காட்டுப் பக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுப் பக்கி
Jungle nightjar DM 0309 (cropped).jpg
Caprimulgus indicus in Anamalai hills, southern India
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கேப்ரிமுல்கிபார்மஸ்
குடும்பம்: Caprimulgidae
பேரினம்: Caprimulgus
இனம்: C. indicus
இருசொற் பெயரீடு
Caprimulgus indicus
(Latham, 1790)

காட்டுப் பக்கி(Indian Jungle Nightjar) இந்தியா இலங்கை பங்களாதேசம் போன்ற நாடுகளில் காணப்படுகிறது.

பெயர்கள்[தொகு]

  • தமிழில்  :காட்டுப் பக்கி
  • ஆங்கிலப்பெயர்  :Indian Jungle Nightjar
  • அறிவியல் பெயர்  :Caprimulgus indicus

[2]

உடலமைப்பு[தொகு]

29 செ.மீ. - தான் இருப்பது பார்ப்பவர்களுக்கு எளிதில் புலனாகாத படியான சாம்பல் பழுப்பு நிறங்கொண்ட உடலில் பழுப்புத் தோய்ந்த செம்மஞ்சள் மற்றும் கருப்புமான பல நிறக் கோடுகளும் புள்ளிகளும் பெற்றிருக்கும்.

உணவு[தொகு]

[3]

பறக்கும் பூச்சிகளை அப்படியும் இப்படியுமாக சுற்றிப் பறந்து லாகவமாகப் பிடிக்கும். மிகக் குறுகிய கால்களைக் கொண்ட இது எப்போதாவது தரையில் ஓடியும் பூச்சிகளைப் பிடிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில் பறக்கும் தருணம்

இனப்பெருக்கம்[தொகு]

பிப்ரவரி முதல் மே வரை கூழாங்கற்களுக்கிடையே அருவிக் கரையிலும் பாறைகளிடையேயான கற்குவியலிலும் 2 முட்டைகள் இடும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

சமவெளிப் பகுதிகளிலிருந்து மலைகளில் 2000மீ. ஊயரம் வரை தமிழகம் எங்கும் காணலாம். தேக்குமரக் காடுகள், மூங்கில் காடுகள் ஆகியவற்றில் பகலில் நிழலான இடங்களில் பதுங்கி இருக்கும். இது இரவு தொடங்கியதும் வெளிப்பட்டு இரைதேடத் தொடங்கும். காட்டுப் பாதையில் புழுதியில் எதிர்வரும் கார்களின் விளக்கு வெளிச்சத்தில் கண்கள் சிவப்பு மாணிக்கக்கல் போல் மின்ன அமர்ந்திருக்கக் காணலாம். இருட்டத் தொடங்கியவுடன் சுக். சுக். சுக்' எனவும் சுக்கோ சுக்கோ எனவும் தொடர்ந்து குரல் கொடுக்கும்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Caprimulgus indicus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2016.3. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2016). பார்த்த நாள் 26 November 2016.
  2. "Jungle_nightjar காட்டுப் பக்கி". பார்த்த நாள் 29 செப்டம்பர் 2017.
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:80
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுப்_பக்கி&oldid=2923560" இருந்து மீள்விக்கப்பட்டது