கானா சிவப்பு மீன் வறுவல்
வாழை இலைகளில் சுற்றப்பட்ட கானா சிவப்பு மீன் வறுவல் (தாமடோகாக்கசு டேனியல்லி) | |
| தொடங்கிய இடம் | கானா |
|---|---|
| ஆக்கியோன் | கா-அடாங்பே மக்கள் |
| பரிமாறப்படும் வெப்பநிலை | சூடானது |
| முக்கிய சேர்பொருட்கள் | கருப்பு கண் பட்டாணி (பீன்சு), தக்காளி, வெங்காயம், பாமாயில், சிவப்பு மிளகாய், மிளகு மற்றும் உப்பு |
கானா சிவப்பு மீன் வறுவல் (Red red) என்பது கருப்பு கண்கள் கொண்ட பட்டாணியால் ஆன ஆப்பிரிக்கா நாட்டின் கானா பகுதியைச் சார்ந்த உணவு ஆகும். இவ்வுணவு பனை எண்ணெய் அல்லது பிற தாவர எண்ணெயில் வாழைப்பழத்துடன் சேர்த்து சமைக்கப்படுகிறது.[1] சிவப்பு பனை எண்ணெய் (சோமி) மற்றும் வறுத்த வாழைப்பழத்திலிருந்து எடுக்கும் போது சிவப்பு நிறத்தினை பெறுவதால் இப்பெயரைப் பெற்றது. இவ்வுணவு பொதுவாக பதப்படுத்தப்பட்ட கானாங்கெளுத்தி மீன் அல்லது பைல்சார்ட்சு என்றழைக்கப்படும் மீன், கருப்பு கண் கொண்ட பட்டாணி, சுகாட்ச் பானெட் என்றழைக்கப்படும் மிளகுத்தூள், வெங்காயம், எண்ணெய் மற்றும் தக்காளி போன்றவற்றைக் கொண்டு சமைக்கப்படுகிறது.[2][3] இவ்வுணவு கானா "யோ கே காரி" என்றும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் மீன்களுடன் பரிமாறப்பட்டாலும், இவ்வுணவு சைவமாகவும் இருக்கலாம்.[4] வறுத்த வாழைப்பழம், வெண்ணெய் பழம் மற்றும் அரிசி அல்லது ரவையுடன் சேர்த்து முழுமையான உணவாக பரிமாறலாம். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Steven J. Salm; Toyin Falola (1 January 2002). Culture and Customs of Ghana. Greenwood Publishing Group. pp. 109–. ISBN 978-0-313-32050-7.
- ↑ Lonely Planet (1 September 2014). Food Lover's Guide to the World: Experience the Great Global Cuisines. Lonely Planet Publications. pp. 375–. ISBN 978-1-74360-581-3.
- ↑ "Ghanaian recipe: red-red". Archived from the original on 2019-05-04. Retrieved 2019-05-04.
- ↑ "How to prepare vegetarian Red Red". Ghana Web. 1 December 2017. Archived from the original on 6 June 2020.
- ↑ "Akosua Konadu Yiadom writes: 30 nutritional benefits of 'red red'". Citinewsroom (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-10-15. Retrieved 2020-06-06.