கானேவால் மாவட்டம்
கானேவால் மாவட்டம்
Zilā Khānēvāla | |
|---|---|
மாவட்டம் | |
மேல்: பண்டைய துலம்பா நகரத்தின் சிதிலங்கள் கீழ்: கபீர்வாலாவின் நினைவிடம் | |
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் கானேவால் மாவட்டத்தின் அமைவிடம் | |
| நாடு | பாக்கித்தான் |
| மாகாணம் | பஞ்சாப் |
| கோட்டம் | முல்தான் |
| தலைமையிடம் | கானேவால் |
| அரசு | |
| • வகை | மாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்) |
| பரப்பளவு | |
| • மாவட்டம் | 4,349 km2 (1,679 sq mi) |
| மக்கள்தொகை (2023)[1] | |
| • மாவட்டம் | 33,64,077 |
| • அடர்த்தி | 773.5/km2 (2,003/sq mi) |
| • நகர்ப்புறம் | 7,16,786 |
| • நாட்டுப்புறம் | 26,47,291 |
| சராசரி எழுத்தறிவு | |
| • எழுத்தறிவு] % |
|
| நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
| இடக் குறியீடு | 065 |
| வருவாய் வட்டங்கள் | 4 |
| இணையதளம் | khanewal |
கானேவால் மாவட்டம் (Khanewal District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் கானேவால் நகரம் ஆகும்[3]. கானேவால் நகரமானது மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தெற்கே 507 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
[தொகு]கானேவால் மாவட்டட்திற்கு வடக்கில் தோபா தேக்சிங் மாவட்டம், வடகிழக்கில் சாகிவால் மாவட்டம், கிழக்கில் வெகாரி மாவட்டம், தென்கிழக்கில் லோத்ரன் மாவட்டம், தென்மேற்கில் முல்தான் மாவட்டம், மேற்கில் முசாப்பர்கர் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 526,196 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 33,64,077 ஆகும் . பாலின விகிதம் 100 பெண்களுக்கு 106.48 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு60.97% ஆகும்.[1][4] இதன் மக்கள்தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 907,441 (26.98%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 716,786 (21.31%) மக்கள் வாழ்கின்றனர்.[1]
சமயம்
[தொகு]இம்மாவட்டத்தில் இசுலாம் சமயத்தை 98.15% பேரும், இந்து சமயம் & கிறித்துவ சமயங்களை 1.81% பேரும், பிற சமயங்களை 0.04% பேரும் பின்பற்றுகின்றனர்.[6]
மொழிகள் & இனக்குழுக்கள்
[தொகு]இம்மாவட்டத்தில் பஞ்சாபி மொழி 70.41%, சராய்கி மொழி 19.41%, உருது மொழி 8.05%, பஷ்தூ மொழி 1.09% தாய் மொழியாகப் பேசுகின்றனர். [7]
இம்மாவட்டத்தில் நியாசி ஆப்கானியர்கள், ததுவனா, கிச்சி, காம்போஜ், மத்தியானா, குஜ்ஜர், இராஜ்புத், ஜாட், பட்டி, பலூச்சி மக்கள், சியா, அரேன் இன மக்கள் வாழ்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம்
[தொகு]கானேவால் 5 வருவாய் வட்டங்களையும், 168 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டம் பஞ்சாப் மாகாணச் சட்டமன்றத்தில் 7 இடங்களும், பாகிஸ்தான் தேசிய சபைக்கு 4 தொகுதிகளையும் கொண்டுள்ளது.[8][9]
| வருவாய் வட்டம்[10] | பரப்பளவு
(km²)[11] |
மக்கள் தொகை
(2023) |
மக்கள்தொகை அடர்த்தி
(ppl/km²) (2023) |
எழுத்தறிவு %
(2023)[12] |
ஒன்றியக் குழுக்கள் |
|---|---|---|---|---|---|
| ஜகானியன் வட்டம் | 549 | 384,822 | 700.95 | 65.65% | ... |
