உள்ளடக்கத்துக்குச் செல்

காட்டலான் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காட்டலான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காட்டலான் (Catalan language) என்பது ஒரு உரோமானிய மொழி. இது அந்தோராவின் தேசிய மொழியும் ஆட்சி மொழியும் ஆகும். மேலும் பாலேயாரிக் தீவுகளிலும் காட்டலோனியாவிலும் இணை ஆட்சி மொழியாகவும் உள்ளது.

வரலாறு

[தொகு]

காட்டலான் மொழி வல்கர் இலத்தீனிலிருந்து பைரெனி மலைத்தொடர்களின் கிழக்கு பகுதியிலிருந்து பேசப்படத் துவங்கியது. இது கால்லோ-உரோமானியம், ஐபெரோ-உரோமானியம் மற்றும் கால்லோ-இத்தாலியம் போன்ற மொழிகளை ஒத்தது.

வகைப்படுத்துதல்

[தொகு]

மொழியின் நிலப்பரப்பு

[தொகு]

காட்டலான் பேசப்படும் இடங்கள்:

காட்டலான் பேசுவோரின் எண்ணிக்கை

[தொகு]

காட்டலான் ஆட்சி மொழியாக (அல்லது இணை ஆட்சி மொழியாக) உள்ள இடங்கள்

[தொகு]
இடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்
காட்டலோனியா (எசுப்பானியா) 6,949,195 6,043,088
பாலேயாரிக் தீவுகள் (எசுப்பானியா) 931,989 746,792
வாலென்சிய சமுதாயம் (வாலேன்சியன் என) (எசுப்பானியா) 3,648,443 2,547,661
அந்தோரா 75,407 61,975
வட காட்டலோனியா (பிரான்சு) 203,121 125,622
மொத்தம் 11,808,155 9,525,138

மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.

மற்ற இடங்கள்

[தொகு]
இடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்
அல்கேரோ நகரம் (சார்தீனியா, இத்தாலி) 20,000 17,625
ஆரகோனிலுள்ள சில இடங்கள் 47,250 45,000
கார்சே (மூர்சியா) சரியாக தெரியவில்லை சரியாக தெரியவில்லை
உலகின் மற்ற இடங்களில் சரியாக தெரியவில்லை 350,000
மொத்தம் 67,250 412,625

மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.

உலகளவில்

[தொகு]
இடம் புரிந்துகொள்ளக் கூடியவர்கள் பேசக்கூடியவர்கள்
காட்டலான் பேசப்படும் இடங்கள் (ஐரோப்பா) 11,875,405 9,587,763
உலகின் மற்ற இடங்களில் 362,000 350,000
மொத்தம் 12,237,405 9,937,763

மேற்கண்ட எண்கள் காட்டலான் மொழியைத் தாய்மொழியைக் கொண்டவர்களை மட்டுமின்றி அதை பேசக்கூடிய அனைவரையும் குறிக்கிறது.

குறிப்பு: மேற்கண்ட பட்டியல்களில், புரிந்துகொள்ளக் கூடியவர்களின் எண்ணிக்கை பேசக்கூடியவர்களின் எண்ணிக்கையையும் தன்னுள்ளடக்கியதே.

வட்டார மொழி வழக்குகள்

[தொகு]
  • கிழக்கு காட்டலான்
  • மேற்கு காட்டலான்

வாலேன்சியன்

[தொகு]

மொழியோலியும் எழுதுமுறையும்

[தொகு]

மையக் கட்டுரை: காட்டலான் எழுத்து

இலக்கணம்

[தொகு]

மையக் கட்டுரை: காட்டலான் இலக்கணம்

காட்டலான் பெயர்கள்

[தொகு]

காட்டலான் பெயரிடும் வழக்கங்கள் எசுபானியாவிலுள்ள பெயரிடும் வழக்கங்களைத் தழுவியே வரும். ஒரு நபருக்கு இரண்டு இறுதிப்பெயர்கள் வைக்கப்படுகிறது. அந்நபரின் தந்தையினுடைய பெயர் ஒன்று, தாயினுடைய பெயர் மற்றொன்று. அவ்விரு இறுதிப்பெயர்கலும் "i" (பொருள்: மற்றும்) என்ற எழுத்தால் பிரித்தெழுதப்படுகிறது. (எசுப்பானியத்தில் இதற்கு இணையான எழுத்து "y" ஆகும். ஆனால், அநேகநேரங்களில் இது எழுதப்படுவதில்லை; தவிர்க்கப்படுகிறது.)

