காதல் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதல் பள்ளி
இயக்கம்பவித்ரன்
தயாரிப்புஎன். ஆர். தனபாலன்
கதைபவித்ரன்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. என். மோதி
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்என். ஆர். டி பிலிம் சர்க்யூட்
வெளியீடுஆகத்து 15, 1997 (1997-08-15)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காதல் பள்ளி 1997 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் சுவலட்சுமி நடிப்பில் பவித்ரன் இயக்கத்தில், தேவா இசையில், என். ஆர். தனபாலன் தயாரிப்பில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம்.[1][2][3][4][5]

கதைச்சுருக்கம்[தொகு]

பாலு (விக்னேஷ்), பல்லி (வையாபுரி), கோல்ட் (சுக்ரன்) மற்றும் கந்தன் (ஜவஹர்) ஆகிய நண்பர்கள் ஊட்டியில் வசிக்கின்றனர். பகலில் சுற்றுலா வழிகாட்டிகளாக பணியாற்றிக்கொண்டு இரவில் சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு பணமும் உணவும் கொடுத்து உதவி செய்பவள் மைனா(விசித்ரா). ஒரு நாள் அந்த ஊருக்கு வரும் சரக்குந்தில் வரும் இளம்பெண் உமாவை (சுவலட்சுமி) பாலு பார்க்கிறான். அவள் அந்த ஊருக்குப் புதியவள். அந்த ஊரில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் செல்லுமாறு பாலுவிடம் சொல்கிறாள். பிறகு தங்கும் விடுதிக்குச் சென்று தங்குகிறார்கள். அவர்களைப் பின்தொடர்ந்து வரும் மற்ற மூன்று நண்பர்கள் இவர்களைக் கண்காணிக்கின்றனர். விடுதிக்கு செலுத்த யாரிடமும் பணம் இல்லாததால் அங்கிருந்து தப்பித்து ஒரு கல்யாணத்தில் சாப்பிட்டு வீதியில் படுத்து உறங்குகின்றனர். அவர்கள் நால்வரும் தன்னை விரும்புவதை அறியும் உமா, தானும் அவர்களை விரும்புவதாகவும், அவர்களையே திருமணம் செய்துகொள்வதாகவும் தனித்தனியே உறுதியளிக்கிறார். அவர்கள் ஐவரும் ஒரே அறையில் சேர்ந்தே தங்குகின்றனர். அதே சமயத்தில் உமா காவல் துறையால் தேடப்படுகிறாள்.

ஒரு நாள் உமா மயங்கிவிழுகிறாள். அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார்கள். அவள் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் தெரிவிக்கிறார். உமாவின் பின்னணி என்ன? அவள் கர்ப்பத்திற்கு யார் காரணம்? என்பது மீதிக்கதை.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

முதலில் லைலாவை ஒப்பந்தம் செய்து பிறகு அவருக்குப் பதிலாக சுவலட்சுமி மாற்றப்பட்டார்.[6]

இசை[தொகு]

படத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர்கள் வைரமுத்து மற்றும் வாசன்.[7][8]

பாடல் வரிசை
வ.எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்கள் காலநீளம்
1 அச்சாணி வாசன் எஸ். ஜானகி 4:31
2 மொறு மொறு வைரமுத்து அனுராதா ஸ்ரீராம் 4:17
3 காதலி வைரமுத்து பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 5:14
4 மெசபடோமியா வாசன் மனோ 5:49
5 வொல்லன் கொத்தியா வைரமுத்து மனோ, சுவர்ணலதா 4:34

வரவேற்பு[தொகு]

இப்படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. இயக்குனர் பவித்ரன் "தயாரிப்பாளருக்கு சிறிதாவது லாபதைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் இப்படம் தயாரிப்பாளருக்கும் என் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தையே தந்தது."[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காதல் பள்ளி". https://spicyonion.com/movie/kathal-palli/. 
  2. "காதல் பள்ளி". http://www.gomolo.com/kadhal-palli-movie/12070. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "காதல் பள்ளி". http://www.cinesouth.com/cgi-bin/filmography/filmography.cgi?name=kadhal%20palli. 
  4. "காதல் பள்ளி". http://www.jointscene.com/movies/Kollywood/Kadhal_Palli/7464. 
  5. "a - z காதல் பள்ளி". http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-3.htm. 
  6. "லைலாவிற்கு பதில் சுவலட்சுமி". http://chandrag.tripod.com/aug98/index.html. 
  7. "பாடல்கள்". https://www.saavn.com/s/album/tamil/Kadhal-Palli-2014/gfjcpJxLHJM_. 
  8. "பாடல்கள்". http://mio.to/album/Deva/Kadhal+Palli+%281997%29. 
  9. "இயக்குனர் பவித்ரன் பேட்டி". http://www.chennaionline.com/interviews/pavithran.asp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_பள்ளி&oldid=3696283" இருந்து மீள்விக்கப்பட்டது