காந்தி மண்டபம், சென்னை
காந்தி மண்டபம் (Gandhi Mandapam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள அடையாறு பகுதியில் மகாத்மா காந்தியின் நினைவாக சர்தார் பட்டேல் சாலையில் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவிடம் ஆகும் [1][2][3]. சர்தார் பட்டேல் சாலையில் கட்டப்பட்ட முதலாவது நினைவிடம் காந்தி மண்டபமாகும். அப்போது தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த சி.இராசகோபாலாச்சாரி 1956 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் நாள் இந்நினைவிடத்தைத் தொடங்கிவைத்தார். பின்னர் இச்சாலையில் சுதந்திரச் சிந்தனையாளர் இரட்டைமலை சீனிவாசன், முதலமைச்சர்கள் சி.இராசகோபாலாச்சாரி, காமராசர், எம். பக்தவத்சலம் ஆகியோருக்கும் நினைவிடங்கள் கட்டப்பட்டன [3].
இந்நினைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாக, பொது விழாக்களும், குறிப்பாக கலாச்சார உரையாடல்களுக்கும் இசை நிகழ்ச்சிகளும் நடத்த பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது [4][5]. சென்னை நகரத்தில் ஒரு சுற்றுலா பொழுதுபோக்கு பூங்காவாகவும் இம்மண்டபம் விளங்குகிறது [6].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "gandhi mandapam". wikimapia. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
- ↑ "gandhi mandapam for a fresh look". The Hindu. 7 June 2007 இம் மூலத்தில் இருந்து 9 ஜூலை 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070709024702/http://www.hindu.com/2007/07/06/stories/2007070658040200.htm.
- ↑ 3.0 3.1 T. Ramakrishnan (7 August 2008). "Gandhi Mandapam set for new look". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080711143847/http://www.hindu.com/2008/07/08/stories/2008070857430200.htm.
- ↑ "Chennai today". The Hindu. 29 June 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3583177.ece. பார்த்த நாள்: 7 July 2012.
- ↑ "gandhi mandapam". chennainetwork. Archived from the original on 9 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 7 July 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Gandhi Mandapam to be spruced up at Rs.11.61-cr.". The Hindu. 21 April 2012. http://www.thehindu.com/news/cities/chennai/article3336834.ece. பார்த்த நாள்: 7 July 2012.