காதோலை கம்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காதோலை கம்மல் என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மலையின் பந்தலூர், கூடலூர், எருமாடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பனியர் இனத்து பழங்குடி மக்கள் அணியும் வண்ணமயமாய் பாரம்பரியக் காதணி ஆகும்.[1] நகர நாகரீகத்தின் தாக்கத்தால் இந்தக் கம்மல் அணிவது தண்டட்டியைப் போல அருகிவருகிறது. இதனால் பனியர் இனத்து பெண்களில் சிலர் மட்டும் இன்னமும் இந்தக் காதோலை அணிந்துவருகின்றனர். இந்தக் காதணியை இந்த மக்களே செய்து கொள்கின்றனர். இந்தக் கம்மலை அணிவதற்காக காதுத்துளையை வளர்ந்து பின்னர், இரண்டு அங்குல விட்டமுள்ள காது துவாரத்தில் காதணி அணியப்படுகிறது.

காதணி செய்யும் முறை[தொகு]

முதலில் கைதை சக்கை என்னும் ஒரு காட்டு மரத்தின் ஓலையை, தண்ணியில் வேகவைக்கின்றனர். ஓலை வெந்தபிறகு வெளியில எடுத்து காயவெத்து, மலைத் தேன் மெழுகை ஓலையில் தடவி ஓலையை வேண்டிய அளவுக்கு சுருட்டி அதில் பாசிமணிகளை ஒட்டுவார்கள் (முற்காலத்தில் சிவப்பு, பச்சை என வண்ணமயமான மர விதைகளை ஒட்டியுள்ளனர், பின்னர் பாசி மணிகளை ஒட்டும் பழக்கம் வந்துள்ளது). பின்னர் மூன்று நாட்கள் அதை உலரவைத்து பின்னர் காதில் அணிவார்கள். தேன் மெழுகால மெருகேத்துவதால் இந்தக் கம்மல் ஒன்றரை ஆண்டுகள்வரை பயன்படுத்த இயலும், பின்னர் இதேபோல புதியதாக வேறொரு காதணியைச் செய்து அணிந்துகொள்வர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆர்.டி.சிவசங்கர் (2017 சனவரி 9). "நாகரீக கலாச்சாரத்தால் பாரம்பரிய காதணிகளை கைவிடும் பனியர்". செய்தி. தி இந்து. பார்த்த நாள் 7 சூலை 2017.
  2. கா.சு.வேலாயுதன் (2017 சூலை 6). "காணாமல் போகுதோ காதோலை கம்மல்!". செய்திக் கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 7 சூலை 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதோலை_கம்மல்&oldid=2350307" இருந்து மீள்விக்கப்பட்டது