காந்தவிசையேற்புத்திறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தவிசையேற்புத்திறன் (Magnetoception) என்பது விலங்குகளின் காந்தப் புலம் கொண்டு திசை, உயரம், இடம் போன்ற இருப்பிடம் அறியும் அறிவாகும். இந்த அறிவு பல விலங்கு மற்றும் பறவையினங்களுக்கு உண்டு, இதன் மூலம் தங்கள் இருப்பிடத்தை அறிந்து கொள்கின்றன. பூமியின் காந்தப் புலத்தை உணர்ந்து அதற்கேற்ப தங்கள் பயணங்களை செய்கின்றன. இந்த காந்தவிசையேற்புத்திறன், பாக்டீரியா, பறவைகள்(முக்கியமாக புலப்பெயரும் பறவைகள்), பூஞ்சை, பூச்சியினங்கள்(முக்கியமாக தேனீக்கள்), கடல்வாழுயிரினங்களான ஆமை, பெருங்கடல் நண்டு, சுறா போன்றவைகளுக்கு உள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.