காட்டுணைட்டு
| காட்டுணைட்டு Cotunnite | |
|---|---|
காட்டுணைட்டு | |
| பொதுவானாவை | |
| வகை | ஆலைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | PbCl2 |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது முதல் வெண்மை, வெளிர் பச்சை, வெளிர் மஞ்சள் |
| படிக இயல்பு | நீளமான, தட்டையான பட்டகப் படிகங்களாக; கதிர்வீசும் திரட்சிகள்; சிறுமணி, மேலோடு அல்லது போலி உருவங்கள். |
| படிக அமைப்பு | நேர்ச்சாய்சதுரம் |
| பிளப்பு | சரிபிளவு {010} |
| முறிவு | துணை சங்குரு |
| விகுவுத் தன்மை | பிரிவுத்தன்மை கொண்டது |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| மிளிர்வு | விடாப்பிடியானது, பட்டு அல்லது முத்து |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் அல்லது ஒளிபுகாது |
| ஒப்படர்த்தி | 5.80 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
| ஒளிவிலகல் எண் | nα = 2.199 nβ = 2.217 nγ = 2.260 |
| இரட்டை ஒளிவிலகல் | δ = 0.061 |
| 2V கோணம் | அளக்கப்பட்டது: 67° |
| கரைதிறன் | நீரில் சிறிதளவு கரையும் |
| மேற்கோள்கள் | [1][2][3] |
காட்டுணைட்டு (Cotunnite) என்பது PbCl2என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். வெள்ளை நிறத்தில் இருக்கும் தூய சேர்மத்தைப் போலன்றி, காட்டுணைட்டுகள் வெள்ளை, மஞ்சள் அல்லது பச்சை நிறத்திலும் இருக்கும். கனிம மாதிரிகளின் அடர்த்தி 5.3–5.8 கிராம்/செ.மீ3 வரை இருக்கும். மோவின் அளவுகோலில் கடினத்தன்மை 1.5–2 ஆக அளவிடப்பட்டுள்ளது. படிக அமைப்பு நேர்ச்சாய்சதுர இருகூம்பகமாக புள்ளி குழு 2/மீ 2/மீ 2/மீ என்ற புள்ளி குழுவில் படிகமாகிறது. ஒவ்வொரு Pb க்கும் 9 என்ற ஒருங்கிணைப்பு எண் உள்ளது. காட்டுணைட்டு எரிமலைகளுக்கு அருகில் காணப்படுகிறது: இத்தாலியின் வெசுவியசு, சிலியின் தாராபாகா, உருசியாவின் டோல்பாசிக்கு, மற்றும் நேபாளத்தில் எவரெசுட்டு சிகரம் ஆகியவை இக்கனிமம் காணப்பட்ட சில இடங்களாகும்.[4]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் காட்டுணைட்டு கனிமத்தை Cot[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
முதன்முதலில் 1825 ஆம் ஆண்டு இத்தாலியின் காம்பானியாவில் உள்ள நேபிள்சு மாகாணத்தில் உள்ள வெசுவியசு மலையில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது.[2] இத்தாலிய மருத்துவரும் உடற்கூறியல் பேராசிரியருமான டொமினிகோ காட்டுக்னோ (காட்டுனியசு) (1736–1822) என்பவரின் பெயரால் காட்டுணைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1] முதன்முதலில் எரிமலை வாய் படிவுகளில் காட்டுணைட்டு கனிமம் அங்கீகரிக்கப்பட்டது. ஈய தாது படிவுகளில் இரண்டாம் நிலை மாற்றப் பொருளாகக் காணப்படுகிறது. ஈயத்தைக் கொண்ட தொல்பொருள் பொருட்களின் மாறுபாடாகவும் இது பதிவாகியுள்ளது.[1][6]
சிலியின் கராகோல்சில் உள்ள கலீனா, செருசைட்டு, ஆங்கிள்சைட்டு மற்றும் மேட்லோகைட்டு ஆகிய கனிமங்களுடன் இணைந்து காணப்படுகிறது. கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள டோல்பாச்சிக்கு எரிமலையில், அரிதானது முதல் அசாதாரணமான கனிமங்களான டெனோரைட்டு, போனோமரேவைட்டு, சோஃபைட்டு, பர்ன்சைட்டு, இல்லின்சுகைட்டு, இயார்ச்சுபோகைட்டு, குளோரோமணைட்டு, ஆலைட்டு, சில்வைட்டு மற்றும் பூர்வீக தங்கம் ஆகியவற்றுடன் இணைந்து காணப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Handbook of Mineralogy
- ↑ 2.0 2.1 Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Cotunnite
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Late-Hellenistic shipwreck, Mahdia, Tunisia, (Mindat locality)