காத்தி ஓல்கின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காத்தி ஓல்கின்
Cathy Olkin
கல்வி கற்ற இடங்கள்மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனம்
ஆய்வு நெறியாளர்ஜேம்சு எல். எலியட்
இணையதளம்
http://www.boulder.swri.edu/~colkin/CathyOlkin/About_Me.html

காத்தி ஓல்கின் (Cathy Olkin) ஓர் அமெரிக்கக் கோள் அறிவியலாலர் ஆவார். இவர் தென்மேற்கு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது ஆய்வு புறவெளிச் சூரியக் குடும்பம் ஆகும். இவர் வியாழனைச் சுற்றியுள்ள திரோயன் சிறுகோள்களை ஆயும் நாசாவின் உலூசி இலக்குத் திட்டக்கல இணை முதன்மை ஆய்வாளர் ஆவார்.[1] இத்திட்டக் கலம் 2021 இல் ஏவப்பட உள்ளது. இது தன் இலக்குகளை 2025 முதல் 2033 வரைக் கடந்து செல்லும்.[2]

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் மிச்சிகானில் பிறந்து வளர்ந்தார். இவர் சிறுமியாக இருந்தபோது, புவியியல், தொல்லுயிரியல், தொல்லியல், மருத்துவம் உட்பட அறிவியலிலும் கல்விப் புலங்களிலும் பல வாழ்க்கைப்பணிகளை கருதிப் பார்த்துள்ளார்.[3]

இவர் கல்லூரியில் பொறியியலுக்கு மாறுமுன் மருத்துவத் தொடக்கநிலையைப் பயின்றுள்ளார்.[3] இவர் பொறியியலில் வான்பயணவியலிலும் விண்வெளிப் பரப்பியலிலும் 1988 இல் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளம் அறிவியல் பட்டமும்1989 இல் சுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் மூதறிவியல் பட்டமும் பெற்றார். பின்னர் ஓல்கின் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்துக்குத் திரும்பினார். இங்கு இவர் 1996 இல் வளிமண்டல, கோள் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[4] இவரது ஆய்வுரைக்கான அறிவுரையாளர் ஜேம்சு எல். எலிய்ட் ஆவார்.[5]

வாழ்க்கைப்பணி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Franz, Julia (January 29, 2017). "Two new NASA missions look to asteroids for clues about our early solar system". Public Radio International. https://www.pri.org/stories/2017-01-29/two-new-nasa-missions-look-asteroids-clues-about-our-early-solar-system. பார்த்த நாள்: 30 May 2017. 
  2. "NASA Selects Mission to Study Jupiter's Trojan Asteroids". NASA. January 4, 2017. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. 3.0 3.1 Crigger, Megan (July 24, 2015). "Meet three scientists behind the Pluto mission". PBS NewsHour. https://www.pbs.org/newshour/updates/meet-three-scientists-behind-the-pluto-mission/. பார்த்த நாள்: 30 May 2017. 
  4. "Cathy Olkin - Experience & Education". www.boulder.swri.edu. Southwest Research Institute. Archived from the original on 16 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 May 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Beatty, Kelly (2011-03-10). "Remembering James Elliot, 1943–2011" (in en-US). Sky & Telescope. http://www.skyandtelescope.com/astronomy-news/remembering-james-elliot-19432011/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காத்தி_ஓல்கின்&oldid=3537087" இலிருந்து மீள்விக்கப்பட்டது