காதர் அட்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காதர் அட்னான்
Khader Adnan
பிறப்புகாதர் அட்னான் முகம்மது மூசா
(1978-03-24)24 மார்ச்சு 1978
அரபா, மேற்குக் கரை
இறப்பு2 மே 2023(2023-05-02) (அகவை 45)
அயாலன் சிறைச்சாலை, இரம்ளா, இசுரேல்
இறப்பிற்கான
காரணம்
பட்டினி (உண்ணாநிலைப் போராட்டம்)
தேசியம்பாலத்தீனர்
அறியப்படுவதுஇசுரேலிய நிர்வாக தடுப்புக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம்
அரசியல் கட்சிபலத்தீனிய இசுலாமிய ஜிகாத்
பிள்ளைகள்9[1]

காதர் அட்னான் முகம்மது மூசா (Khader Adnan Mohammad Musa, அரபு மொழி: خضر عدنان محمد موسى‎; 24 மார்ச் 1978 – 2 மே 2023) என்பவர் ஒரு பாலத்தீனிய செயற்பாட்டாளரும், இசுரேலியக் கைதியும் ஆவார். இவர் விசாரணையின்றி காவலில் வைக்கப்பட்டதை எதிர்த்து 87 நாட்கள் உண்ணாநோன்பிருந்து இறந்தார். இவர் நிர்வாகக் காவலின் கீழ் 12 முறை சிறையில் அடைக்கப்பட்டார், இது இசுரேல் மற்றும் பலத்தீன தேசிய ஆணையம் ஆகிய இரண்டும் மக்களைக் காலவரையின்றி குற்றச்சாட்டுகள் அல்லது விசாரணையின்றி காவலில் வைக்கப் பயன்படுத்திய நடைமுறையாகும்.[1][2][3]

2000களின் முற்பகுதியில், பல நாடுகளால் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட பாலத்தீனத்தில் இசுலாமிய ஜிகாத் இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராக அட்னான் இருந்தார்.[4][5] குழுவில் உறுப்பினராக இருந்ததற்காக அவர் கடந்த காலத்தில் தண்டனை பெற்றிருந்தாலும், அவர் நான்கு ஆண்டுகளாக ஜிகாத் இயக்கத்துடன் தொடர்பு கொள்ளவில்லை என்று அவரது மனைவி 2012 இல் கூறியிருந்தார்.[6][7]

2011 திசம்பரில், அட்னான் கைது செய்யப்பட்டு நிர்வாகக் காவலில் வைக்கப்பட்டார், அடுத்த நாள், அவர் கைது செய்யப்பட்ட நிபந்தனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும், இசுரேலின் நிர்வாகத் தடுப்புக் கொள்கை, இசுரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் பாலத்தீனியர்களை நடத்துவது தொடர்பாகவும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். அட்னானின் கூற்றுப்படி, காதர் படுக்கையில் கட்டப்பட்டிருந்தும், பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவின் வருகை ரத்து செய்யப்பட்டது.[8] 2012 பெப்ரவரி 21 இல், இசுரேல் 2012 ஏப்ரல் 17 அன்று அட்னானை விடுவிக்க ஒப்புக்கொண்டது, அத்துடன் தனது 66-நாள் உண்ணாநிலைப் போராட்டத்தை உடனடியாக முடிக்க ஒப்புக்கொண்டார், இது பாலத்தீனிய வரலாற்றில் மிக நீண்ட உண்ணாநிலைப் போராட்டம் ஆகும்.[9][10][11][12][13]

அட்னான் இறுதியாக 2023 பெப்ரவரி 5 அன்று தடுத்து வைக்கப்பட்டார். 2023 மே 2 அன்று சிறையில் இறந்தார். மொத்தமாக ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் இசுரேலியக் காவலில் இவர் இருந்துள்ளார்[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Palestinian hunger striker Khader Adnan dies in Israeli prison". Al-Jazeera. 2 May 2023. Archived from the original on 2 May 2023.
  2. 2.0 2.1 "Palestinian Khader Adnan dies in Israel jail after 87-day hunger strike" (in en-GB). The Guardian. 2 May 2023. https://www.theguardian.com/world/2023/may/02/palestinian-khader-adnan-dies-in-israel-jail-after-87-day-hunger-strike. 
  3. "Palestinians rally in support of hunger strike prisoner" (in en-GB). BBC News. 17 February 2012 இம் மூலத்தில் இருந்து 14 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190114043342/https://www.bbc.com/news/world-middle-east-17079461. 
  4. "Islamic jihad leader held in West Bank; Israeli troops kill one man in Gaza". Al Arabiya. 17 December 2011. Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 1 July 2015.
  5. "Islamic Jihad rallies in Ramallah". Middle East Online. 24 June 2005. Archived from the original on 24 February 2012.
  6. Levy, Elior (22 February 2012). "MK Tibi: Adnan came out a winner". YNET இம் மூலத்தில் இருந்து 2 March 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120302065259/http://www.ynetnews.com/articles/0,7340,L-4193088,00.html. 
  7. Fabian, Emanuel; Fabian, Emanuel (2023-05-02). "Senior member of Islamic Jihad dies in Israeli prison after 86-day hunger strike". The Times of Israel. Archived from the original on 3 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
  8. "Adnan: 'The more they torture me, the more determined I become'". IMEMC News (in அமெரிக்க ஆங்கிலம்). 16 June 2015. Archived from the original on 27 January 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.
  9. Flower, Kevin; Khadder, Kareem (9 February 2012). "Palestinian detainee in Israel now more than 50 days into hunger strike". CNN இம் மூலத்தில் இருந்து 18 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120218104439/http://articles.cnn.com/2012-02-09/middleeast/world_meast_israel-palestinian-hunger-strike_1_israeli-prison-authority-israeli-human-rights-group-hunger-strike?_s=PM%3AMIDDLEEAST. 
  10. "Palestinian on hunger strike 'in critical condition'" (in en-GB). BBC News. 8 February 2012 இம் மூலத்தில் இருந்து 21 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220421064622/https://www.bbc.com/news/world-middle-east-16953052. 
  11. Cassel, Matthew. "'No food without freedom'". www.aljazeera.com (in ஆங்கிலம்). Archived from the original on 8 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-05-02.
  12. Glickman, Aviad (20 June 1995). "Palestinian detainee Adnan ends hunger strike – Israel News, Ynetnews". Ynetnews (Ynetnews.com) இம் மூலத்தில் இருந்து 23 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120423005633/http://www.ynetnews.com/articles/0,7340,L-4192881,00.html. 
  13. Alsaafin, Linah (21 April 2012). "'Hunger strike a signal to world's oppressed' – Features". Al Jazeera. Archived from the original on 8 August 2022. பார்க்கப்பட்ட நாள் 2 May 2023.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காதர்_அட்னான்&oldid=3805401" இலிருந்து மீள்விக்கப்பட்டது