கான்ட் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டைக்காலத்தில் பூமியின் தோற்றம், சூரியன் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவிய சூழ்நிலையில் 18ம் நூற்றாண்டில்தான் விஞ்ஞான ரீதியான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்காலத்தில் பூமி, சூரியன் ஆகியவை பற்றிய செய்திகள் அன்றாடம் வந்த வண்ணம் உள்ளன.

சூரிய மண்டலம் குறித்து விஞ்ஞானக் கொள்கையை முதன் முதலில் வெளியிட்டவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர் இம்மானுவேல் காந்து ஆவார். இவர் சூரிய மண்டலம் குறித்த தனது புத்தகத்தை 1755 ம் ஆண்டில் நியூட்டனின் ஈர்ப்பு விதியை ஆதாரமாகக் கொண்டு வெளியிட்டார்.[1][2][3]

கொள்கையின் சுருக்கம்[தொகு]

  1. இறைவனால் படைக்கப்பட்ட பொருட்கள் புவிஈர்ப்பு விசையால் ஒன்றோடொன்று மோதின.
  2. இதனால் சுழற்சியும் வெப்பமும் ஏற்பட்டது அசைவற்று குளிர்ந்திருந்த பொருட்கள் யாவும் காலங்கள் செல்லச்செல்ல வெப்பமிகுந்த சுழலுகின்ற வாயு கோளங்களாக மாறின.
  3. அந்த வாயுக்கோளம் நெபுலா வேகமாகச் சுழன்றதில் மைய விலகு சக்தி தோன்றி மத்திய தலைப்பகுதியிலிருந்து தூக்கி வீசப்பட்டன.
  4. வளையம் போன்ற இப்பொருட்கள் பிறகு உறைந்து கோள்களாக மாறின.
  5. கோள்களாக மாறிய பொருட்கள் மேலும் உறைந்த பின் தூக்கி எறியப்பட்ட சிறிய பொருட்கள் துணைக்கோள்களாக மாறின. கோள்களும், துணைக்கோள்களம் நெபுலாவிலிருந்து தோன்றியவை. மேலும் எஞ்சிய மையப் பகுதியே இன்று சூரியனாகக் காட்சி தருகிறது என்பதே கான்ட் கொள்கை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்ட்_கொள்கை&oldid=3890048" இலிருந்து மீள்விக்கப்பட்டது