காட்டெருது குதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காட்டெருது குதிப்பு என்பது அமெரிக்கக் காட்டெருதுகளை வேட்டையாட, அமெரிக்க பழங்குடிகள் வரலாற்றுக்காலந்தொட்டு பயன்படுத்திவந்த ஒரு வேட்டை முறையாகும்.

தென் அமெரிக்காவில் உள்ள ஒரு காட்டெருது குதிப்பு முனை
காட்டெருதுகள் பாறைமுனையில் விழுவதைக் காட்டும் ஆல்பர்ட் ஜகோப் மில்லர் வரைந்த 19 ஆம் நூற்றாண்டு ஓவியம்.

வேட்டை முறை[தொகு]

வேட்டைக்காரர்கள் தாங்கள் எண்ணிய திசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தைநோக்கி மலையில் காட்டெருதுக் கூட்டத்தைத் துரத்திச் செல்வார்கள். அந்த எருதுக்கூட்டம் வேறு வழியின்றி அந்த மலைச் சரிவில் தலை குப்புற விழ ஆரம்பிக்கும். மலையின் கீழ் வேட்டைக்கார்ர்களின் இன்னொரு குழு காத்திருக்கும் கீழே விழுந்து காயம்பட்ட எருதுகளை எளிதாக்க் கொன்று எடுத்துச் செல்வார்கள் இவ்வாறு எளிதாக இந்த வேட்டையை எளிமையாக நடத்தினார்கள். இந்த வேட்டை முறை சுமார் 12,000 ஆண்டுகள் முதல் இருந்ததாக அறியப்படுகிறது. குதிரைகளின் பயன்பாடு வந்த பிறகு கூட்டமாக எருதுகளை வேட்டையாட வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. கிபி 1500 வரை மிகுதியாக நடந்த வேட்டை நிகழ்வாக இது இருந்தது. இதேபோல் கலைமான் போன்ற மேய்ச்சல் மந்தை விலங்குகளும் வேட்டையாடப்பட்டன, எந்தக் கருவிகளையும் பயன்படுத்தாமல், பெரிய அளவில் போராட்டங்களை நடத்தாமல் வேட்டையை எளிமையாக நடத்த பழங்குடியினர் கண்டுபிடித்த ஒரு சிறப்பான முறை என நம்பப்டுகிறது..[1]

காட்டெருது குதிப்பு குன்று முனைகளை கற்குவைகளைக் கொண்டு அடையாளப்படுத்தி வைத்திருப்பார்கள். அதை அடைய மலையில் சில குறிபான்களையும் அமைத்து இருப்பார்கள் இந்தப்பாதைகள் சில பல மைல் நீண்டு இருக்கும்.

இன்று எருது குதிப்பு இடங்கள் பாரம்பரியச் சின்னங்களாகப் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. இந்த இடங்களில் பூர்வக்குடி மக்களின் எருது வேட்டை குறித்த ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், அவர்களின் இருப்பிடங்கள், வரலாறு போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இது அந்தக் கால வேட்டை

மேற்கோள்கள்[தொகு]

  1. A Buffalo Jump பரணிடப்பட்டது 2014-11-24 at the வந்தவழி இயந்திரம், Discovering Lewis and Clark, The Lewis and Clark Fort Mandan Foundation
  2. Mass Kills.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டெருது_குதிப்பு&oldid=3580529" இலிருந்து மீள்விக்கப்பட்டது