| கபீர்வாலா வட்டம் | 1,804 | 1,119,229 | 620.42 | 54.13% | ... |
| கானேவால் வட்டம் | 784 | 987,445 | 1,259.50 | 63.60% | ... |
| மியான் சான்னு வட்டம் | 1,212 | 872,581 | 719.95 | 64.39% | ... |
தட்ப வெப்பம்
[தொகு]| தட்பவெப்ப நிலைத் தகவல், கானேவால் மாவட்டம்[13] | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 28.3 (82.9) |
32.0 (89.6) |
39.0 (102.2) |
45.0 (113) |
46.9 (116.4) |
48.0 (118.4) |
48.2 (118.8) |
45.0 (113) |
42.5 (108.5) |
40.6 (105.1) |
36.0 (96.8) |
29.0 (84.2) |
48.2 (118.8) |
| உயர் சராசரி °C (°F) | 21.0 (69.8) |
23.2 (73.8) |
28.5 (83.3) |
35.5 (95.9) |
40.4 (104.7) |
42.3 (108.1) |
39.2 (102.6) |
38.0 (100.4) |
37.2 (99) |
34.6 (94.3) |
28.5 (83.3) |
22.7 (72.9) |
32.59 (90.67) |
| தினசரி சராசரி °C (°F) | 12.7 (54.9) |
15.4 (59.7) |
21.0 (69.8) |
27.5 (81.5) |
32.4 (90.3) |
35.5 (95.9) |
33.9 (93) |
33.0 (91.4) |
31.0 (87.8) |
26.4 (79.5) |
19.7 (67.5) |
14.1 (57.4) |
25.22 (77.39) |
| தாழ் சராசரி °C (°F) | 4.5 (40.1) |
7.6 (45.7) |
13.5 (56.3) |
19.5 (67.1) |
24.4 (75.9) |
28.6 (83.5) |
28.7 (83.7) |
28.0 (82.4) |
24.9 (76.8) |
18.2 (64.8) |
10.9 (51.6) |
5.5 (41.9) |
17.86 (64.15) |
| பதியப்பட்ட தாழ் °C (°F) | −2.2 (28) |
-1 (30) |
3.3 (37.9) |
9.4 (48.9) |
13.5 (56.3) |
20.0 (68) |
21.1 (70) |
21.1 (70) |
16.7 (62.1) |
8.9 (48) |
0.6 (33.1) |
−1.1 (30) |
−2.2 (28) |
| பொழிவு mm (inches) | 7.2 (0.283) |
9.5 (0.374) |
19.5 (0.768) |
12.9 (0.508) |
9.8 (0.386) |
12.3 (0.484) |
61.3 (2.413) |
32.6 (1.283) |
10.8 (0.425) |
1.7 (0.067) |
2.3 (0.091) |
6.9 (0.272) |
186.8 (7.354) |
| சூரியஒளி நேரம் | 222.3 | 211.6 | 250.8 | 273.3 | 293.5 | 266.8 | 265.0 | 277.6 | 277.6 | 274.9 | 255.0 | 229.2 | 3,097.6 |
| ஆதாரம்: NOAA (1961–1990)[14] | |||||||||||||
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023" (PDF).
- ↑ Khanewal | Punjab Portal. Retrieved 16 January 2022, from https://www.punjab.gov.pk/khanewal பரணிடப்பட்டது 21 பெப்ரவரி 2023 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
- ↑ List of tehsils and districts - Statpak.gov பரணிடப்பட்டது 30 திசம்பர் 2010 at the வந்தவழி இயந்திரம்
- ↑ District Health Profile - Khanewal. Citeseerx.ist.psu.edu. Retrieved 16 January 2022, from http://citeseerx.ist.psu.edu/viewdoc/download;jsessionid=68A7FAC41C5DC95DE087DD5DCC900BC6?doi=10.1.1.695.4631&rep=rep1&type=pdf.
- ↑ Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
- ↑ "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
- ↑ "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
- ↑ Climate | District Khanewal. Khanewal.punjab.gov.pk. (2022). Retrieved 16 January 2022, from https://khanewal.punjab.gov.pk/climate.
- ↑ வார்ப்புரு:Cite FTP