர் ஆளுநர் (கூடுதல் பொறுப்பு)
21 சனவரி 2015 – 22 ஆகஸ்ட் 2016
பின்னர்
வி. பி. சிங் பத்னோர்
முன்னர்
ததகதா ராய்
திரிபுரா ஆளுநர்
22 ஆகஸ்ட் 2018 – 28 ஜூலை 2019
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்தன்_சிங்_சோலங்கி&oldid=3585479" இலிருந்து மீள்விக்கப்பட்டது