கான்பூர் அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கான்பூர் அருங்காட்சியகம் (மன்னர் எட்வர்ட் நினைவு மண்டபம்)
Kanpur Sangrahalaya.JPG
கான்பூர் அருங்காட்சியகம் is located in Uttar Pradesh
கான்பூர் அருங்காட்சியகம்
Location within Uttar Pradesh
நிறுவப்பட்டது1999 (1999)
அமைவிடம்{பூல் பாக் கிரவுண்ட்ஸ், கான்பூர், இந்தியா
வகைஅருங்காட்சியகம்


கான்பூர் அருங்காட்சியகம், கான்பூர் சங்கராலயா என்றழைக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் இந்தியாவில் உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது. அந்த மாநிலத்தின் தொழில்துறை மையமாகக் கருதப்படுகிற கான்பூரில் உள்ள அருங்காட்சியகமாகும் . இது எட்வர்ட் VII இன் நினைவாக ஆங்கிலேயர்களால் கிங் எட்வர்ட் மெமோரியல் ஹால் (மன்னர் எட்வர்ட் நினைவு மண்டபம்) என்ற பெயரில் கட்டப்பட்டது. கான்பூர் நகரத்தை உருவாக்கியதில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வுகள் மற்றும் நபர்கள் தொடர்பாக கதையைச் சொல்லும் கலைப்பொருட்கள் மற்றும் காட்சிப் பொருள்களின் தொகுப்புக் களஞ்சியமாக இது அமைந்துள்ளது, மேலும் கான்பூர் நகரின் சிறப்பு மிக்க கடந்த கால வரலாற்றைப் காலத்தைப் பற்றிய பல சுவாரஸ்யமான விவரங்களைச் சொல்கிறது.

வரலாறு[தொகு]

கான்போர் அல்லது கான்பூர், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தின் போது ஆசியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டது.

கான்பூரில் குடியேறிய ஐரோப்பிய வணிகர்கள், ஐரோப்பிய பாணியிலான கேளிக்கைகளின் அவசியத்தை உணர்ந்தனர், எனவே மேற்கத்திய பாணி, பால்ரூம் நடனம் ஆகியவற்றைக் கொண்ட அந்த பாணியில் அமைந்த ஐரோப்பிய கலைப்பாணிலான கட்டடத்தைக் கட்டத் தொடங்கினர்.1910 ஆம் ஆண்டில் கிங் எட்வர்ட் இறந்தபோது, 1876 ஆம் ஆண்டு கான்பூருக்கு அவர் சென்றதை நினைவுகூரும் விதமாக இந்த மண்டபம் மன்னர் எட்வர்ட் நினைவு மண்டபம் என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்த பூங்காவிற்கானக் கட்டுவதற்கான நிதி கான்பூரில் குடியேறிய ஐரோப்பிய வர்த்தகர்கள் மற்றும் இந்திய வணிகர்களிடமிருந்துசேகரிக்கப்பட்டது.

முதலாம் உலகப் போர் மூண்ட சமயத்தின் போது, மண்டபத்தின் கட்டுமானப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. போர் நடைபெற்ற காலத்தில், காயமடைந்த பிரிட்டிஷ் வீரர்களை தங்க வைப்பதற்காக இந்த மண்டபம் பயன்படுத்தப்பட்டது. போருக்குப் பிறகு, மன்னர் எட்வர்ட் நினைவு மண்டபம் ஒரு எலும்பியல் மறுவாழ்வு மருத்துவமனையாக செயல்பட ஆரம்பித்தது.[1] பின்னர் இது 1920 ஆம் ஆண்டில் ஹர்கார்ட் பட்லர் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது.

1918 ஆம் ஆண்டில் முதலாம் உலகப் போர் நிறைவுற்ற பின்னர், மண்டபத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இது ஐரோப்பிய குடியேற்றவாசிகளால் கலாச்சார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது, அவ்வப்போது இது பணக்கார இந்திய வணிகர்களுக்கு திருமண விழாக்களுக்கு வாடகைக்கு விடப்பட்டது.

1947 ஆம் ஆண்டில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மன்னர் எட்வர்ட் நினைவு மண்டபமானது காந்தி பவன் என்று பெயர் மாற்றப்பட்டது. காந்தி பவன் இப்போது நகராட்சி நூலகம் மற்றும் கான்பூர் சங்கராலய அருங்காட்சியகம் ஆகிய இரண்டும் அமைந்துள்ளன.

இந்த அருங்காட்சியகம் 1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, இது பூல் பாக் மைதானத்தில், மால் சாலை மற்றும் கான்பூர்-லக்னோ சாலை சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. அருங்காட்சியகத்தின் சேகரிப்பில் பழைய காலனித்துவ காலத்தைச் சேர்ந்த பீரங்கி துப்பாக்கிகள் அடங்கும்.

பார்வை நேரம்[தொகு]

இந்த அருங்காட்சியகப் பார்வையாளர்களிடம் தொகை வசூலிக்கப்படுகிறது. ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரிடம் ஒரு வகையான கட்டணமும், ஊடகத்தினர் மற்றும் 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒரு கட்டணமும் உள்ளது. பள்ளியிலிருந்து தொகுப்பாக வரும் குழந்தைகளுக்கான கட்டணமும் உண்டு. இந்த அருங்காட்சியகமானது திங்கட்கிழமைகளிலும், இரண்டாவது செவ்வாய்க்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாள்களிலும் மூடப்பட்டிருக்கும். இதன் முகவரி பூல் பாக், சிவில் லைன்ஸ், கான்பூர் 208 001, உத்திரப்பிரதேசம் ஆகும்.[2]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]