காட்சு, ஈரான்

ஆள்கூறுகள்: 35°43′17″N 51°06′32″E / 35.72139°N 51.10889°E / 35.72139; 51.10889
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சு
قدس
நகரம்
காட்சு is located in ஈரான்
காட்சு
காட்சு
ஆள்கூறுகள்: 35°43′17″N 51°06′32″E / 35.72139°N 51.10889°E / 35.72139; 51.10889
Country ஈரான்
ProvinceTehran
Countyகாட்சு கவுன்டி
நேர வலயம்IRST (ஒசநே+3:30)
 • கோடை (பசேநே)IRDT (ஒசநே+4:30)

காட்சு (Qods ; பாரசீக மொழி: قدس‎, பிற பெயர்கள் : சாரியி காட்சு = காட்சு நகரம் (Shahr-e Qods) ; முந்தையப் பெயர்கள் : Karaj, Qal‘eh Hasan, Qal‘eh-ye Ḩasan Khān) என்று அழைக்கப்படும் நகரமானது, கோட்சு கவுண்டியில் இருக்கும் நகரம் ஆகும். மேலும், அந்த கவுன்டியின் தலைநகரமாகவும் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கள் தொகை 229,354 நபர்கள் ஆகும். இந்நபர்கள் 60,331 குடும்பங்களில் வாழ்ந்தனர். 1989 ஆம் ஆண்டில் கோட்ஸ் அதிகாரப்பூர்வமாக நகராட்சியாக மாறியது. பாரசீக வளைகுடா புரோ லீக் (Persian Gulf Pro League) அணியான பேக்கன், இங்குள்ள சாகரே கோட்சு மைதானத்தினால் விளையாடுகிறது.

கல்வி[தொகு]

இந்த நகரத்தில் மூன்று பல்கலைக் கழகங்கள் உள்ளன: இசுலாமிய ஆசாத் பல்கலைக்கழகம், சாகர்-ஈ கோட்சின் கிளை, பயன்பாட்டு அறிவியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், பயாம்-இ-நூர் பல்கலைக்கழகம் ஆகிய புகழ் பெற்ற கல்வியகங்கள் உள்ளன.[1]

மக்கள் தொகை[தொகு]

2016 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, ஒட்டுமொத்த ஈரான் நகரங்களின் மக்கள் தொகை அடர்வில் இந்த நகரம் இருபத்தியெழாவது இடத்தினைப் பெறுகிறது.[2] 2006 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தில் 60,331 குடும்பங்கள் இருந்தன. அந்த குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 229,354 ஆக, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இருந்தது. பொதுவாக ஈரான் நாட்டில் நகரங்களில் மக்கள் குடியேற்றம், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, வேகமாக அதிகரித்து வருகின்றது என ஐக்கிய நாட்டு ஆய்வுகள் கூறுகின்றன.[3][4] இந்த நாட்டில் ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படுகின்றது. இந்த நகரத்தில் பல்வேறு மொழியிலானப் பாரம்பரிய குடும்பங்கள் வாழ்ந்தாலும், பெரும்பான்மையான ஈரானியக் குடும்பங்களில் பிறந்தவர்கள், பல்வேறு எந்த வகையான சமூக சீரமைப்புடன் தொடர்புடையவர்களை விடவும், அதிக முக்கியத்துவத்தை, தமது குடும்ப வழித்தோன்றல்களுக்குக் கொடுக்கின்றனர். இதனால் அவர்கள் அருகருகே வாழ்ந்தாலும், தொலைவில் வாழ்ந்தாலும், சிறிய, பெரிய குடும்பங்களுக்கு இடையை உறவுப் பிணைப்புகள் உறுதியுடன் இருக்கின்றன. மேலும், அவரவர் நடத்தும் தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் பின்னிப்பிணைந்து சமூகத்தில் நன்மதிப்பைப் பெறுகின்றனர்.[5] 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தொகை கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 309,605 நபர்கள் இருந்தனர். இதற்கு முன் எடுக்கப்பட்ட அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 2011 ஆம் ஆண்டு, 283,517 நபர்கள் இருந்தார்கள். தற்பொழுதுள்ள மக்கள் தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது, இந்நகரத்தின் மக்கள்தொகை அடர்வு +9.20% அதிகரித்துள்ளது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சு,_ஈரான்&oldid=2878931" இருந்து மீள்விக்கப்பட்டது