காந்த கார் (சோத்பூர்)
Appearance
காந்த கார் (Ghanta Ghar) என்பது இராசசுதானின் மணிக்கூண்டு என்றும் அழைக்கப்படுகிறது. சோத்பூரின் மறைந்த சர்தார் சிங் கி என்பவரால் இம்மணிக்கூண்டு கட்டப்பட்டது.[1][2] கோபுரத்தைத் தவிர இங்குள்ள சதார் சந்தைக்குச் சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்வார்கள். இச்சந்தையில் இராசசுத்தானி உடைகள், களிமண் சிலைகள், சிற்றுருவ ஒட்டகங்கள் மற்றும் யானைகள், பளிங்குகல் வேலைபாடுகள் மற்றும் பாரம்பரிய வெள்ளி அணிகலன்கள் முதலியன அதிகமாக விற்பனையாகின்றன.