உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டு நாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டு நாகம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பாம்பினம்
பேரினம்:
நாகம்

Gunther, 1864
இருசொற் பெயரீடு
Naja melanoleuca
காட்டு நாகம் காணப்படும் இடங்கள்

காட்டு நாகம் (forest cobra, black cobra அல்லது black and white-lipped cobra; அறிவியல் பெயர்: Naja melanoleuca) என்பது நாக வகையைச் சேர்ந்த நஞ்சுள்ள பாம்பினம் ஆகும்.[1] இது ஆப்பிரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள வெப்பவலய மற்றும் மிதவெப்பவலயக் காடுகளில் காணப்படுகின்றது.[2] சுமார் 10 அடி நீளம் வரை வளரும் இதுவே நாக இனங்களில் மிகப்பெரிய அளவுடையது ஆகும். இது நீரிலும் நன்றாக நீந்தவல்லது.

சொற்தோற்றம்[தொகு]

காட்டு நாகத்தின் அறிவியல் பெயர் Naja melanoleuca. இதில் Naja என்ற லத்தீன் சொல்லானது நாகம் என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.[3] melanoleuca என்றால் பண்டைய கிரேக்க மொழியில் கருப்பு (melano) வெள்ளை (leuca) என்று பொருள்.[4][5] இந்த இனம் கருநாகம் மற்றும் கருப்பு வெள்ளை உதட்டுடைய நாகம் ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Naja melanoleuca". Clinical Toxinology Resource. University of Adelaide. Archived from the original on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2014-03-22.
  2. Mattison, C. (2007). The New Encyclopedia of Snakes. New York City: Princeton University Press. p. 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-691-13295-X.
  3. "Naja". The Free Dictionary. Princeton University. பார்க்கப்பட்ட நாள் 10 January 2014.
  4. "melano". Merriam-Webster Medical Dictionary. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
  5. "leuc-". Merriam-Webster Medical Dictionary. பார்க்கப்பட்ட நாள் 10 March 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_நாகம்&oldid=3581185" இலிருந்து மீள்விக்கப்பட்டது