காந்தாரக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


காந்தாரக் சிற்பக் கலை[தொகு]

stone bust of Gandhara Buddha from the 1st-2nd century AD
காந்தாரதேசம் Buddha, 1st-2nd century AD

காந்தாரக் கலை குஷாணர் காலத்தில் உருவான புதிய சிற்பக் கலையாகும். காந்தாரம் என்னும் இடம் இந்திய, கிரேக்க, பாரசீக நாகரிகங்கள் சந்தித்த இடமாகும். இதன் விளைவாக உயர்ந்த வகை சிற்பக் கலை உருவானது. காந்தாரக் கலைச் சிற்பங்கள் இந்திய உணர்வையும், கிரேக்கக் கலைஞர்களின் கை வண்ணத்தையும் வெளிப்படுத்துகின்றன. சாகர்களும், குஷாணர்களும் காந்தாரக் கலையைப் பெரிதும் ஆதரித்தனர். புத்த சமயக் கதைகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தும் சிற்பங்களை வடிக்கும் காந்தாரக் கலை கூடங்கள் நிறுவப்பட்டன. காந்தாரக் கலைச் சிற்பங்களின் உடலமைப்பு, உடையமைப்பு ஆகியவற்றிலும் வடிவம், நுட்பம் ஆகியவற்றிலும் கிரேக்கக் கலையின் தாக்கம் காணப்பட்டது.

குஷாணர்கள் காலத்தில் மிகச் சிறந்த காந்தாரக் கலைப் படைப்புகள் உருவாக்கப்பட்டன. இளவரசரைப் போல, துறவியைப் போல, அறிவொளி பெற்றவரைப் போல பல்வேறு நிலைகளில் புத்தரின் சிலைகள் உருவாக்கப்பட்டன. காந்தாரக் கலைக் கலைஞர்கள் ஸ்தூபிகளையும், விகாரங்களையும் கட்டுவதில் சிறந்த திறமை பெற்றிருந்தனர். பெஷாவருக்கு அருகில் கனிஷ்கரால் கட்டப்பட்ட புகழ் பெற்ற ஸ்தூபியை யுவான் சுவாங் குறிப்பிட்டுள்ளார். அது 13 அடுக்குகளைக் கொண்ட 700 அடி உயரமான ஸ்தூபியாகும். தட்ச சீலம், ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை ஆகிய பகுதிகளில் காந்தாரக் கலைச் சிற்பங்கள் காணப்படுகின்றன.

காந்தாரக் கலையின் தோற்றமும், வளர்ச்சியும் குஷாணர்கள் காலத்தின் சிறப்புத் தன்மைகளாக விளங்கின. இந்திய வாழ்விலும், பண்பாட்டிலும் குஷாணர்கள் ஆற்றிய பணி மகத்தானது. காந்தாரக் கலையில் புத்தருடைய சிலைகளும், சிற்பங்களும் வடிவமைக்கப்பட்டன. காந்தாரக் கலையில் கிரேக்க நுட்பமும், இந்திய எண்ணமும், இந்திய கலைபாணியும் இணைந்து காணப்படுகின்றன. காந்தாரக் கலைச் சிற்பங்களும், உருவங்களும் கறுப்பு நிறக் கற்களால் உருவாக்கப்பட்டன. புத்தருடைய சிற்பங்கள் கிரேக்க கடவுள் அப்போலோவின் சிற்பங்களைப் போல் அமைந்துள்

மேற்கோள்கள்[தொகு]

Gandhara is also an ancient name for காந்தாரம், Afghanistan.

வார்ப்புரு:Indo-European= வார்ப்புரு:History of Pakistan Gandhāra (சமக்கிருதம்: गन्धार, வார்ப்புரு:Lang-pun, அவெஸ்தான் மொழி: Vaēkərəta, Old Persian: Para-upari-sena, Chinese: www.gandhara-art.com/exb.php www.gandhara-art.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தாரக்கலை&oldid=2915715" இருந்து மீள்விக்கப்பட்டது