காதோலை கருகமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காதோலை கருகமணி அந்தக் காலத்தில் சுவாசினிகள் இன்றுபோல திருமாங்கல்யம் அணியும் முறை கிடையாது. சுமங்கலிப் பெண்கள் அணிவது கருகமணியும், பனை ஓலையால் ஆன காதணியும் தான். இன்றும் இல்லங்களில் வர-மகாலட்சுமி அம்மனை அலங்காரம் செய்கையில், இந்தக் காதோலை-கருகமணி (வெளிர்சிவப்பு நிறத்தில் சுருட்டப்பட்ட பனை ஓலை ஒரு கருப்பு நிற சிறு வளையத்துள் நுழைத்தது) சார்த்தப்படுகிறது.

ஆடி 18 நாளன்று கன்னிமார் பூசைக்கு படைக்கப்படும் காதோலை கருகமணி

அணிகலன்கள்[தொகு]

காதோலை[தொகு]

காதோலை என்பது பனை ஓலையால் செய்யப்பட்ட சுருள் வடிவிலான ஒரு அணிகலன் ஆகும். தமிழ்நாட்டில் கூடலூர் பகுதியில் பனியர், கரும்பர், காட்டுநாயக்கர் இன மக்கள் பனை ஓலையில் செய்த காதோலையை பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தாளம் செடியின் இலை, கருகமணி, கொசுதேனடை ஆகியவற்றைப் பயன்படுத்தி காதோலையை செய்கின்றனர். [1]

ஆடி பெருக்கு விழா[தொகு]

ஆடிப்பெருக்கு நாளில் கன்னிமார் தெய்வம் வழிபடல். கன்னிமார் சாமி அருகே காதோலை கருகமணி.

ஆடிமாதம் 18ம் நாள் ஆடிபெருக்கு விழா காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விவசாயிகளும், புதுமணத் தம்பதிகளும், இளம் பெண்களும் குடும்பத்துடன் காவிரி ஆற்றுக்கு வந்து அாிசி, பழங்கள், அவல், மலர்கள் ஆகியவற்றை வைத்துப் படையலிடுவார்கள். சுமங்கலிப் பெண்கள் காவிரி ஆற்றுக்கு வந்து எப்போதும் தங்கள் வாழவும், வளமும் குன்றாமல் இருக்க வேண்டும் எனக் காவிரித்தாயிஎஔல்டம் வேண்டிக் கொண்டு ஒருவருக்கொருவர் புதிய மஞ்சள் நூலை அணிந்து கொள்வார்கள்.

புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமணத்தின்போது அணிந்து கொண்ட மாலைகளை வீட்டில் பத்திரப்படுத்தி வைத்து அதனை ஆடிப்பெருக்கு விழாவின்போது கொண்டு வந்து ஆற்றில், குளத்தில் விடுவது வழக்கும். அதேபோல புதுமணத் தம்பதிகளின் தாலிகயிற்றை பிரித்து புதிதாக அணிந்து கொள்ளும் வழக்கமும் இந்நாளில் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் பனைஓலையால் செய்யப்பட்ட காதோலையையும், கருப்பு வளையல், குங்குமம் ஆகியவற்றைக் கொண்ட கருகமணியையும் இணைத்துக் காவிரித் தாய்க்குப் படையலிடுவது வழக்கம்.

இந்தக் காதோலை கருகமணியைக் கும்பகோணம் அருகே பாபுராஜபுரத்தில் உள்ள சிலர் கடந்த இருபது ஆண்டுகளாகச் செய்து, தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். ஆடிப்பெருக்கு, வரலட்சுமி நோன்பு, மாசி மகத் தீர்த்தவாரி ஆகிய தினங்களில் காதோலை கருகமணியை நீர்நிலையில் வைத்து படையல் செய்வது வழக்கம். ஆடிப்பெருக்கின் போது இந்த காதோலையும், கருகமணியும் படையலில் முக்கியமாக இருக்கும். [2]

வரலட்சுமி விரதம்[தொகு]

இந்து சமயத்தில் வரலட்சுமி விரதம் இருப்பவர்கள் தங்கள் வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டம் அமைத்து அதில் சந்தனத்தால் ஆன வரலட்சுமியின் முகம் செய்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் மஞ்சள் ஆடை, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து வழிபடுகின்றனர்.[3]

தயாரிப்பு முறை[தொகு]

பனை ஓலைகளை நறுக்கி வெயிலில் காய வைத்து இளம் சிவப்பு வணம் கலந்த கொதிக்கும் நீரில் இட்டு பனை ஓலைகளுக்கு சாயமேற்றுகின்றனர். அதன் பின் சாயமேற்றப்பட்ட ஓலைகளை நறுக்கி சுருளாக சுற்றி அதில் கருநிற வலையளை பொருத்திவிடுகின்றனர்.[4]

காதோலை கருகமணிகளை தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே 69 சாத்தனூர், வேப்பத்தூர் மற்றும் கும்பகோணம் அருகே பாபுராஜபுரம் ஆகிய ஊர்களில் தயாரிக்கின்றனர். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. அழிவின் விளிம்பில் 'காதோலை' - அக் 11, 2018 - தினமலர் நாளேடு.
  2. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=235487
  3. வரலட்சுமி விரத பூஜை - ஆன்மீக செய்திகள் -ஆகஸ்ட் 07,2019 - தினமலர் நாழேடு
  4. ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570
  5. ஆடிபெருக்கு விழாவையொட்டி காதோலை கருகமணி தயாரிப்பு பணி மும்முரம் - தினகரன் நாளிதழ் https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=424570
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதோலை_கருகமணி&oldid=3011429" இருந்து மீள்விக்கப்பட்டது