காட்டூர் திருவாலீஸ்வரர் கோயில்
அருள்மிகு திருவாலீஸ்வரர் கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | திருவள்ளூர் |
அமைவிடம்: | காட்டூர், பொன்னேரி வட்டம்[1] |
சட்டமன்றத் தொகுதி: | பொன்னேரி |
மக்களவைத் தொகுதி: | ஸ்ரீபெரும்புதூர் |
கோயில் தகவல் | |
மூலவர்: | திருவாலீஸ்வரர் |
தாயார்: | திரிபுரசுந்தரி |
சிறப்புத் திருவிழாக்கள்: | பங்குனி உத்திரம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர்[2] |
காட்டூர் திருவாலீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், காட்டூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயில் சென்னையிலிருந்து 33 கி.மீ தொலைவிலும், மீஞ்சூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]இக்கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது.[2]
கோயில் அமைப்பு
[தொகு]இக்கோயில் அழகிய இராச கோபுரத்துடன் அமைந்துள்ளது. இராச கோபுரம் ஐந்து நிலைகளுடன், கிழக்கு நோக்கி உள்ளது. இக்கோயிலில் திருவாலீசுவரர், திரிபுரசுந்தரி சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. கோயில் கருவறை கஜபிருஷ்ட (தூங்கானை மாடம்) விமானத்துடன் உள்ளது.[3] கருவறையில் ஈசன் சதுரபீட ஆவுடையாருடன் சிவலிங்க பாண அமைப்புடன் உள்ளார். கருவறைக்கு நேர் எதிரே வாலியின் சிலை பிரதிட்டை செய்யபட்டுள்ளது. இச்சிலை 2011 இல் நிறுவப்பட்டதாக தெரிகிறது. விநாயகர், முருகர், நடராசர், நவக்கிரகங்கள், கோட்டமூர்த்திகள் ஆகியோரின் திருமுன்கள் இக்கோயிலில் அமைந்துள்ளன. பொதுவாக எல்லா கோயில்களிலும் நவக்கிரக சிற்றாலயமானது கோயிலின் வழகிழக்கு திசையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் இக்கோயிலில் தென்கிழக்கு மூலையில் நவக்கிரக சிற்றாலயம் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். இக்கோயிலின் அம்மனான திரிபுரசுந்தரியின் திருமுன் தெற்கு பார்த்த நிலையில் உள்ளது. கருவறையில் அம்மன் நான்கு கரங்களுடன் உள்ளார். கையில் பாசாங்குசம் ஏந்தி அபய, வரத முத்திரைகளுடன் காட்சியளிக்கிறார்.[2]
கோயிலின் தலமரமாக மகிழமரம் உள்ளது. இக்கோயிலில் பல இதழ்களைக் கொண்ட மகாவில்வ மரம் உள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிருவகிக்கப்படுகிறது.[4]
பூசைகள்
[தொகு]இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் பங்குனி உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 2.0 2.1 2.2 2.3 "சதுர பீடத்தில் அருளும் காட்டூர் ஸ்ரீவாலீசுவரர்". Hindu Tamil Thisai. 2023-06-22. பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
- ↑ "Tiruvalleeswarar Kattur". Million Gods (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-23.
- ↑ "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)