உள்ளடக்கத்துக்குச் செல்

காந்திநகர் அனல் மின் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காந்திநகர் அனல் மின் நிலையம்
நாடுஇந்தியா
இடம்காந்திநகர், குஜராத்
நிலைசெயல்பாட்டிலுள்ளது
இயங்கத் துவங்கிய தேதி1977
இயக்குபவர்குஜராத் மாநில மின் கழகம் லிமிடெட்
மின் நிலைய தகவல்
முதன்மை எரிபொருள்நிலக்கரி
உற்பத்தி பிரிவுகள்5
மின் உற்பத்தி விவரம்
நிறுவப்பட்ட ஆற்றலளவு870.00 மெகாவாட்
Source: http://gsecl.in/

காந்திநகர் அனல் மின் நிலையம் இந்தியாவில் குஜராத்தில் உள்ள முக்கிய மின் நிலையம். இந்த அனல் மின் நிலையம், சபர்மதி ஆற்றின் கரையில் அகமதாபாத்திற்கு அருகில் அமைந்துள்ளது. நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்குகிறது.

மின் உற்பத்தி நிலையம்

[தொகு]

காந்திநகர் அனல் மின் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் சபர்மதி ஆற்றில் உள்ளதால் இது அவ்வாற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த அனல் மின் நிலையம் குஜராத்தின் மிகப்பெரிய நகரமான அகமதாபாத்திற்கு வெகு அருகாமையில் அமைந்துள்ளது.[1].

நிறுவப்பட்ட ஆற்றலளவு

[தொகு]
நிலை தொகுதி எண் நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) ஆரம்பிக்கப்பட்ட தேதி நிலைமை
நிலை I 1 120 மார்ச் 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை I 2 120 ஏப்ரல், 1977 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 3 210 மார்ச் 1990 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 4 210 ஜூலை, 1991 செயல்பாட்டிலுள்ளது
நிலை II 5 210 மார்ச் 1998 செயல்பாட்டிலுள்ளது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gandhinagar Thermal Power Station". Gujarat State Electricity Corporation Limited. Archived from the original on 2010-04-20. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.