காடுவெட்டி குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காடுவெட்டி குரு (எ) செ. குருநாதன்
மாநில வன்னியர் சங்க தலைவர்
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2001-2006
முன்னவர் ராஜேந்திரன்
பின்வந்தவர் எஸ். எஸ். சிவசங்கர்
தொகுதி ஆண்டிமடம்
பதவியில்
2011-2016
முன்னவர் கே. இராசேந்திரன்
பின்வந்தவர் இராமஜெயலிங்கம்
தொகுதி ஜெயங்கொண்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு (1961-02-01)1 பெப்ரவரி 1961
காடுவெட்டி, ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு
இறப்பு மே 25, 2018(2018-05-25) (அகவை 57)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) லதா
பிள்ளைகள் விருதாம்பிகை,
கனல் அரசன்
பெற்றோர் செயராமன் படையாட்சி,
கல்யாணி
இருப்பிடம் ஜெயங்கொண்டம்
சமயம் இந்து

காடுவெட்டி குரு (Kaduvetti Guru) என்றழைக்கப்படும் செ. குரு என்கிற செ. குருநாதன் (ஆங்கில மொழி: J. Gurunathan) தமிழக அரசியல்வாதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணித் தலைவராகவும், மாநில வன்னியர் சங்கத் தலைவராகவும் பணியாற்றினார்.

இளமைக்காலம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில், பிப்ரவரி 01, 1961 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை செயராமன் படையாட்சி மற்றும் தாயார் கல்யாணி அம்மாள் ஆகியோர் ஆவர். இவரின் தந்தையார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகியாவார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாசின் நெருங்கிய உறவினரும் ஆவார். இவரது தந்தையார், குரு சிறியவயதாக இருக்கும் போது எதிரியால் கொல்லப்படுகிறார். பின்னர் குருவின் குடும்பம் தன் தாயாரின் சொந்த ஊரான கும்பகோணத்திற்கு செல்கின்றனர். இவர் பள்ளி படிப்பை கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (எம். ஏ வரலாறு) பெற்றவர்.[1]

அரசியல் வாழ்க்கை

இவர் 1986இல் காடுவெட்டியில் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்தார், தங்கள் பகுதியில் வன்னியர்களுக்கு தி.மு.க.வில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதால் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் வன்னியர் சங்கத்தை விரிவுபடுத்துவதற்காக எம். கே. ராஜேந்திரன், வீரபோக. மதியழகன் ஆகியோர், பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் தலைமையில் குருவை வன்னியர் சங்கத்தில் இணைத்தனர். படிப்படியாக செயற்குழு உறுப்பினர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டச் செயலாளர் பதவி வகித்து பாமகவில் வளர்ந்தார். பின்பு வன்னியர் சங்கத் தலைவராகப் பதவியேற்றார். இவர் அரியலூர் மாவட்டத்தில் மாற்று சமுதாய சமநிலையை கருத்தில் கொண்டு ஏழு அம்பேத்கர் சிலைகளை திறந்து வைத்தார். தன் சொந்த மாவட்டமான அரியலூரில் இரட்டைக்குவளை முறையை ஒழித்தவர். வன்னிய குல சத்திரிய இளைஞர்களால் மாவீரன் குரு என்றழைக்கப்பட்டார். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் எளிமையாக இருந்துள்ளார். குரு தன் சமுதாயத்தின் வளர்ச்சிக்காக வாழ்வின் இறுதிநாள் வரைப் போராடியுள்ளார்.[2][3] இவர் இரண்டுமுறை குண்டர் சட்டம் பாய்ந்து சிறை சென்றுள்ளார்.

தேர்தல்கள்

2001ல் ஆண்டிமடம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும் 2011ல் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[4].

மறைவு

நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 2018 மே 25 அன்று இவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமானதால், சிகிச்சைப் பலனின்றி அன்று இரவு காலமானார். பின்னர் இவரது உடல் தன் சொந்த ஊரான காடுவெட்டியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[5]

மேற்கோள்கள்

  1. "​யார் இந்த காடுவெட்டி குரு?" இம் மூலத்தில் இருந்து 2018-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180703023545/http://ns7.tv/ta/%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81. நியூஸ்7 (மே 26, 2018)
  2. "கடைசி வரை போராடிய காடுவெட்டி குரு!". https://minnambalam.com/k/2018/05/27/83. 
  3. "​காடுவெட்டி குரு மரணம்" இம் மூலத்தில் இருந்து 2018-05-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180527222707/http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/26/5/2018/kaduvatti-guru-death-k-madhavan-mourning.  நியூஸ்7 (மே 26, 2018)
  4. "2001 தமிழக தேர்தல் முடிவுகள்" இம் மூலத்தில் இருந்து 2010-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101006173934/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_2001/Stat_Rep_TN_2001.pdf. 
  5. "காடுவெட்டி குரு காலமானார்". https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kaduvetti-guru-passed-away. [தொடர்பிழந்த இணைப்பு] நக்கீரன் (மே 25, 2018)
"https://ta.wikipedia.org/w/index.php?title=காடுவெட்டி_குரு&oldid=3549048" இருந்து மீள்விக்கப்பட்டது