கான்சு ஓர்பிகர்
கான்சு ஓர்பிகெர் Hanns Hörbiger | |
---|---|
பிறப்பு | அட்செர்சுதோர்ப்பு, ஆத்திரியா | 23 ஆகத்து 1867
இறப்பு | 9 மார்ச்சு 1948 மாவுவேர், வியன்னா, ஆத்திரியா | (அகவை 80)
அறியப்படுவது | Welteislehre ( உலகப் பனிக் கோட்பாடு") |
யோகான்னசு கான்சு நற்செய்தியாளர் ஓர்பிகர் (Johannes "Hanns" Evangelist Hörbiger) (29 நவம்பர் 1860 - 11 அக்டோபர் 1931) வியன்னாவைச் சேர்ந்த ஆத்திரியப் பொறியியலாளர் ஆவார். அவர் புதாபெசுட்டு சுரங்கப்பாதைக் கட்டுமானத்தில் பங்கேற்றார் , 1894 ஆம் ஆண்டில் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படும் அமுக்கிகளுக்குத் தேவையான ஒரு புதிய வகை கவாடத்தைக் கண்டுபிடித்தார்.
அவரது போலி அறிவியல் வெல்டிசுலேகிரே (உலகப் பனிக் கோட்பாட்டு) வுக்காகவும் அவர் இன்று நினைவுகூரப்படுகிறார்.
இளமை வாழ்க்கை.
[தொகு]கான்சு ஓர்பிகெர் வியன்னாவின் புறநகர்ப் பகுதியான இலைசிங் வியன்னாவில் பிறந்தார் , மேலும், இவர் உள்ளூர் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பயின்றார்.[1]
1894 ஆம் ஆண்டில் ஹோர்பிகர் ஊதுலை ஊதற் பொஈக்கானபுதிய வடிவமைப்பிற்கான ஓர் எண்ணக்கருவைக் கொண்டிருந்தார். அவர் பழைய, எளிதில் சிதைவடைந்த தோல் மடிப்பு கவாடங்களை எஃகு கவாடத்தால் மாற்றினார். தானாகத் திறந்து மூடும் இலேசான உராய்வு இல்லாத வழிகாட்டு வட்டுக் கவாடம் முந்தைய கவாட வடிவமைப்புகளின் அனைத்து குறைபாடுகளையும் நீக்கியது.
இவர் தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை பதிவு செய்தார் , இது திறமையான எஃகு ஆக்கத்துக்கும் சுரங்கத்தில் அதிக ஆக்கத்திறனுக்கும் வழிவகுத்தது. உயர் அழுத்த வேதியியல், இயல்வளிப் பரிமாற்றத்தின் உலகளாவிய வலைப்பின்னல் ஆகிய எதுவும் இவரது கவாடம் இல்லாமல் சாத்தியமில்லை.
1900 ஆம் ஆண்டில் இவரும் பொறியாளர் பிரெட்ரிக் வில்கெல்ம் உரோக்லர் ஆகியோர் புதாபெசுட்டில் ஒரு பொறியாளர் அலுவலகத்தை நிறுவினர் , இது 1903 இல் வியன்னாவுக்கு மாற்றப்பட்டது. 1925 வாக்கில் இதடோர்பிகர் அண்டு கோ நிறுவனமாக வளர்ந்தது. இவரது மகன்களில் ஒருவரான ஆல்பிரடு ஓர்பிகர் 1925 இல் நிறுவனத்தில் சேர்ந்து நிர்வாகத்தையும் ஏற்றுக்கொண்டார் , அதே நேரத்தில் கான்சு ஓர்பிகர் 1931 இல் இறக்கும் வரை அறிவியல் ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மற்ற இரண்டு மகன்கள் - அட்டிலாவும் பவுலும் நடிகர்கள் ஆனார்கள்.
ஆல்பிரடு ஓர்பிகரின் ஆட்சியின்.கீழ் நிறுவனம் வேகமாக வளர்ந்ததுஃ வியன்னாவில் ஒரு ஆக்கநிலையம் பணிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும், துசெல்தார்ப்பில் ஒரு நிறுவனம் இணைக்கப்பட்டது. ஓர்பிகர் இங்கிலாந்திலும் விரிவடைந்து ஐரோப்பா, வட அமெரிக்காவில் உள்ள பிசுட்டன் புளோவர்சு அமுக்கிகள், கப்பல்களின் டீசல் பொறிகளின் முன்னணிக் குழுமங்களுடன் ஏராளமான உரிம ஒப்பந்தங்களை போட்டது.
