உள்ளடக்கத்துக்குச் செல்

காந்த ஒதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்த ஒதுக்கம்(Magnetic declination) என்பது ஓரிடத்தில், அந்த இடம் புவியின் வட துருவம் தென்துருவம் ஆகிய மூன்று புள்ளிகள் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கும் அதே இடம் புவியின் காந்த வடமுனை காந்த தென்முனை ஆகிய மூன்று புள்ளிகள் வழியாகச் செல்லும் செங்குத்துத் தளத்திற்கும் இடைப்பட்ட கோண அளவாகும்.இது எல்லா இடங்களிலும் ஒன்றுபோல் இல்லாமல் இடத்திற்கு இடம் சிறிது மாறுபட்டுக் காணப்படுகிறது.காந்தவியலில் இது ஒதுக்கம் என்றும் குறிக்கப்படும்.

ஒரேஅளவு ஒதுக்கங்களைக் கொண்ட எல்லா இடங்களையும் ஒன்றாக இணைக்கும் கோட்டிற்குச் சம ஒதுக்கக்கோடு (Isogonals) என்று பெயர்.சுழிஅளவு ஒதுக்கங்களைக் கொண்ட எல்லா இடங்களையும் இணைக்கும் கோட்டிற்கு சுழிஒதுக்கக் கோடு(Agonic) என்று பெயர்.

மேற்கோள்கள்[தொகு]

  • மின்னியல்-காந்தவியல், தமிழ் வெளியீட்டுக் கழகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்த_ஒதுக்கம்&oldid=2745917" இலிருந்து மீள்விக்கப்பட்டது