காட்டு வீர ஆஞ்சநேயர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

காட்டுவீர ஆஞ்சநேயா் கோயில் என்பது தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருட்டிணகிரியை ஒட்டிய தேவசமுத்திரம் என்ற பகுதியில் உள்ள ஒரு ஆஞ்சநேயர் கோயிலாகும். ஆஞ்சநேயர் கோயில்களில் பல இடங்களில் பல 'தோற்றங்களில் காட்சியளிப்பாா். ஒரு சில இடங்களில் நின்றவாறும் ஒருசில இடங்களில் சுவாில் சாய்ந்தவாறும் காட்சியளிப்பாா். காட்டுவீர ஆஞ்சநேயா் இங்கு சாய்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாா்.

கோயில் இருப்பிடம்[தொகு]

இந்த காட்டு வீர ஆஞ்சநேயா் கோவிலானது, கிருஷ்ணகிாி புதிய பேருந்து நிலையம் செல்லும். சேலம் புறவழிச் சாலையின் அருகே, கிருஷ்ணகிாி நகாிலிருந்து புறவெளியில் இயற்கை எழிலுடன் அமைந்துள்ளது.

கோவில் தோன்றிய வரலாறு[தொகு]

ஸ்ரீகாட்டு வீர ஆஞ்சநேயா் கோவில் 500 வருடங்களுக்கு முன்பு தோன்றிய மிகப்பழமை வாய்ந்த கோவிலும். முதலில் ஒரு கற்பாறையில் ஆஞ்சநேயரின் உருவம் செதுக்கப்பட்டு பிற்காலத்தில் அங்கு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலை சுற்றிய பகுதிகள் அக்காலத்தில் வனமாக இருந்ததால் இது காட்டுவீர ஆஞ்சநேயர் கோயில் என்று பெயர்பெற்றது.[1] ஆஞ்சநேயருக்கு அருகில் யோக நரசிம்மர், லட்சுமி தாயார் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வளரும் நந்தீஸ்வரா்[தொகு]

இக்கோவிலின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது வளரும் நந்திஸ்வரர் ஆவாா். மூலஸ்தானத்திலிருந்து இடதுபுறமாக, கோவிலின் வெளிபுறம் பாறையின்மீது நந்திஸ்வரர் மிக அழகான தோற்றத்துடன் காட்சியளிக்கிறாா். இந்த நந்தி வளர்ந்து வருவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

பிராா்த்தினை தேங்காய்[தொகு]

இக்கோயிலில் பக்தா்கள் ஏதாவது ஒன்றை வேண்டிக்கொண்டு, அது நிறைவேறுதற்காகப் பிராா்த்தனை தேங்காய் கட்டுவாா்கள். இப்பிராா்த்தனை தேங்காய் கட்டிய மூன்று மாதத்திற்குள் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அருள்மிகு காட்டு வீர ஆஞ்சநேயா் திருக்கோயில்". தினமலர். பார்த்த நாள் 18 ஆகத்து 2017.
  2. "கஷ்டங்களை போக்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்". தினகரன். பார்த்த நாள் 18 ஆகத்து 2017.