உள்ளடக்கத்துக்குச் செல்

கானோ ஜிகாரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கானோ ஜிகாரோ
கானோ ஜிகாரோ, அண். 1937
பிறந்தார்(1860-12-10)10 திசம்பர் 1860
கோபே, ஜப்பான்
காலமானார்4 மே 1938(1938-05-04) (அகவை 77)
கிக்கவா மாரு, சப்பானியப் பேரரசு
Styleயுடோ, யயுற்சு
தொழில்
  • கல்வியாளர்
  • தடகள வீரர்

கானோ ஜிகோரோ (Kanō Jigorō) (10 திசம்பர் 1860 – 4 மே 1938) ஓர் ஜப்பானியக் கல்வியாளரும், விளையாட்டு வீரரும், யுடோவின் நிறுவனரும் ஆவார். யுடோ விளையாட்டு பரந்த சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற முதல் சப்பானிய தற்காப்புக் கலையாகும். மேலும் அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் விளையாட்டாக மாறியது. கனோவின் கற்பித்தல் கண்டுபிடிப்புகளில் கருப்பு மற்றும் வெள்ளை பட்டைகளின் பயன்பாடு அடங்கும். மேலும், தற்காப்புக் கலை பாணி உறுப்பினர்களிடையே ஒப்பீட்டு தரவரிசையைக் காட்ட டான் தரவரிசை அறிமுகம் செய்தார். "குறைந்த முயற்சியுடன் கூடிய அதிகபட்ச செயல்திறன்" , "பரஸ்பர நலன் மற்றும் நன்மை" ஆகியவை கானோவுக்குக் கூறப்படும் நன்கு அறியப்பட்ட பொன்மொழிகளில் அடங்கும்..

இவரது தொழில் வாழ்க்கையில், கானோ ஒரு கல்வியாளராக இருந்தார். 1898 முதல் 1901 வரை கல்வி அமைச்சகத்தின் தொடக்கக் கல்வி இயக்குனராகவும், 1900 முதல் 1920 வரை தோக்கியோ உயர்நிலைப் பள்ளியின் தலைவராகவும் பணியாற்றினார். 1910களின் ஜப்பானிய பொதுப் பள்ளி திட்டங்களில் யுடோவையும் கெண்டோவையும் ஒரு பகுதியாக மாற்றுவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார்.

கானோ சர்வதேச விளையாட்டுகளின் முன்னோடியாகவும் இருந்தார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் முதல் ஆசிய உறுப்பினராகவும் இருந்தார் (இவர் 1909 முதல் 1938 வரை பணியாற்றினார்). 1912க்கும் 1936க்கும் இடையில் நடைபெற்ற பெரும்பாலான ஒலிம்பிக் போட்டிகளில் ஜப்பானை அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தினார்.1940 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஜப்பானின் முன்னணி செய்தித் தொடர்பாளராக பணியாற்றினார்.

இவரது பல மரியாதைகளையும், கௌரவங்களையும் பெற்றுள்ளார். 14 மே 1999 அன்று சர்வதேச யுடோ கூட்டமைப்பின் முதல் உறுப்பினராக கானே சேர்க்கப்பட்டார். [1]

சான்றுகள்

[தொகு]
  • Watson, Brian N. (2000). The father of judo : a biography of Jigoro Kano (1st ed.). Tokyo: Kodansha. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4770025302.
  • Stevens, John (2013). The way of judo : a portrait of Jigoro Kano and his students (First ed.). Boston: Shambhala. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1590309162.
  • Committee for the Commemoration of the 150th Anniversary of the Birth of Jigoro Kano (2020). The legacy of Kano Jigoro : judo and education (First English ed.). Tokyo, Japan: Japan Publishing Industry Foundation for Culture. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-4-86658-136-1. Archived from the original on 2021-06-07. பார்க்கப்பட்ட நாள் 2021-11-02.{{cite book}}: CS1 maint: numeric names: authors list (link)
  1. "IJF Hall of Fame in Paris". American Judo – A Journal of the United States Judo Association: 11–12. 2005. http://www.usja-judo.org/americanjudo/AJFallWinter.pdf. 

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கானோ ஜிகாரோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கானோ_ஜிகாரோ&oldid=3894037" இலிருந்து மீள்விக்கப்பட்டது