இந்த வெற்றி முதன்மைக் கண்டுபிடிப்பு மேதைமை வழி உந்தப்பட்டது. வட்டு கவாடம் மிகவும் மிகப்புதுமை வாய்ந்தது. ஓர்பிகர் அமுக்கி கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் ஒடுக்கத் தட்டுகளுக்கான உயர் - தூக்கல் அல்லது உயர் - அழுத்தக் கவாடங்களை உருவாக்கினார். 1937 வாக்கில் 98% ஆக்கம் ஏற்றுமதிக்கு ஒதுக்கக்கப்பட்டது. ஓர்பிகர் என்ற பெயர் அமுக்கிகளுக்கான கவடமாகவும் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்திலுக்கு நம்பகமான வணிக முத்திரையாக மாறியது. 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி , கான்சு ஓர்பிகர் நிறுவிய பொறியியல் நிறுவனம் இன்னும் ஓயர்பிகெர் ஆக மாறியுள்ளது மற்றும் அமுக்கத் தொழில்நுட்ப முத்ன்மை வழங்குநராகவும் ஆகியுள்ளது.[2]
உலகப் பனிக் கோட்பாடு
[தொகு]இப்போதெல்லாம் ஓர்பிகர் முக்கியமாக அவரது வெல்டிசுலேகிரே (உலகப் பனிக் கோட்பாடு) வுக்காக நினைவுகூரப்படுகிறார் , இதைத் தனது 1913 ஆம் ஆண்டு புத்தகத்தில் முதன்முதலில் முன்வைத்தார். Wirbelstürme Wetterstürze Hagelkatastrophen und Marskanal - Verdoppelungen எனும் நூல் பயில்நிலை வானியலாளர் பிலிப் போத் உடன் இணைந்து இவரால் எழுதப்பட்டது. இந்தக் கோட்பாட்டின்படி , அண்டத்தின் பெரும்பாலான பொருட்கள் பனிக்கட்டியால் ஆனவை.[3] ஓர்பிகரின் கோட்பாடுகள் பின்னர் எச். எசு. பெல்லாமியால் பரப்பப்பட்டன , மேலும், இது எஸ்எஸ் - அகினெனர்பேயின் பிளெஜெசுட்டாட் பர் வெட்டர்கண்டே, வானிலைப் பிரிவின் தலைவர் கான்சு இராபர்ட் சுச்கல்டெசசையும் ஈடுபடவைத்தது. அவர் துல்லியமான நெடுந்தொலைவு வானிலை முன்னறிவிப்புகளை வழங்க வெல்டிசுலேகிரைப் பயன்படுத்தப்படலாம் என்று நம்பினார்.[4]
ஓக்சிடெண்டல் மொழி
[தொகு]இப்போது அதிகாரப்போக்கில் இன்டர்லிங்கு என்று அழைக்கப்படும் திட்டமிடப்பட்ட மொழியான ஓக்சிடெண்டல் மொழியின் தொடக்க கால ஆதரவாளராகவும் நிதி ஆதரவாளராகவும் ஓர்பிகர் இருந்தார். ஒசிடென்டலின் முக்கிய வெளியீடான காஸ்மோகுளோட்டாவின் மறுசீரமைப்பு அலுவலகம் வியன்னாவில் இருந்த காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடி இருந்தபோதிலும் , அதன் வாசகர்களின் வட்டத்தை மீண்டும் பெறுவதில் அவரது நிதி உதவி முதன்மைப் பங்கு வகித்தது.[5]
குடும்பம்.
[தொகு]ஓர்பிகரின் இரண்டு மகன்கள் - பவுலும் அட்டிலாவும் போருக்கிடையேயான ஆண்டுகளில் திரைக்காட்சிச் சிலைகளாக இருந்தனர் - மேலும் பவுல் ஓர்பிகரின் பேத்தி மேவி ஓர்பிகரும் ஒரு புகழ்பெற்ற நடிகையாக மாறினார். அவரது மற்ற இரண்டு மகன்களும் தங்கள் தந்தையின் கோட்பாட்டை ஊக்குவிப்பதில் தங்கள் வாழ்வை ஈடுபடுத்தினர். தற்போதைய ஓர்பிகர் தலைமுறைகளில் மிகவும் பெயர்பெற்றவர் அட்டிலாவின் மகள் கிறித்தியன் ஆவார்.
தகைமைகள்
[தொகு]நிலாவில் உள்ள தெசுலந்தெரசு குழிப்பள்ளம் பிலிப் போத் என்பவரால் அவரது தனிப்பட்ட நிலா வரைபடத்தில் ஓர்பிகர் என்று பெயரிடப்பட்டது , பின்னர் 1942 ஆம் ஆண்டில் ஈ. எம். அந்தோனியாதி பரிந்துரைத்ததைத் தொடர்ந்து இது தெசுலாந்தெரசு என்ற அதிகாரப் பெயரைப் பெற்றது , இது பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் 1948 பொது அவையில் ஏற்கப்பட்டது. கான்சு சுவார்சென்பாக் உருவாக்கிய கால்வாக் நிலவு வரைபடத்தில் ஓர்பிகர் என்ற பெயர் இன்னும் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Taufbuch - 01-08 | 23., Atzgersdorf | Wien/Niederösterreich (Osten): Rk. Erzdiözese Wien | Österreich | Matricula Online". data.matricula-online.eu. பார்க்கப்பட்ட நாள் 2022-12-27.
- ↑ "Home". hoerbiger.com.
- ↑ An encyclopedia of claims, frauds, and hoaxes of the occult and supernatural: decidedly sceptical definitions of alternative realities.
- ↑ The Undergrowth of Science: Delusion, Self-deception, and Human Frailty.
- ↑ "Cosmoglotta B, 1937, p.79".