காந்த மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்தமலை, இலே என்னும் இடத்திலுள்ளது

காந்தமலை என்பது இந்தியாவின் காசுமீர் மாநிலத்தில் லே என்னுமிடத்திலிருந்து லடாக் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு மலையாகும். அவ்வழியில் செல்லும் வண்டிகள் அம்மலை இருக்கும் திசை நோக்கி ஈர்க்கிறது என நம்பப்படுகிறது. ஆதலால் இம்மலை காந்தமலை எனப் பெயர்பெற்றது.[1]

அமைவிடம்[தொகு]

காசுமீர் மாநிலம், இலே என்னுமிடத்துக்கும் லடாக் என்னும் இடத்துக்கும் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் இந்த காந்தமலை அமைந்துள்ளது.[2] கடல் மட்டத்திலிருந்து 11,000 அடி உயரத்தில் இந்தக் காந்தமலை அமைந்துள்ளது.

ஊர்திகளை ஈர்க்கும் மலை[தொகு]

இந்தியாவின் லடாக்கில் உள்ள காந்த மலைக்கு அருகில் ஒரு விளம்பரப் பலகை.

இலே மற்றும் லடாக்குக்கு இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இம்மலையைப் பற்றிய அறிவிப்புப் பலகையும், அதன் அருகில் சாலையில் குறியிட்டும் வைத்துள்ளனர். இந்தக் குறிப்பிட்டப் பகுதியில் மகிழுந்தையோ அல்லது வேறு எந்த ஓர் ஊர்தியையோ நிறுத்தினால் ஊர்தி காந்தமலை இருக்கும் திசைநோக்கி தானாக நகர்கிறது. பொதுவாக மலைச்சாலையில் வண்டிகள் இறக்கமான பகுதியை நோக்கி நகர்வது வழக்கம். ஆனால் வண்டி மேடான பகுதியில் 10 கி.மீ முதல் 20 கி.மீ வரை வண்டியின் எடைக்கு ஏற்றவாறு தானாக காந்தமலை இருக்கும் திசைநோக்கி பயணிக்கிறது. இதுவே அம்மலையின் வியப்பான ஒரு சிறப்புக்கூறு என்று இலே-யிலிருந்து லடாக் செல்லும் நெடுஞ்சாலையில் பயணித்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.[3]

அறிவியல் காரணங்கள்[தொகு]

காந்தமலையில் இருக்கும் அதிகப்படியான புவிஈர்ப்பு சக்தி தான் இதுபோன்று வாகனங்களை கவர்ந்திழுக்கிறது என்று ஒரு தரப்பு அறிவியலாளர்களும், இது ஒளியியல் கண் மாயம் (Optical illusion) ஒளியியற் கண்மாயம் என்று மற்றொரு தரப்பு அறிவியலாளர்களும் தெரிவிக்கின்றனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_மலை&oldid=3687396" இலிருந்து மீள்விக்கப்பட்டது