உள்ளடக்கத்துக்குச் செல்

காதல் கண் கட்டுதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதக் கண் கட்டுதே (Kadhal Kan Kattudhe (English: Love is Dazzling)) என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை இயக்கியது மற்றும் இணைந்து தயாரித்தது சிவராஜ் என்பவர் ஆவார். அறிமுக நடிகர்களான கேஜி, அதுல்யா, அனிருத் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். பின்னணி மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் பவன். 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்படமானது பெப்ரவரி 17, 2017 இல் வெளியானது.[1][2][3][4]

கதைச் சுருக்கம்

[தொகு]

அதுல்யா இதழ் செய்தியாளராக பணிபுரிபவர். கே ஜி இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே காதல் வருகிறது.அனிருத் என்பவர் செய்தியாளராக இருக்கிறார். இது ஒரு முக்கோணக் காதல் கதையாக உள்ளது. அதுல்யாவிற்கு பொள்ளாச்சிக்கு பணிமாற்றம் கிடைக்கிறது. அங்கு அவருடன் பணிபுரியும் அனிருத், அதுல்யாவிடம் தனது காதலைத் தெரிவிக்கிறார். அதுல்யா எந்த கருத்தும் தெரிவிக்காமலிருக்கிறார். இதனைத் தவறாகத் புரிந்துகொள்கிற கேஜி இவரை விட்டு பிரிந்து செல்கிறார். பிறகு இறுதில் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பதனை திரைக்கதை வழியே இறுதியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.

கதை மாந்தர்கள்

[தொகு]
  • கேஜி (சிவா)
  • அதுல்யா (அதுல்யா )
  • அனிருத் (கார்த்திக்)
  • சிவராஜ்

தயாரிப்பு

[தொகு]

இந்தத் திரைப்படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களின் அறிமுகப் படம் இதுவாகும். இதனைத் தொடங்கத் திட்டமிட்டது சிவராஜ். இவர் இந்தப்படத்தை இயக்கியது மட்டுமின்றி எழுத்தாளர், இணைத் தயாரிப்பு, ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர் ஆகிய பொறுப்புகளையும் இவரே ஏற்றுக்கொண்டார். மேலும் இவர் ஒரு துணைக்கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் நடத்தினர்.[5] இந்தப் படம் வெளியாவதற்கு முன்பாகவே கோயம்புத்தூரில் உள்ள கல்லூரிகளினால் நடத்தப்பட்ட பிராந்திய திரைப்பட விருதினைப் பெற்றது. திரைக்கதையினை செழுமைப்படுத்துவதற்காக இந்தப் படத்தின் இயக்குநர், சென்னையில் உள்ள் திரைப்படக் கல்லூரியில் உள்ள மாணவர்களிடம் திரையிட்டுக் காட்டினார்.[6] மாண்டேஜ் மீடியா புரொடக்சன்ஸ் நிறுவனம் இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவதற்கான உரிமையைப் பெற்றனர். இவர்கள் இந்தத்ப் படத்தைத் தேர்வு செய்வதற்கு முன்பாக சுமார் அறுபது குறைந்த நிதியில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தனர். இதற்கு முன்பாக இந்த நிறுவனம் மதுபான கடை எனும் திரைப்படத்தை 2012 ஆம் ஆண்டில் வெளியிட்டது.

வெளியீடு

[தொகு]

வேலன்டைன் நாளின் வாரத்தில் இந்தப்படத்தை வெளிடத் திட்டமிட்டு பெப்ரவரி 17, 2017 இல் இந்தப் படத்தை வெளியிட்டனர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழானது, சிறிய முதலீட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் அதன் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாக இது போன்ற சில நல்ல படங்கள் வருகிறது எனக் கூறியுள்ளது[7]. தி டெக்கன் குரோனிக்கள் இதழின் விமர்சகர்கள் மற்ற காதல் திரைப்படங்களைப் போலவே காதல் கண்கட்டுதே திரைப்படமும் காதல், காதல் முறிவு, மீண்டும் சேர்தல் போன்ற வழக்கமான திரைக்கதையில் சிறப்பான வசனங்களும், அறிமுக நடிகளின் சிறப்பான நடிப்பும் ஒரு சிறந்த அனுபவத்தைத் தருகிறது.[8] சிபி.காம் , இவர்களின் நேர்மையான படைப்பிற்காக பார்க்கலாம் எனவும் இதன் பலம் மற்றும் பலவீனம் ஆகிய இரன்டுமே இதன் அறிமுக நடிகர்கள் எனவும் தெரிவித்துள்ளது. இது பகடி ஆட்டம், என்னோடு விளையாடு படங்களோடு வெளியிடப்பட்டது.

சான்றுகள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-02-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
  2. "Friday Fury- Feb 17". sify.com. Archived from the original on 17 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 22 February 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. https://www.youtube.com/watch?v=EsbCEb58c8s&feature=youtu.be
  4. https://www.youtube.com/watch?v=yINDF9OPGIw&feature=youtu.be
  5. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/Tender-loving-care/article16758070.ece
  6. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/A-realistic-romance-this/articleshow/55153617.cms
  7. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kadhal-kan-kattuthe/movie-review/57220203.cms
  8. http://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/180217/kadhal-kan-kattudhe-movie-review-cool-and-breezy-film-worth-a-watch.html

வெளியிணைப்புகள்

[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் காதல் கண் கட்டுதே

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதல்_கண்_கட்டுதே&oldid=3659787" இலிருந்து மீள்விக்கப்பட்டது