காந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காந்தன் புகார் நகரத்தில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட சோழப் பெருவேந்தன். பரசுராமன் மன்னர் என்று யார் இருந்தாலும் அவர்களைக் கொன்று குவித்துக்கொண்டிருந்தான். அவனுக்குப் பயந்து காந்தன் மாறுவேடத்தில் இருந்தான். அந்தக் காலத்தில் சோழநாட்டை ஆளும் உரிமையை ககந்தனிடம் ஒப்படைத்திருந்தான். இந்தக் ககந்தன் என்பவன் காந்தனுக்கும் கணிகை ஒருத்திக்கும் பிறந்த மகன். அரசாளும் உரிமை இல்லாதவன். அதனால் இவனைப் பரசுராமன் கொல்லமாட்டான். [1]

இந்தக் ககந்தனின் மகன் மருதி (பார்ப்பினி) என்பவளைத் தன் ஆசைக்கு இணங்கும்படி அழைத்தான். [2] மருதி கற்புடையவள். இதனை அறிந்த ககந்தன் தன் மகனை வேட்டி வீழ்த்தினான் என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகிறது. [3]

மேற்கோள்[தொகு]

  1. மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
    தன்முன் தோன்றல் தகாதுஒழி நீஎனக்
    கன்னி ஏவலின் காந்த மன்னவன்
    இந்நகர் காப்போர் யார்என நினைஇ
    நாவலம் தண்பொழில் நண்ணார் நடுக்குறக் 30
    காவல் கணிகை தனக்குஆம் காதலன்
    இகழ்ந்தோர் காயினும் எஞ்சுதல் இல்லோன்
    ககந்தன் ஆம்எனக் காதலின் கூஉய்
    அரசுஆள் உரிமை நின்பால் இன்மையின்
    பரசு ராமன்நின் பால்வந்து அணுகான் 35
    அமர முனிவன் அகத்தியன் தனாது
    துயர்நீங்கு கிளவியின் யான்தோன் றளவும்
    ககந்தன் காத்தல் காகந்தி என்றே
    இயைந்த நாமம் இப்பதிக்கு இட்டுஈங்கு
    உள்வரிக் கொண்டுஅவ் உரவோன் பெயர்நாள் 40
    - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
    22 சிறைசெய் காதை

  2.  தெள்ளுநீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
    பார்ப்பனி மருதியைப் பாங்கோர் இன்மையின்
    யாப்புஅறை என்றே எண்ணினன் ஆகிக்
    காவிரி வாயிலில் ககந்தன் சிறுவன்
    நீவா என்ன, நேர்இழை கலங்கி 45
    - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
    22 சிறைசெய் காதை

  3.  ஈங்குஎழு நாளில் இளங்கொடி நின்பால் 75
    வாங்கா நெஞ்சின் மயரியை வாளால்
    ககந்தன் கேட்டுக் கடிதலும் உண்டுஎன
    இகந்த பூதம் எடுத்துரை செய்ததுஅப்
    பூதம் உரைத்த நாளால் ஆங்குஅவன்
    தாதை வாளால் தடியவும் பட்டனன். 80
    - மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் இயற்றிய மணிமேகலை
    22 சிறைசெய் காதை

"https://ta.wikipedia.org/w/index.php?title=காந்தன்&oldid=2433776" இலிருந்து மீள்விக்கப்பட்டது