காத்திருப்பு சுவர்ணபுரீஸ்வரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:சன்னதி தெரு, காத்திருப்பு, சீர்காழி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சீர்காழி
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:சுவர்ணபுரீஸ்வரர்
தாயார்:சொர்ணாம்பாள்
சிறப்புத் திருவிழாக்கள்:வைகாசி விசாகம், சோமவாரம், தனுர் பூஜை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

காத்திருப்பு சுவர்ணபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், காத்திருப்பு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு[தொகு]

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு[தொகு]

இக்கோயிலில் சுவர்ணபுரீஸ்வரர், சொர்ணாம்பாள் சன்னதிகளும், விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் மூன்று காலப் பூசைகள் நடக்கின்றன. வைகாசி மாதம் வைகாசி விசாகம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை, மார்கழி மாதம் சோமவாரம், தனுர் பூஜை திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]