உள்ளடக்கத்துக்குச் செல்

காட்சிசார்த் தொகுப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்சிசார்த் தொகுப்பி
உருவாக்குனர்விக்கிமீடியா நிறுவனம் மற்றும்விக்கியா.இன்க்
மொழியாவாக்கிறிட்டு, Node.js, பி.எச்.பி
இயக்கு முறைமைCross-platform
தளம்மீடியாவிக்கி extension
மென்பொருள் வகைமைவிக்கி
உரிமம்MIT உரிமம்[1]
இணையத்தளம்www.mediawiki.org/wiki/VisualEditor

காட்சிசார்த் தொகுப்பி ( VisualEditor (VE) என்பது மீடியாவிக்கிக்கான உயர்தர எழிவரித் திருத்தி ஆகும். "நீங்கள் பார்ப்பது தான் உங்களுக்குக் கிடைக்கப் போகும் காட்சியாகும்" எனும் கொள்கையின் அடிப்படையில் பக்கங்களைத் திருத்துவதற்கான நேரடி காட்சி வழியை வழங்குகிறது. இந்த கோப்பினை விக்கிமீடியா அறக்கட்டளை விக்கியாவுடன் இணைந்து உருவாக்கியது. [2] ஜூலை 2013 இல், இது பல பெரிய விக்கிப்பீடியா திட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. [3] [4]

இதனை விக்கிமீடியா அறக்கட்டளை இன்றுவரை செய்ல்படுத்தப்பட்ட திட்டங்களிலேயே மிகவும் சவாலான தொழில்நுட்ப திட்டமாக இருந்தது எனக் கருதியது, அதே நேரத்தில் தி எகனாமிஸ்ட் இதை விக்கிபீடியாவின் மிக முக்கியமான மாற்றம் என்று அழைத்தது. [5] செப்டம்பர் 2013 இல், ஆங்கில விக்கிபீடியாவின் காட்சிசார்த் தொகுப்பி பயனர் புகார்களைத் தொடர்ந்து விருப்பத்திற்குட்பட்ட தேர்வாக இதனை ஆக்கியது.[6][7] ஆனால் பல மேம்பாடுகளுக்குப் பின்னர் அக்டோபர் 2015 இல் இயல்புநிலையாக (புதிய பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டும்) ஆக்கப்பட்டது.[8] விக்கிமீடியா அறக்கட்டளையின் 2015 ஆம் ஆண்டு ஆய்வில், காட்சிசார்த் தொகுப்பி புதிய பயனர்களுக்கு எதிர்பார்க்கப்பட்ட நன்மைகளை வழங்கத் தவறிவிட்டது என்று கண்டறியப்பட்டது. [9]

வரவேற்பு[தொகு]

எகனாமிஸ்ட் இதனை "விக்கிப்பீடியாவின் குறுகிய வரலாற்றில் மிக குறிப்பிடத்தக்க மாற்றம்." எனக் குறிப்பிட்டது [5]

எதிர்ப்பு[தொகு]

தெ டெய்லி டாட், இந்த புதிய மாற்றம் ஏற்கனவே உள்ள பயனர்களை குழப்பமடையச் செய்யலாம் எனக் கூறியது.

ஆதரவு[தொகு]

சாஃப்ட்பீடியா "விக்கிபீடியாவின் காட்சி சார்த் தொகுப்பியின் மூலமாக சிறப்பான தொகுப்புகளை செய்ய முடியும் , ஆண்டின் சிறந்த இற்றை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. [10] இந்த வசதி "விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குவதற்கும் திருத்துவதற்கும் அனைவருக்கும் ஓர் எளிமையான வசதியினை அளிப்பது எனும் இலக்கினை அடைய இது வழிவகுக்கும் என தெரிவித்தது. [11]

சான்றுகள்[தொகு]

 1. LICENSE.txt பரணிடப்பட்டது 2018-01-12 at the வந்தவழி இயந்திரம், VisualEditor source code repository, phabricator.wikimedia.org/diffusion/
 2. Andrew Webster (2012-06-22). "Wikimedia releases updated prototype for simplified visual editor". The Verge. Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2013-07-27.
 3. "Wikipedia:VisualEditor". Wikipedia. பார்க்கப்பட்ட நாள் 15 September 2013.
 4. Emil Protalinski (2013-07-02). "Wikimedia rolls out WYSIWYG visual editor for logged-in users accessing Wikipedia articles in English". The Next Web. Archived from the original on 2013-07-05. பார்க்கப்பட்ட நாள் 2013-07-06.
 5. 5.0 5.1 L.M. (2011-12-13). "Changes at Wikipedia: Seeing things". The Economist. Archived from the original on 2013-06-09. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.
 6. Andrew Orlowski (2013-09-25). "Revolting peasants force Wikipedia to cut'n'paste Visual Editor into the bin". The Register இம் மூலத்தில் இருந்து 2013-10-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131001154730/http://www.theregister.co.uk/2013/09/25/wikipedia_peasants_revolt/. 
 7. Tim Sampson (2013-09-24). "Wikipedia faces revolt over VisualEditor". The Daily Dot இம் மூலத்தில் இருந்து 2013-09-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130925165757/http://www.dailydot.com/news/wikipedia-visualeditor-kww-patch/. 
 8. Forrester, James (2015-09-01). "Gradual availability of VisualEditor for new users is now complete". Wikipedia, the free encyclopedia.  
 9. "VisualEditor's effect on newly registered editors/May 2015 study". Wikimedia.org. Wikimedia Foundation. பார்க்கப்பட்ட நாள் 2 August 2016.
 10. Lucian Parfeni (2013-07-02). "Wikipedia's New VisualEditor Is the Best Update in Years and You Can Make It Better". Softpedia. Archived from the original on 2013-10-03. பார்க்கப்பட்ட நாள் 2013-07-30.
 11. Simon Sharwood (2013-06-07). "Wikimedia edges closer to banishing Wikitext". The Register. Archived from the original on 2013-07-28. பார்க்கப்பட்ட நாள் 2013-07-28.

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்சிசார்த்_தொகுப்பி&oldid=3088144" இலிருந்து மீள்விக்கப்பட்டது