காணாதுகண்டான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காணாதுகண்டான் (Kanathukandan) என்பது தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டத்தில் உள்ள கிராமமாகும். இது விருத்தாச்சலம் - நெய்வேலி சாலையில் ஐந்தாவது கிலோமீட்டரில் உள்ளது. இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 65 கி.மீ. தொலைவிலும், விருதாச்சலத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 236 கி.மீ தொலைவிலும் உள்ளது.[1] இந்தக் கிராமத்தில் முந்நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறன. இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.

இந்க கிராமத்தில் உள்ள பெண்களின் கழுத்தில் தாலிக் கயிறு, தாலிச் சங்கிலி போன்றவற்றை மட்டுமே ஆணிகின்றனர் ஆனால் தாலி அணிவதில்லை. திருமணத்தின்போது தாலி கட்டியே திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் திருமணத்துக்குப் பிறகு, குடும்பம் தழைக்க விரைவில் ஒரு வாரிசை வேண்டி பிடாரி அம்மனை வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும். அதற்குக் காணிக்கையாக, குழந்தை பிறந்ததும் தாலியை தனியாகப் பிரித்துக் கடையில கொடுத்து பொட்டாக அடித்து பிடாரி அம்மனுக்கு போட்டுவிடுவர்.

பிறக்கும் குழந்தையும், கணவனும் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டுமென்று பிடாரியை வேண்டிக்கொண்டு அதற்கு காணிக்கையாக கணவன் அணிவித்த தாலியை செலுத்துவதால் அதன்பிறகு இவர்கள் தாலி போடுவதில்லை வெறும் கயிறோ சங்கிலியோ தான் கழுத்தில் அணிவர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kanathukandan". http://www.onefivenine.com. 11 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  2. "பிடாரிக்குத் தாலி கொடுக்கும் பெண்கள்! - இது காணாதுகண்டான் அதிசயம்". செய்திக் கட்டுரை. தி இந்து. 2017 சூலை 11. 11 சூலை 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணாதுகண்டான்&oldid=2365712" இருந்து மீள்விக்கப்பட்டது