  • (எ-டு) Antoni Gaudíயின் முழுப்பெயர் Antoni Gaudí i Cornet என அவர் பெற்றோரின் பெயர்களைத் தழுவியே வருகிறது. அவரது தந்தையின் பெயர்: Francesc "Gaudí" i Serra ; அவரது தாயாரின் பெயர்: Antònia "Cornet" i Bertran.

எடுத்துக்காட்டுகள்

[தொகு]

காட்டலோனியாவில் பொதுவாக பேசப்படும் சில வார்த்தைகள் (மத்திய வட்டார மொழி வழக்கின்படியான உச்சரிப்பு - பார்செலோனிய (Barcelona) மற்றும் புறநகரம்).

  • காட்டலான்: Català [kətəˈla]
  • வணக்கம்: hola [ˈɔlə]
  • சென்றுவருகிறேன்: adéu [əˈðew]; adéu siau [əˈðew siˈaw]
  • தயவு செய்து: si us plau [sisˈplaw]
  • நன்றி: gràcies [ˈɡɾasiəs]; mercès [məɾˈsɛs]
  • மன்னிக்கவும்: perdó [pəɾˈðo], em sap greu [əmsabˈɡɾew]
  • இது: aquest [əˈkɛt] (masc.); aquesta [əˈkɛstə] (fem.)
  • எவ்வளவு?: quant val? [ˈkwamˈbal]; quant és? [ˈkwanˈtes]
  • ஆம்: sí [ˈsi]
  • இல்லை: no [ˈno]
  • எனக்கு புரியவில்லை: no ho entenc [ˈnow ənˈteŋ]
  • கழிவறை எங்கு உள்ளது?: on és el bany? [ˈoˈnezəlˈβaɲ]; on és el lavabo? [ˈoˈnezəlˈləˈβaβu]
  • பொதுவாக மது அருந்தும் பொழுது: salut! [səˈlut];
  • நீங்கள் காட்டலான் பேசுவீர்களா?: Parles català? [ˈpaɾləs kətəˈla]

சில உபயோகமான வாலேன்சிய வாக்கியங்கள். (ஸ்டாண்டர்டு வாலேன்சியன் உச்சரிப்பு.)

  • வாலேன்சியன்: valencià [valensiˈa]
  • வணக்கம்: hola [ˈɔla]
  • சென்றுவருகிறேன்: adéu [aˈðew]
  • தயவு செய்து: per favor [peɾ faˈvoɾ]
  • நன்றி: gràcies [ˈɡɾasies]
  • மன்னிக்கவும்: perdó [peɾˈðo]; ; ho sent [uˈsent] or ho lamente [ˈu laˈmente]
  • எவ்வளவு?: quant val? [ˈkwanˈval]; quant és? [ˈkwanˈtes]
  • ஆம்: sí [si]
  • இல்லை: no [no]
  • எனக்கு புரியவில்லை: no ho entenc [ˈnowanˈteŋ]
  • கழிவறை எங்கு உள்ளது?: on és el bany? [ˈon ezˈ elˈβaɲ]
  • பொதுவாக மது அருந்தும் பொழுது: Jesús [dʑeˈzus]; salut [saˈlut]
  • நீங்கள் வாலேன்சியன் பேசுவீர்களா?: parles valencià? [ˈpaɾlez valensiˈa]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டலான்_மொழி&oldid=3896964" இலிருந்து மீள்விக்கப்பட்டது