காட்டுக் கதிர்க்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காட்டுக் கதிர்க்குருவி
Jungle prinia
Aravalli BiodivPark Gurgaon DSC9002 v1 (cropped).JPG
காட்டுக் கதிர்க்குருவி, ஆரவல்லி பல்லுயிர் பூங்காவில் (குர்கான்)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: பறவைகள்
வரிசை: பெசாரிபார்மிசு
குடும்பம்: சிசுடிகோலிடே
பேரினம்: பிரினினா
இனம்: பி. பிரினினா
இருசொற் பெயரீடு
பிரினினா சிலைவாடிகா
ஜெர்டான், 1840

காட்டுக் கதிர்க்குருவி (Jungle prinia) (பிரினினா சிலைவாடிகா) என்பது சிறிய குருவிகளுள் ஒன்று. இந்த பாடும் பறவை சிசுடிகோலிடே குடும்பத்தினைச் சார்ந்தது.

பரவலும் வாழிடமும்[தொகு]

இந்த கதிர்க்குருவி வங்காளதேசம்,[2] இந்தியா, தென்மேற்கு நேபாளம் மற்றும் இலங்கையில் காணப்படுகின்றது. பொதுவாக வறண்ட திறந்த புல்வெளி, திறந்த வனப்பகுதி, புதர் மற்றும் சில நேரங்களில் தோட்டங்களில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

இந்தியாவின் ஐதராபாத்தில்

கதிர்க்குருவிகள் சுமார் 15 cm (6 in) நீளமுடையன. இவை குறுகிய வட்டமான இறக்கைகள், நீளமான வால், வலுவான கால்கள் மற்றும் குறுகிய கருப்பு அலகு ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இனப்பெருக்க காலத்தில் முதிர்வடைந்த குருவியின் மேற்பகுதியில் சாம்பல்-பழுப்பு நிறத்தில் சிறகுகள் காணப்படும். ஆண் பெண் குருவிகள் ஒரே மாதிரி காணப்படும். ஆனால் இனப்பெருக்க காலத்தில் ஆணின் அலகு கருப்பு நிறத்தில் காணப்படும்.

குளிர்காலத்தில், மேல்பகுதிகள் பழுப்பு நிறமாகவும், கீழ்ப்பகுதிகள் பொலிவுடன் காணப்படும். கோடைக்காலத்தை விட குளிர்காலத்தில் வால் நீளமானது. இறகமைப்பில் வேறுபாடு காரணமாக நான்கு இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள தனித்துவமான உள்ளூர் இனம், பி. சி. வலிடா. ஆண்டு முழுவதும் இறகமைப்பில் மாற்றமில்லாமல் குறுகிய வாலுடன் காணப்படும்.

நடத்தை[தொகு]

பெரும்பாலான கதிர்க்குருவிகளைப் போலவே, இவையும் பூச்சி உண்ணிகள். இது ஒரு புதர் அல்லது உயரமான புல்லில் கூட்டை உருவாக்கி 3 முதல் 5 முட்டை வரை இடுகிறது. இதனுடைய ஒலி (பாடல்) பிட்-பிரிட்டி, பிட்-பிரிட்டி, பிட்-பிரிட்டி என்பதாகும்.

காட்டுக்கதிர் குருவியின் பாடல், தமிழ்நாடு, இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Prinia sylvatica". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22713595/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. https://avibase.bsc-eoc.org/species.jsp?avibaseid=7939B4369459F915