உள்ளடக்கத்துக்குச் செல்

காட் ஆஃப் வார்:செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட் ஆஃப் வார்: செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ் என்பது மூன்றாம் நபர் அதிரடி-சாகச நிகழ்பட ஆட்டம் ஆகும், இது ரெடி அட் டான் மற்றும் சாண்டா மோனிகா ஸ்டுடியோவால் உருவாக்கப்பட்டது, மேலும் சோனி கம்ப்யூட்டர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டது. இது முதன்முதலில் பிளேஸ்டேஷன் போர்ட்டபிள் (பிஎஸ்பி) கையடக்க முனையத்திற்காக மார்ச் 4, 2008 அன்று வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டு காட் ஆஃப் வார் தொடரில் நான்காவது பதிப்பாகும், இரண்டாவது காலவரிசைப்படி, அசல் காட் ஆஃப் வாரின் தொடர்ச்சியாகும் . கிரேக்க புராணங்களில் உள்ள பழிதீர்க்கும் கதையினை அடிப்படையாகக் கொண்டது.ஒலிம்பியன் கடவுள்களுக்கு சேவை செய்யும் ஸ்பார்டன் வீரரான கதாநாயகன் க்ராடோஸை இந்த விளையாட்டினை விளையாடும் வீரர் கட்டுப்படுத்தும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. அதெனா எனும் பெண் கடவுளால் இவர் வழிநடத்தப்படுகிறார். அவர் சூரியக் அகடவுளாஅன ஹீலியஸ் என்பவரைத் தேடிக் கண்டுபிடிக்குமாறு அறுவுறுத்துகிறார்.ஹீலியச் இல்லாத நேரத்தில் மார்பியஸ் என்பவர் மக்களைத் துன்புறுத்துகிறான்.

தரவரிசையில் விமர்சகர்கள் மற்றும் விளையாட்டு தரவரிசைகளில் 5 வது இடத்தைப் பிடித்தது, . 1UP இந்த விளையாட்டு தொழில்நுட்ப காட்சி, மற்றும் கணினியில் சிறந்த தோற்றமுடைய விளையாட்டு என்று கூறியது.[1] இது "சிறந்த பிஎஸ்பி அதிரடி விளையாட்டு", "சிறந்த வரைகலை தொழில்நுட்பம்" மற்றும் "சிறந்த ஒலிப் பயன்பாடு" உட்பட பல விருதுகளை வென்றது. செப்டம்பர் 2010 இல், கேம் ப்ரோ இந்த விளையாட்டினை சிறந்த PSP விளையாட்டாக அறிவித்தது. ஜூன் 2012 க்குள், இந்த விளையாட்டு உலகளவில் 3.2 மில்லியன் பிரதிகள் விற்றது, இது ஆனித்துக் காலத்திலும் சிறந்த விற்பனையான நான்காவது பிளேஸ்டேஷன் போர்ட்டபிள் விளையாட்டு ஆகும் .

விளையாட்டு

[தொகு]

காட் ஆஃப் (God of War ) ஒரு மூன்றாம் நபர் சாகச கானொளி விளையாட்டு ஆகும். மெய்நிகர் ஒளிப்படக் கருவி அமைப்பு மூலமாக இதனைக் கானும்வகையில் விளையாட்டானது அமைக்கப்பட்டிருக்கும். இந்த விளையாட்டினை விளையாடுபவர்கள் கதையின் நாயகனான கிராடோஸ் என்பவரினைக் கட்டுப்படுத்தலாம் மேலும் புதிர் விளையாட்டு மற்றும் போர்களில் கிரேக்கம் புராண இறவாத வீரர்கள், உள்ளிட்ட பகைவர்களை , மெதூசா மற்றும் கோர்கன், சைக்ளோப்ஸின், ராய்த்ஸ , செண்ட்டார்கள், மற்றும் எதிரிகள்- ஹைட்ரா மற்றும் பண்டோராவின் கார்டியன் என்று அழைக்கப்படும் ஒரு மாபெரும் மினோட்டோர் போன்றவற்றில் கிராடோசின் செயல்களைக் கட்டுப்படுத்தலாம்.[2] விளையாடும் போது அந்த வீரர் சுவர்கள் மற்றும் ஏணிகளை ஏற வேண்டும், இடைவெளிகளில் குதிக்க வேண்டும், கயிறுகளில் ஊசலாடலாம், மேலும் விளையாட்டின் பிரிவுகளைத் தொடர விட்டங்களின் குறுக்கே சமப்படுத்த வேண்டும். சில புதிர்கள் பெட்டியை நகர்த்துவது போன்று எளிதானதாக இருக்கும். ஆனால் மற்றவை மிகவும் சிக்கலானவை, அதாவது விளையாட்டின் வெவ்வேறு பகுதிகளில் பல உருப்படிகளைக் கண்டுபிடிப்பது அடுத்த பகுதிக்குச் செல்வற்கான ஒரு கதவைத் திறக்க வேண்டும்.[2]

விருது

[தொகு]

ஐ.ஜி.என் இன் பெஸ்ட் ஆப் 2008 விருதுகளில், செயின்ஸ் ஆஃப் ஒலிம்பஸ் "சிறந்த பிஎஸ்பி அதிரடி விளையாட்டு விருது வென்றது",[3] "சிறந்த வரைகலை தொழில்நுட்பம்",[4] மற்றும் "சிறந்த ஒலியின் பயன்பாடு" ஆகியவற்றுக்கான விருதுகளைப் பெற்றது.[5] கேம்ஸ்பாட்டின் 2008 ஆம் ஆண்டின் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த விளையாட்டுக்கான விருதினைப் பெற்றது.[6][7] செப்டம்பர் 2010 இல், கேம் ப்ரோ காட் ஆஃப் வார்: செயின்ஸ் ஆஃப் ஒலிம்பசை சிறந்த பி எஸ் பி விளையாட்டுக்குத் தேர்வானது.[8]

சான்றுகள்

[தொகு]
  1. Leone, Matt (February 19, 2008). "Reviews: God of War PSP". 1UP. Ziff Davis Media. Archived from the original on November 20, 2012. பார்க்கப்பட்ட நாள் February 21, 2008.
  2. 2.0 2.1 SCE Santa Monica Studio, ed. (2005)
  3. "IGN Best of 2008: Best Action Game (PSP)". IGN. Ziff Davis Media. 2008. Archived from the original on November 20, 2012. பார்க்கப்பட்ட நாள் February 13, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. "IGN Best of 2008: Best Graphics Technology (PSP)". IGN. Ziff Davis Media. 2008. Archived from the original on November 20, 2012. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "IGN Best of 2008: Best Use of Sound (PSP)". IGN. Ziff Davis Media. 2008. Archived from the original on November 20, 2012. பார்க்கப்பட்ட நாள் July 21, 2012. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. "GameSpot's Best Games of 2008 – Best PSP Games". GameSpot. CBS Interactive. 2008. Archived from the original on November 4, 2012. பார்க்கப்பட்ட நாள் February 13, 2012.
  7. "God of War: Chains of Olympus (psp: 2008): Reviews". Metacritic. CBS Interactive. பார்க்கப்பட்ட நாள் May 29, 2008.
  8. Noble, McKinley (September 23, 2010). "The 10 Best PSP Games". GamePro. Archived from the original on October 1, 2010. பார்க்கப்பட்ட நாள் September 28, 2010.