காபூல் தாக்குதல், மே 2017
காபூல் தாக்குதல், மே 2017 | |
---|---|
இடம் | காபூல், ஆப்கானிஸ்தான் |
நாள் | 31 மே 2017 |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
ஆயுதம் | வாகன வெடிகுண்டு |
இறப்பு(கள்) | 90+ |
காயமடைந்தோர் | 463+ |
தாக்கியோர் | பொறுப்பேற்கவில்லை |
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே 31 மே 2017 அன்று வாகன வெடிகுண்டு மூலம் குண்டுவெடிப்பு நடந்தது.[1][2][2][3][4][5] உள்ளூர் நேரப்படி காலை 8:25 மணியளவில் நடத்தப்பட்ட இக்குண்டுவெடிப்பில் 90 பேர் மரணமடைந்தனர், 463 பேர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலோனர் பொதுமக்கள் ஆவார்.
பின்புலம்
[தொகு]ஏப்ரல் மாதம் தலிபான் அமைப்பினர் எங்கள் தாக்குதலின் முக்கிய இலக்கு வெளிநாட்டு படையினர் எனத் தெரிவித்திருந்தனர்.[6] அமெரிக்க அரசு கூடுதல் படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி நிலைத்தன்மையைக் கொண்டுவர உத்தேசித்துள்ளது.[7] ஆனால் தலிபான் அமைப்பினர், இத்தாக்குதலில் தங்களுக்குத் தொடர்பில்லையெனெ மறுத்துள்ளனர்.[2]
தாக்குதல்
[தொகு]இத்தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜெர்மனியத் தூதரகம் பாதிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டுத் தூதரகத்தின் இரு ஊழியர்கள் காயமடைந்தனர்.[8] இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எதிர்வினைகள்
[தொகு]- ஆப்கானித்தான்: இது ஒரு கோழைத்தனமான தாக்குதல் என ஆப்கானிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.[9]
- இந்தியா: இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோதி, இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிதுள்ளார்.[10][11]வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் இந்தியத் தூதரக ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தினார்.[3]
- பாக்கித்தான்: பாக்கிஸ்தானிய வெளியுறவு அமைச்சு இத்தாக்குதலை கண்டித்ததோடு, பாதிக்கப்பட்டோருக்கு இரங்கல்களையும் தெரிவித்தது.
- செருமனி: தீவிரவாதத்திற்கு எல்லை இல்லை என ஜெர்மனி தெரிவித்தது. மேலும் அகதி உரிமை கிடைக்கப்பெறாத ஆப்கானிஸ்தான் மக்களை ஜெர்மனியிலிருந்து திருப்பிக் கொண்டுவரும் விமானத்தை தற்காலிகமாக ரத்து செய்தது.[9]
- கனடா: புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் இது என கனடா தெரிவித்துள்ளது.[12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காபூலில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்". தமிழ் பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2017.
- ↑ 2.0 2.1 2.2 "Kabul bomb: Dozens killed in Afghan capital's diplomatic zone" (in en-GB). BBC News. 2017-05-31. http://www.bbc.com/news/world-asia-40102903.
- ↑ 3.0 3.1 "Kabul blast: At least 80 killed & over 350 wounded in explosion in Afghan capital’s embassy district" (in en-US). RT International. https://www.rt.com/news/390254-afghan-blast-kabul-embassies/.
- ↑ CNN, Ehsan Popalzai and Faith Karimi. "Afghanistan explosion: 80 killed in blast near diplomatic area". CNN. பார்க்கப்பட்ட நாள் 2017-05-31.
{{cite web}}
:|last=
has generic name (help) - ↑ "אפגניסטן: 80 הרוגים בפיצוץ ענק ליד שגרירות גרמניה" (in he). Ynet. 2017-05-31. http://www.ynet.co.il/articles/0,7340,L-4969532,00.html.
- ↑ "Afghan Taliban announce spring offensive". BBC. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2017.
- ↑ "Kabul Bombing Kills at Least 80, Shaking City Center". NY times. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2017.
- ↑ "Kabul blast: At least 80 killed & over 350 wounded in explosion in Afghan capital's embassy district". rt. பார்க்கப்பட்ட நாள் 31 மே 2017.
- ↑ 9.0 9.1 "Kabul bomb: Afghan leader condemns 'cowardly' attack". BBC இம் மூலத்தில் இருந்து 31 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. http://www.bbc.co.uk/news/world-asia-40109568. பார்த்த நாள்: 31 May 2017.
- ↑ "Huge bomb blast kills dozens, wounds hundreds in Afghan capital". Reuters. 2017-05-31. http://www.reuters.com/article/us-afghanistan-blast-idUSKBN18R0DT.
- ↑ Modi, Narendra (2017-05-30). "India stands with Afghanistan in fighting all types of terrorism. Forces supporting terrorism need to be defeated". @narendramodi. பார்க்கப்பட்ட நாள் 2017-05-31.
- ↑ "Statement by Foreign Affairs Minister on bombing in Kabul". canada.ca. Government of Canada. May 31, 2017. பார்க்கப்பட்ட நாள் May 31, 2017.