கான்ஸ்டன்ஸ் ஏரி ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் எல்லைகள் இணையும் இடத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உருவாகும் இந்த ஏரி மேற்கு ஐரோப்பாவில் உள்ள மிகப் பழைமை வாய்ந்த ஏரியாகும்.
கான்ஸ்டன்ஸ் ஏரி மத்திய ஐரோப்பாவில் பெலட்டன் ஏரி மற்றும் ஜெனிவா ஏரி அடுத்த மூன்றாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 63கிமீ நீளமுடையது. 14 கிமீ அகலமுடையது. இதன் பரப்பளவு 571 கிமீ2 (220 சதுர மைல்).கடல் மட்டத்திலிருந்து 395மீ உயரம்.இதன் ஆழமான பகுதி 252மீ (827 அடி) ஆகும். மொத்த கொள்ளளவு 51.4கிமீ3